'டவுட்' தனபாலு

பதிவு செய்த நாள் : ஆக 16, 2018
Advertisement
'டவுட்' தனபாலு

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்: தி.மு.க., தொண்டர்களை தன் பக்கம் இழுக்க, அ.தி.மு.க.,வை, ரஜினி விமர்சித்துள்ளார்.டவுட் தனபாலு: இப்படி எல்லாம் இருக்கா... இந்த விஷயத்தை நீங்க எப்போ உணர்ந்தீங்க... ஜெ., மறைவைத் தொடர்ந்து, தி.மு.க.,வை, உங்களை விட, பா.ஜ., பயங்கரமாக விமர்சித்து வருவது, உங்க கட்சித் தொண்டர்களை தன்பக்கம் இழுக்கும் தந்திரம்கற, 'டவுட்' என்றைக்காவது உங்களுக்கு வந்திருக்கா...!----தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்: ஒரு முறை, நம் கொடிக்கும், உதயசூரியன் சின்னத்திற்கும் சோதனை ஏற்பட்டு, தேர்தல் கமிஷனில் விசாரணை நடந்தது. அந்த விசாரணையின் தீர்ப்பு, நமக்கு சாதகமாக வந்தது.டவுட் தனபாலு: அது எப்போது... யாரால்... அந்த விபரத்தையும் சொல்லுங்களேன்... யார் சங்கடப்படுவாங்கன்னு தயங்குறீங்க... எப்பவோ நடந்த விஷயத்தை, திடீர் செயற்குழு கூட்டத்தில் இப்போ சொல்வதைப் பார்த்தால், உங்க அண்ணன், அழகிரியாலும், இது போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்குன்னு நினைக்குறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது...!---முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி: தனியாக கட்சி துவங்கும் எண்ணம் எதுவும், எனக்கு கிடையாது.

டவுட் தனபாலு: ஆங்காங்கே உங்க ஆதரவாளர்கள், கலைஞர் தி.மு.க.,ன்னு, போஸ்டர் ஒட்டியிருப்பது எல்லாம், என்ன கணக்கு... 'மனமிரங்கி, தி.மு.க., சேர்த்தால், அதில் இருப்பேன்... இல்லாட்டி, மற்ற கட்சியில் இணைந்திடுவேன்... தனிக்கட்சி துவங்கும் திட்டம் ஏதும், எனக்கு, ஒருபோதும் கிடையாது'ன்னு, சொல்ல வர்றதா, இதை எடுத்துக்கலாமா என்பது தான், மக்களின், 'டவுட்!'

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X