Vijay D Ratnam : கருத்துக்கள் ( 1485 )
Vijay D Ratnam
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
13
2018
கோர்ட் பலாத்கார வழக்கில் 2 பாதிரியார்கள் சரண்
இதெல்லாம் எல்லா இடத்துலயும் நடக்குறது தான். இங்க விஷயம் வெளியே வந்திடுச்சு அவ்ளோதான். சரி, இப்ப என்ன தூக்கிலா போடப்போறாய்ங்க. இல்லை கல்லால் அடிச்சி கொல்லப் போறாய்ங்களா, வேற இடத்துக்கு போய் வேற பெண்ணை இதே வேலைய பண்ணப்போறாய்ங்க.   21:16:33 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
பொது நானே போராட்டத்தில் இறங்கி இருப்பேன் ரஜினி காட்டம்
ஆதலால் இனி வரவிருக்கும் தேர்தலில் திமுகவினரின் வாக்குகள் பெரும்பகுதி கருணாநிதியின் ஆதரவாளர் ரஜினியின் கட்சிக்கு திரும்பலாமாம். 1996 சட்டமன்ற தேர்தலில் திமுக தமாகா கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் தான். ஆனால் ஜெயலலிதா எந்தக்காலத்திலும் ரஜினியையும், கமலையும் அண்டவிடவே இல்லை.   21:11:43 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
அரசியல் நாளை செயற்குழு கூட்டம் தி.மு.க.,வில், திக்... திக்...
திமுகவில் திக் திக் திக். அதெல்லாம் ஒன்னும் இல்லை. எல்லாம் அழகாக பிளான் போட்டு நடந்துக்கொண்டு இருக்கிறது. ஸ்டாலின் லண்டன் சென்று விட்டு வருவாராம். கருணாநிதி உடல் சிறு பின்னடைவு என்று மருத்துவமனை செல்லல். தொண்டர்கள் மருத்துவமனை முன் ஒப்பாரி வைத்தல், சினிமா நடிகர்கள் மருத்துவமனை விசிட் அடித்தல், ஜனாதிபதியிலிருந்து லோக்கல் கவுன்சிலர் வரை கூவி கூவி அழைத்து வந்து ஷோ காட்டுதல். பிறகு கருணாநிதி சீரியஸ், அண்ணா சமாதியில் இடம் கேட்பு, பின் கருணாநிதி மறைவு, அதன் பிறகு சூப்பரான பேக் கிரவுண்ட் மியூசிக்கோட இறுதிப்பயணம் டெலிகாஸ்ட், பிறகு ஸ்டாலின் தலைவராக போகிறார் என்று செய்தித்தாள்கள், டிவி சேனல்கள், வாட்சப், டிவிட்டர், ஃபேஸ்புக், டீக்கடை, முடித்திருத்தகம் வரை எல்லாவற்றிலும் செய்தியை பரப்புதல் என்று அழகா திட்டம்போட்டு எந்த பிசுறும் இல்லாமல் நடக்கிறது. அழகிரி சமாச்சாரம் கூட இவர்கள் நாடகத்தில் ஒரு காட்சியாக இருக்காலாம். வேறு யாராவது ஒரு போர்க்கொடி தூக்கி 1993 ல் வைகோ மாதிரி அவருக்கு பின் சில ஆயிரம்பேர் திரண்டால் வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாகிவிடும் என்பதாக கூட இருக்கலாம். எல்லாம் டிராமா. உடன்பிறப்புக்கள் விழித்துக்கொள்ளவேண்டும். மன்னார்குடியானுங்கள அதிமுக கழட்டிவிட்டது மாதிரி அதைவிட பெரிய திருக்குவலையானுங்கள திமுக தொண்டர்கள் கழட்டிவிட்டால் நாட்டுக்கு நல்லது. தலைவர் பதவியையும், பொருளாளர் பதவியையும் கட்டுமரக்கம்பெனியிடமிருந்து பறித்து விடவேண்டும். தகுதியான திறமையான, படித்த ஒருவர் கையில் பவரை கொடுங்கள்.   15:02:44 IST
Rate this:
5 members
0 members
19 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் தி.மு.க., அவசர செயற்குழுவில் என்ன நடக்கும்?
