Brindha Sundar : கருத்துக்கள் ( 99 )
Brindha Sundar
Advertisement
Advertisement
ஏப்ரல்
25
2018
பொது ஆசாராம் குற்றவாளி கண்ணீர் விட்டு கதறும் ஆதரவாளர்கள்
ஆன்மீகத்தின் பெயரில் இது போன்ற குற்றம் செய்பவர்களுக்கு கடுமையான அதிக பட்ச தண்டனை விதிக்க பட வேண்டும். தப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இதனை யாரும் மறக்காதீர்கள். இந்த குற்றவாளியின் வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்கள், தன் மகளை பாதிக்கப்பட்ட பெண்ணின் இடத்தில வைத்து பார்த்து இந்த குற்றத்தை ஆதரிப்பீர்களா என்று கூறுங்கள்? குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாட்டில் நம் மகள்கள், பெண்டீர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் இது போன்ற குற்றங்களுக்கு அதிக பட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும். குற்றத்திற்கான தண்டனை தான் நம் நீதித்துறையில் இருக்கவேண்டுமே தவிர, தண்டனை என்பது தனிப்பட்ட மனிதனுக்கோ, சமூகத்திற்கோ, அரசியல் கட்சிகளுக்கோ வேறுபட்டு இருக்கக்கூடாது. நாடு முன்னேற்றம் அடைய அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.   14:15:05 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

ஏப்ரல்
12
2018
சம்பவம் காவிரியில் மணல் கொள்ளை வெளிமாநிலத்துக்கு கடத்தல்
காவிரி ஆணையம் அமைக்க பல விதங்களிலும் போராடும் எல்லாரும், முதலில் இது போன்ற சிறு தவறுகளை தட்டிக்கேட்டு, திருத்துங்கள். நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததற்கும், நம் தமிழ்நாட்டில் உள்ள ஆறு, சிற்றாறுகள், ஏறி, குளங்களில் நீர் மட்டம் குறைந்தமைக்கும் காரணம் இது தான். இந்த தவறுகளை சரி செய்வதின் மூலம் மற்றவரிடம் நீருக்காக கை ஏந்தவேண்டிய நிலை நமக்கு இருக்காது.   15:43:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
12
2018
பொது ராணுவம், தேச நலனுக்கு எதிராக சினிமா பிரபலங்கள் ஆவேச பேச்சு
இது வரை தமிழ் நாட்டில் உள்ள அனைத்து துணைவேந்தர்களும் அரசியல் பின் புலத்தில் ஊழலில் திளைத்து உள்ளனர். கல்வியையும், மாணவரையும், பேராசிரியர்களும் ஊழல் அடிப்படியில் தான் நியமித்து உள்ளனர். இவை அனைத்தையும் செய்து இந்த இழி நிலைக்கு தமிழகத்தை கொண்டு வந்து விட்டு, நல்லவர்கள் போல் தமிழர்களுக்கு நல்லது செய்பவர்கள் போல் பாவனை செய்து, ஊழல் இல்லாமல் ஒரு துணைவேந்தர் நியமனம் ஆனதை ஏற்க மறுக்கின்றனர். தமிழன் உலகத்திற்கு பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் போதித்தவன். அப்படி இருக்க மற்றவர்கள் அதனை தனக்கு சொல்லிக்கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு காரணம், இது போன்ற அறிவிலிகள் தான். தமிழனே விழித்து கொள் தவறு செய்பவன் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். தன் இனம், தன்னை சேர்த்தவர் என்ற பாகுபாடு கொண்டால், நீதி நிலைநாட்டப்படாது என்பதை நினைவில் கொள். இதனால் தான் நம் தாய் மண் மற்றும் மக்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். நன்மை செய்வது யாராக இருந்தாலும் அதை பாராட்டி ஏற்று கொள்வதை தான் நமது பண்பாடு போதித்தது. "எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு." என்ற திருக்குறளை நினைவில் வை.   14:17:56 IST
Rate this:
7 members
0 members
45 members
Share this Comment

