சிறப்பு பகுதிகள் செய்தி

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பதிவு செய்த நாள் : மே 25, 2018
Advertisement
பேச்சு, பேட்டி, அறிக்கை

'காலை வாரி விட சவுகரியமாய் இருக்கும்னு நினைக்கிறாரோ...' என எண்ணத் தோன்றும் வகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி: மாநில கட்சிகள் பலமாக வளர்ந்தால் தான், நாட்டில் நல்லாட்சி கொடுக்க முடியும். தேசிய கட்சியான, காங்., மாநில கட்சியான, ம.ஜ.த.,வுக்கு, ஆட்சி அமைக்கும் அதிகாரம் வழங்கியிருப்பது பாராட்டிற்குரியது.

தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு: தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சியாலும், பா.ஜ., குறித்து விமர்சிக்காமல், அரசியல் செய்யவே முடிவதில்லை. இதுவே, தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு கிடைத்திருக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அடுத்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் இருந்து, பா.ஜ., சார்பில் அதிக, எம்.பி.,க்களை வெற்றி பெறச் செய்து, டில்லிக்கு அனுப்பி வைப்போம்.

த.மா.க., தலைவர் வாசன் பேட்டி: துாத்துக்குடி சம்பவத்தில், 'துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது' என, அமைச்சர் ஜெயகுமார் கூறுவது, மனிதாபிமானமற்றது. நியாயமான கோரிக்கைக்காக போராடிய மக்களுக்கு செவி சாய்க்க, தமிழக அரசு தவறி விட்டது. இச்சம்பவத்திற்கு தமிழக அரசு சப்பைக்கட்டு கட்ட நினைத்தால், அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

காங்., தலைவர் ராகுல், 'டுவிட்டரில்' கருத்து பதிவு: தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள், ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மோடியின் தோட்டாக்களால், ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது.

பா.ஜ., செய்தி தொடர்பாளர் சாம்பித் பத்ரா பேட்டி: துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை குற்றம் சாட்டுவது, ராகுலின் அரசியல் அனுபவமின்மை, பக்குவமின்மையைக் காட்டுகிறது. இதுபோன்ற ஒரு தலைவரால், காங்., கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. மரபுரிமையாக ஒரு கட்சியின் தலைவர் பொறுப்பை, ராகுல் பெற்று விடலாம்; ஆனால், அதேபோல், அறிவையும், புரிதலையும் பெற்றுவிட முடியாது.

தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி: அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த, 'பிரிட்டிஷ் கவுன்சில்' மூலம், சிறப்பு பயிற்சிகள் அளிக்க ஆலோசித்து வருகிறோம். எதிர்காலத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை தவிர்த்து, மாணவர்கள் அரசு பள்ளிக்கு வரும் அளவுக்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் பேட்டி: 2013ம் ஆண்டே, ஸ்டெர்லைட் ஆலையை மூட, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். தற்போதைய முதல்வரும், ஆலைக்கு தடை விதித்ததோடு, விரிவாக்க பணிகளுக்கும் தடை விதித்துள்ளார். ஆனால், சிலர் சுயலாபத்திற்காக, தவறான தகவல்களை மக்களிடம் கொண்டு செல்கின்றனர். பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை