அன்பு : கருத்துக்கள் ( 2688 )
அன்பு
Advertisement
Advertisement
அக்டோபர்
13
2018
கோர்ட் முதல்வர் மீது வழக்கு சி.பி.ஐ.,க்கு உத்தரவு
பழனிக்கு இனியும் பிஜேபி காவடி தூக்கினால், அதன் விளைவை இந்திய அளவில் சந்திக்க நேரிடும்.   02:12:23 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
12
2018
அரசியல் முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் ஸ்டாலின்
சிபிஐ விசாரணைக்கு உத்தரவு இட்டபிறகும், பிஜேபி பழனிக்கு முட்டு கொடுத்து கொண்டு இருப்பது, இந்திய அளவில், பிஜேபி கட்சிக்கு கெட்டபெயரை ஏற்படுத்தும். ராகுல் இந்த பிரச்னையை எடுத்து பேசினால், பிஜேபி க்கு தான் அவமானம்.   22:25:39 IST
Rate this:
6 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
11
2018
அரசியல் கை ஏந்தல்! காம்ரேட் பாணியில் களமிறங்கும் காங்.,
அரசியல் கட்சி மக்களிடம் தான் வசூலிக்க வேண்டும். கார்பரேட்களிடம் வசூலித்தால், பொதுமக்களின் ஒட்டு மொத்த பணம் கொள்ளை போக போகிறது என்று தான் அர்த்தம்.   01:11:26 IST
Rate this:
62 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
11
2018
சம்பவம் சபரிமலை போராட்டம் அமைச்சர் வாகனங்கள் முற்றுகை
சட்டம் அனைவருக்கும் சமமே. மசூதிகளில் ஆண் பெண் வேறுபாடு இருந்தால், அதையும் களைய வேண்டும். அதற்கான உத்தரவையும் சுப்ரிம் கோர்ட் கொடுக்க வேண்டும். இந்தியாவில் பெண் ஆணிற்கு நிகராக போற்றப்படுவர் என்றால், அனைத்து மதங்களுக்கும் ஒரே தீர்ப்பு தான் கொடுக்க வேண்டும்.   01:06:55 IST
Rate this:
6 members
0 members
20 members
Share this Comment

அக்டோபர்
11
2018
அரசியல் 120 கோடி பேருக்கு டிஜிட்டல் அடையாளம்
டிஜிட்டல் இந்தியாவால் ஆதார் கிடைத்து மக்கள் மிகவும் செழிப்படைந்துள்ளார்கள். இனி பஸ்ஸில் ஏறவேண்டும் என்றாலும், ஆதார் கார்டு காட்ட வேண்டும். சினிமா பார்க்க வேண்டும் என்றாலும் ஆதார் காட்ட வேண்டும். பெட்ரோல் போட வேண்டும் என்றாலும் ஆதார் வேண்டும். இல்லையெனில் தீவிரவாதிகள் பெட்ரோல் போட்டுகொண்டுவிடுவார்கள். டீசல், பெட்ரோல், காஸ் சிலிண்டர் போன்றவை மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. ரூபாயின் மதிப்பு எழுபத்தைந்தாகி பொருள்களின் விலைகள் சரிந்துள்ளன. நாட்டின் உற்பத்தி உயர்ந்துள்ளது. இந்தியர்களின் வங்கிக்கணக்கில் மத்திய அரசு போட்ட பதினைந்து லட்ச ரூபாயை செலவு பண்ண முடியாமல் மக்கள் திணறுகிறார்கள். வருடத்திற்கு ரெண்டு கோடி பேருக்கு மேல் வேலை வாய்ப்புகள் புதிதாக வருவதால், இளைஞர்கள் வேலைவாய்ப்பை உதறி தள்ளுகிறார்கள். முதலாளிகள் தொழிலாளர்கள் கிடைக்காமல் சம்பளத்தை உயர்த்தி கொண்டே போகிறார்கள். இந்தியா ஒளிர்கிறது....அடுத்து ஜெயித்து வரும்போது, ஆடு, மாடு, கழுதையுக்கும் ஆதார் கார்டு மத்திய அரசு கொடுக்கும்.   01:01:10 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
11
2018
பொது ரபேல் விமானம் வாங்கும் முடிவு எடுத்தது எப்படி
விளக்கம் கேட்டு இருப்பது உச்ச நீதிமன்றம். எடுபிடி தேர்தல் கமிஷன் அல்ல என்பதை நினைவில் கொண்டு, மத்திய அரசு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்.   01:47:24 IST
Rate this:
8 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
10
2018
அரசியல் பழனிசாமி உறுப்பினரே அல்ல தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., தகவல்
தேர்தல் கமிஷன் மோடியின் தலைமையில் இயங்குவதால், மோடிக்கு விளக்கம் கொடுத்தால் போதும் என்று அதிமுகவினர் எண்ணிவிட்டார்கள்.   01:45:37 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
11
2018
அரசியல் ஒற்றை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கீடு திமுக நிபந்தனைக்கு காங்., சம்மதம்?