ஆண்டிமுத்து ராசா, தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், கட்சிக்கு தலித்கள் மத்தியில் கூடுதல் அபிப்பிராயம் ஏற்படும் என்பதால் ஏன் அவரை திமுகவின் தலைவராக்க கூடாது.   14:16:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
பொது பறவை சுழற்சி யோகாவில் 100 பல்ட்டி 10 வயதில் உலக சாதனையை எட்டிய சிறுமி
உங்கள் வயது பிரச்சினையில்லை, உங்கள் உடல் எடை, தோற்றம் பிரச்சினையில்லை, தொடர்ந்து ஒரு முப்பது நாட்கள் உங்களால் முடிந்த அளவுக்கு கஷ்டப்படாமல் ஜஸ்ட் முப்பது நிமிடங்கள் யோகா பயிற்சி செய்து பாருங்கள். அப்போதுதான் தெரியும் மனதையும் உடலையும் அமைதிப்படுத்தும் இந்த அற்புதத்தை இத்தனை வருடங்கள் அனுபவிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படுவீர்கள். யோகாவின் மீது ஆர்வம் ஏற்படும். புகை, மது பழக்கம் உள்ளவர்களுக்கு அந்த பழக்கம் குறைந்து ஒருகட்டத்தில் அதை தொடவே மாட்டிர்கள். உடலில் சக்தி, இளமை மேலோங்கும், மனதில் தைரியம் அதிகரிக்கும். குறிப்பாக செக்சில் ஜமாய்க்கலாம் உங்கள் பாட்னரிடம் கேட்டுப் பாருங்கள். தோற்றம் அழகாக மாற துவங்கும். தலைவலி, மூட்டுவலி, முதுகுவலி, கழுத்துவலி இருந்தால் அது இருந்த இடம் தெரியாமல் போகும். ஒரு வருடம் செய்துப்பாருங்கள் பத்து வயது குறைவான தோற்றத்தை பெறுவீர்கள். உங்கள் குழந்தைகளை தினம் ஒரு பதினைந்து நிமிடங்கள் யோகா செய்வதை வழக்கம் ஆக்குங்கள். படிப்பில் ஆர்வம் ஏற்பட்டு ஞாபக சக்தி அதிகரித்து கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.   15:52:58 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
சம்பவம் ஐஎஸ்.,உடன் தொடர்பு 2 பேர் கைது
விசாரணை முடிந்தவுடன் ஜெயில், பெயில், வாய்தான்னு ஜவ்வு இழு இழுக்காமல் நாட்டு பாதுகாப்பு கருதி உயிரோடு புதைத்துவிடவேண்டும்.   15:19:38 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
பொது கருணாநிதி மறைவால் ஸ்டாலினுக்கு நெருக்கடி
பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.வி. நடராசன், ஈ.வெ.கி.சம்பத், கே.ஏ. மதியழகன் போன்ற ஐம்பெரும் தலைவர்கள் உயிரை கொடுத்து உருவாக்கிய கட்சி. எம்ஜிஆர் என்ற மாபெரும் மக்கள் செல்வாக்கு பெற்ற மாஸ் ஹீரோவால் ஏழை மக்களிடமும், பாமரமக்களிடமும், குக்கிராமங்களிலும் கொண்டுபோய் சேர்க்கப்பட்டு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்ட கட்சி. என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற எண்ணற்ற கலைஞர்கள் காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எதிராக பெரிய அளவில் உருவாக்கப்பட்ட கட்சி. இன்றைக்கும் இந்த கட்சியில் எத்தனையோ தகுதியானவர்கள், திறமையாளர்கள் இருக்கிறார்கள். அந்தக்கட்சிக்கு எந்த தகுதியும், திறமையும் இல்லாத ஒருவர் தன்னை தலைவராகிக்கொள்வது, அடுத்து அந்த கட்சியின் பவர்ஃபுல் பதவியான பொருளாளர் பதவியை தனது குடும்பத்தினர் கையில் கொடுத்து வைத்து அந்த குடும்பமே கட்சியின் சொத்துக்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்பது பச்சை அயோக்கியத்தனம். விழித்துக்கொள்ளுங்கள் உடன்பிறப்புக்களே. அதிமுகவினர் மன்னார்குடி குடும்பத்தை கழட்டிவிட்டது மாதிரி, நீங்கள் இந்த திருக்குவளை குடும்பத்திடம் கட்சியை காப்பாறிக்கொள்ளுங்கள்.   14:48:02 IST