ஏப்ரல்
10
2018
பொது கறுப்பு பேட்ஜ் அணியாத வீரர்கள் தமிழக நலனில் அக்கறை இல்லையா ?
விளையாட்டு வீரர்களுக்கு விளையாடுவது தான் வேலை. அரசியல் வாதிகளுக்கு மக்களுக்கு தேவையானவற்றை நடத்திக்கொடுப்பது தான் வேலை. விளையாட்டு வீரர்களிடம் அரசியல் வாதியின் வேலையை செய்ய சொல்வது முட்டாள் தனம். அரசியல் வாதிகள் ஊழலில் திளைத்து நாட்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்ய தவறுவதினால் அவர்களை முற்றுகை இட்டு அவர்களின் பதவியை விட்டு கொடுக்க செய்யுங்கள். காவேரி தண்ணீர் தங்கு தடையின்றி வரும் வரை தேர்தலை அனைத்து கட்சிகளும் புறக்கணித்து காத்திருங்கள். நல்ல முடிவு கிடைக்கும். தமிழர்கள் மற்றவருக்கு பண்பாட்டை சொல்லித்தந்தவர்கள். அப்படி இருக்க உண்மையான தமிழன், தமிழர் மற்றும் தமிழர்களுக்கு என்று பண்பாட்டை மறந்து மூடர்களாக அரசியல் வாதிகளின் பின்னல் செல்லமாட்டான். அரசியல் வாதிகள் அரசியலில் ஆதாயமடைவார்கள். அல்லாது சாதாரண மனிதன் போல் எல்லாவற்றையும் இழந்து வாழ்க்கையை தொலைத்து நிற்கமாட்டார்கள். தமிழனே சிந்தித்து செயல்பாடு மற்றவன் சொல்வதை கேட்டு, அறிந்து ஆராயாமல் வன்முறையை கையில் எடுத்து தன்னை தொலைத்து, நம்பி இருக்கும் குடும்பத்தையும் தொலைத்து விடாதீர்கள்.   17:34:54 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
29
2018
அரசியல் கர்நாடகா - தமிழகம் மிரட்டலால் மத்திய அரசு... அதிர்ச்சி!
நாடுகளுக்கு இடையேயான நதி நீர் பங்கீடு எந்த வித அரசியல் பின் புலமும் இல்லாமல் நல்ல முறையில் நடக்கின்றபொழுது, மாநிலங்களுக்கு இடையே ஏன் இந்த பிடிவாதம். நீதிமன்றம் நியாயமான முறையில் இதை முறைப்படுத்த வேண்டும். அரசியல் தலையீடு இருக்க கூடாது. தமிழக மக்கள் எந்த கட்சி என்ன செய்தது என்ன செய்யவில்லை என்று விவாதம் செய்வதினால் தமிழ் நாட்டிற்கு தண்ணீர் கிடைக்கப் போவது இல்லை. பொறுப்புணர்வுடன், நம் நடவடிக்கையினால் காணாமல் போன சிற்றாறுகளையும், சிறு பெரு நீர் நிலைகளையும் தூர் வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, மரம் வளர்த்து நிலத்தடி நீரையும் மழை நீரையும் சேமியுங்கள். அரசியல் வாதிகளை நம்பி நேரத்தை வீணாக்காதீர்கள்.   14:33:14 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
2
2018
அரசியல் காவிரி வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும் வட்டாள் நாகராஜ்
உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான இந்த பேச்சு, நீதிமன்ற அவமதிப்பாகும்.   17:58:31 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

மார்ச்
26
2018
பொது விடைத்தாள் மையத்தில் போராட்டம் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
ஆசிரியர்கள் நிலை இவ்வளவு தரம் தாழ்ந்து விட்டதா? மாணவர்களின் எதிர்காலத்தில் இப்படி விளையாட எப்படி துணிந்தார்கள்?   14:39:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
24
2018
விவாதம் தி.மு.க.,வில் உதயநிதியை முன்னிலைபடுத்துவது சரியா?
வாரிசு அரசியல் என்பது மன்னராட்சிக்கு இணையானது.   14:28:53 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
26
2018
பொது நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார் மாஜி துணைவேந்தர் வெளியேற்றம்?
இவரைப் போல் ஊழல்வாதிகளின் இந்திய குடியுரிமை பறிக்கப்படவேண்டும்.   12:55:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
20
2018
சம்பவம் சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
கர்மா விளையாட தொடங்கி முதல் தீர்ப்பு வந்து விட்டது. இது தொடக்கம் மட்டுமே... தீர்ப்புகள் தொடரும்...   13:34:44 IST
Rate this:
7 members
0 members
56 members
Share this Comment