ஐந்து தொகுதிக்கு மேல் காங்கிரஸ் கட்சிக்கு கொடுப்பது, தினகரன் மற்றும் பழனியின் ஒன்றுபட்ட அதிமுகவிற்கு வெற்றியை கொடுப்பது போன்றது. எப்படியும் தினகரன் அமுமுக மற்றும் பிஜேபி அதிமுக (பழனி மற்றும் பன்னீர்) லோக்சபா தேர்தலுக்கு முன் ஒன்றாக இணைந்துவிடுவார்கள். தினகரன் மற்றும் பழனி இணைய மறுத்தால், ஸ்டாலினுக்கு கொண்டாட்டம் தான். அதனால் மோடி தினகரனை அதிமுகவில் இணைய சொல்வார். அதற்கு பிரதிபலனாக தினகரனின் ஒரு எடுபிடி முதல்வர் அல்லது துணை முதல்வர் ஆவார். பன்னீர் கழட்டிவிடப்படுவார். இணையாவிடில், வருமானவரி துறை வரும். சிறை செல்ல நேரிடும். சசி ஷாப்பிங் செய்ய மாலுக்கு செல்ல முடியாது.   01:43:20 IST
Rate this:
39 members
3 members
10 members
Share this Comment

அக்டோபர்
10
2018
பொது பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்த திட்டம்
திரை துறையில் வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள். ஆனால் துணிச்சலாக சொன்னது ஸ்ரீரெட்டி மற்றும் சின்மயி போன்ற வெகு சிலரே. இன்று நாம் பெரிதாக எண்ணி கொண்டிருக்கும் பல பெரிய நடிகைகள் உண்மையில் வாய் திறந்து சொல்ல இன்னமும் பயப்படுகிறார்கள். சொன்னால், ஸ்ரீ ரெட்டி போன்று இழிவுபடுத்த படுவார்கள் என்ற பயம் தான் காரணம். உரிய விசாரணை செய்யாமல், குற்றம் சொல்பவர்களை தான் இந்த சமூகம் சாடுகிறது. நிரூபிக்க முடியாத நிலையில் தான் இன்று சின்மயியும் உள்ளார். இது பெண்ணின் மானம் சம்பந்த பட்ட பிரச்சனை. உடனே சொல்வதற்கு முடியாது. ஏளனப்படுவதை யார் விரும்புவார்கள்? உடனே சொன்னால், சரியான தீர்ப்பு கிடைக்குமா? நிர்மலா தேவி விவகாரத்தில், ஆதாரம் வைத்திருந்தும் கூட, உடனே எதிர்ப்பு தெரிவித்த கல்லூரி பெண்கள், அதை வெளிச்சத்திற்கு கொண்டு வர நாலு மாதங்கள் எடுத்தார்கள். எதிர்பார்க்காத நிலையில் ஏற்படும் துன்புறுத்தலுக்கு பெண்களிடம் எந்த ஆதாரமும் இருக்காது. எப்போதும் பெண்கள் ஆடியோ மற்றும் கேமராவுடன் சுத்த முடியாது. உடனே ஆதாரத்தை எடுத்து நீட்ட. பல பெண்கள் ஒரு நபரை குற்றம் சாட்டும்போது, இந்த சமூகம் தான் உஷார் ஆக வேண்டும். பெண்களை ஏளனப்படுத்துவதை விட்டு, உரிய நபரை விசாரணை செய்வது நல்லது.   00:34:55 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
10
2018
சம்பவம் தித்லி அதிதீவிரம் எங்கு பாதிப்பு!
அப்ப திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூரில் தேர்தலை நடத்தலாம் அல்லவா? இடைத்தேர்தலுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். ஓட்டிற்கு ஐந்தாயிரம் ரூபாய் கிடைக்கும் என்று ஆவலாக இருந்தவர்கள் வாயில் எடப்பாடி மண்ணை அள்ளி போட்டுட்டார்.   00:20:18 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X