Rate this:
5 members
0 members
21 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
விவாதம் ராஜிவ் கொலையாளிகள் விடுவிக்க மத்திய அரசு மறுப்பு
மிகவும் சரியே, விட்டால் சாதாரண ரவுடிப்பயலுக எல்லாம் போலீஸ், நீதித்துறையை கேவலமாக பார்ப்பார்கள். தெருப்பொறுக்கியெல்லாம் பாரத ரத்னா கிடைக்குமான்னு கேட்க ஆரம்பித்து விடுவாய்ங்க.   14:25:30 IST
Rate this:
3 members
1 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
பொது கருணாநிதிக்கு, பாரத ரத்னா பார்லிமென்டில் கோரிக்கை
என்னது பொழப்புக்கு திருட்டு ரயிலேறி பட்டினத்துக்கு வந்து இந்தியாவை ஊழலால் பிரமிக்க வைத்தவருக்கு பாரத ரத்னாவா. அது எப்புட்றா கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், வாய் இருக்கேன்னு என்னவேனா கேப்பீங்களாடா? அப்படியே சிபு சோரன், லாலுபிரசாத் யாதவ், மாயவாதி, முலாயம்சிங் யாதவ் போன்றவர்களுக்கும் சேர்த்து கொடுத்துடலாம். அண்ணாவிடம் கட்சியை ஆட்டயப்போட்டிங்க, இப்ப சமாதியையும் ஆட்டயபோட்டுட்டிங்க. ஆடுங்க, நல்லா ஆடுங்க, மக்கள் ஆப்பு செமையா ரெடி செய்துகொண்டிருக்கிறார்கள். மாட்டுவீங்கல்ல, அப்ப காட்டு காட்டுனு காட்றோம். பாரத ரத்னா வேணுமாம்ல. நோபல் கேட்கவேண்டியதுதானே.   18:20:48 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
பொது ரூ.2,000 வாபஸ் இல்லை லோக்சபாவில் தகவல்
அதிரடியாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்படவேண்டும். எளிதாக இருப்பதால் பதுக்கப்படுவது முழுக்க இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களே. மக்கள் தங்களிடம் இருக்கும் இரண்டாயிரம் ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தவேண்டும், அதுவும் இரண்டு லட்சத்துக்கு மேல் என்றால் அந்தப்பணத்துக்கான சோர்ஸ் காட்டவேண்டும் என்று அறிவித்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறவேண்டும். ஐநூறு ரூபாய் நோட்டே இந்தியாவின் அதிகபட்ச மதிப்புள்ள கரன்சியாக இருக்கவேண்டும். சில அசெளகரியங்கள் இருந்தாலும் பணமதிப்பிழப்பால் எந்த ஏழையும், நடுத்தரவர்கத்தினரும், நேர்மையாக தொழில்செய்து சம்பாதிப்பவர்களும் பாதிப்படையவில்லை. லஞ்சப்பேய்கள், ஊழல் பெருச்சாளிகள், கமிஷன் பிசாசுகள், மாஃபியாக்கள், இல்லீகல் சம்பாத்தியம் இருந்தவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டார்கள். இரண்டாயிரம் ரூபாய் மதிப்பிழப்பை வரவேற்போம். இன்னும் கிரெடிட்கார்டு உபயோகத்தை அதிகப்படுத்தவேண்டும். டாஸ்மாக்கில் கிரெடிட்கார்டுக்கு மட்டும்தான் சரக்கு விற்கப்படும் என்று அறிவித்தால் குடிமகன்கள் அனைவரும் குடிப்பழக்கத்தை நிறுத்தமாட்டார்கள், விற்பனை ஒரு ரூபாய் கூட குறையாது, அனைவரும் கிரெடிட்கார்டுக்கு மாறிவிடுவார்கள்.   15:07:26 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X