Middle class Madhavan : கருத்துக்கள் ( 1 )
Middle class Madhavan
Advertisement
Advertisement
பிப்ரவரி
12
2018
பொது ஊழல் துணைவேந்தருக்கு 5 நாள் போலீஸ் காவல்
திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று பாரதியார் பல்கலை வெப்சைட்டில் ஆய்வு செய்து சொன்னது அனைத்தும் உண்மை. தகுதி வாய்ந்த ஒருவர் கூட முதுகலை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் நியமிக்கப்படவில்லை. பணம் கொடுத்தவர்களை மட்டும் கண்ணை மூடிக்கொண்டு நியமித்துள்ளார் துணை வேந்தர் கணபதி. இன்னும் சிலரது பெயர்கள் வெப்சைட்டில் கூட இடம்பெறவில்லை. உதாரணத்திற்கு பி.ஹச் டி முடிக்காத திருமதி கவிதா எந்த வகையில் ஆராய்ச்சி துறைக்கு சிறந்தவர் என்பது ஆச்சர்யம். பெரும்பாலான பேராசிரியர்கள் பி ஹச் டி யை பகுதி நேர முறையில் முடித்தவர்கள். இவர்களில் ஒருவர் கூட ஒரு சிறந்த ஆராய்ச்சி கட்டுரையை இன்டர்நேஷனல் இதழில் தனது பி ஹச் டி யில் பிரசுரிக்க முடியாதபோது இவர்கள் எப்படி ஆய்வு மாணவர்களுக்கு வழி காட்டியாக செயல்பட முடியும். தகுதி வாய்ந்த, பலர் இருக்கையில் இவர்களின் நியமனம் அடுத்த 30 வருடங்களுக்கு எந்த ஒரு பலனும், நாட்டு நலனும் விளைந்திடப்போவதில்லை. பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கும்போது இது போன்ற செயல்கள் நாட்டை, எதிர்கால சமுதாயத்தை அழிவுப்பாதைக்கு எடுத்துச்செல்லும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மேலும் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த ஆசிரியர்களும், வழிகாட்டிகளும் கிடைக்க மாட்டார்கள் இதன்மூலம் சிறந்த ஆய்வாளர்களும் வரப்போவதில்லை. நம் நாட்டின் அறிவியல் ஆய்வியல் வளர்ச்சி என்பது அறவே ஒழிந்துவிடும். பின் வாசல் வழியாக வந்த அணைத்து ஆசிரியர்களும் அவர்களது குழந்தைகளை வெளி நாட்டிற்கு அனுப்பி சிறப்பாக படிக்க வைக்க முடியும். ஏழை நடுத்தர மக்களால் சிறப்பான கல்வியை எங்கு சென்று கற்க முடியும்? இதுபோன்ற கலைகளை வேரோடு பிடுங்கி தீயிட்டு அழிக்கும் வரை வளர்ச்சி என்பது உயர்கல்வி, வளர்ச்சி என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வெறும் கனவே....   10:51:36 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X