டீ கடை பெஞ்ச்

பதிவு செய்த நாள் : மே 23, 2018 | கருத்துகள் (1)
Advertisement
  டீ கடை பெஞ்ச்

பட்டியல் போட்டு மாமூல் வசூலிக்கும் போலீஸ்!''இன்ஸ்பெக்டர், 'டார்ச்சர்' தாங்க முடியாம தவிக்குறாங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''எங்க வே...'' என்றார் அண்ணாச்சி.''மதுரை தெற்குவாசல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன்... ரொம்பவே நேர்மையானவர்... அதே நேரம், டூட்டியில கறாரா இருப்பாரு பா...''எல்லா வேலைகளுமே, நுால் பிடிச்சா மாதிரி, நேரத்துக்கு, ஒழுங்கா நடக்கணும்னு எதிர்பார்க்குறார்... இவரோட வேகத்துக்கு போலீசாரால ஈடுகொடுக்க முடியலை பா...''வெறுத்து போன போலீஸ்காரர் ஒருத்தர், சமீபத்துல, 'சார் நீங்க இப்படி டார்ச்சர் செஞ்சீங்கன்னா, தற்கொலை பண்ணிக்குவேன்'னு மிரட்டியிருக்காரு பா...''இன்னொரு போலீஸ்காரர், 'என் சாவுக்கு நீங்க தான் காரணம்னு ெலட்டர் எழுதி வச்சுட்டு, ஓடுற லாரியில விழுந்துடுவேன்'னு சொல்லி, மெர்சல் ஆக்கியிருக்கார்... ''இப்படி, ஆளாளுக்கு இன்ஸ்பெக்டருக்கு எதிரா போர்க்கொடி துாக்கிட்டு இருக்காங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.''ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமிக்காம இழுத்தடிச்சிட்டு இருக்காவ வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...''தமிழக அரசின், எரிசக்தி துறை செயலரா இருந்த விக்ரம் கபூரை, மின் வாரிய தலைவரா, மார்ச், 5ம் தேதி நியமிச்சாவ... அவரே, எரிசக்தி துறை செயலர் பொறுப்பையும், கூடுதலா கவனிச்சிட்டு இருக்காரு வே...''இந்த மாசக் கடைசியில, சட்டசபை கூட்டம் துவங்கப் போவுதுல்லா... 'அதுக்குள்ள எரிசக்தி துறைக்கு, தனி, ஐ.ஏ.எஸ்., அதிகாரியை போட்டா நல்லது'ன்னு மின்வாரிய அதிகாரிகள் சொல்லுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.''பட்டியல் போட்டு, கட்டாய வசூல் நடத்திண்டு இருக்கார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.''எந்த ஊர் போலீசை சொல்றீங்க...'' என, பட்டென கேட்டார் அந்தோணிசாமி.''ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பக்கத்துல இருக்கற, கெம்மநாயக்கன்பாளையம், டி.ஜி.புதுார் நால்ரோடு, பங்களாபுதுார் பகுதிகள்ல, கள்ள லாட்டரி, மது, கஞ்சா விற்பனை, மணல் கடத்தல்னு எல்லா சட்டவிரோத காரியங்களும் நடந்துண்டு இருக்கு ஓய்...''பங்களாப்புதுார் போலீஸ் ஸ்டேஷன்ல, தனிப்பிரிவு போலீஸ்காரரா இருக்கறவர் தான், இதை செய்றவாளுக்கு, 'காட் பாதர்' மாதிரி இருக்கார்...''ஒவ்வொரு ஏரியாவுலயும் யார், யார், என்ன சட்டவிரோத செயல்களை செய்யணும்னு பிரிச்சு குடுத்து, மாசா மாசம், பட்டியல் போட்டு மாமூல் வசூலிக்கறார் ஓய்...''மாசம், ஒரு லட்சத்துக்கும் மேல வசூலாகிறதாம்... இதுல, உயர் அதிகாரிகள் வரை பங்கு பிரிச்சு குடுத்துடறார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.டீயை குடித்து முடித்து, அனைவரும் கிளம்ப, எதிரில் வந்தவரை நிறுத்திய அந்தோணிசாமி, ''என்ன சத்தியசிங்... மகள் வீட்டுக்கு போயிட்டு எப்ப வந்தீங்க...'' என கேட்டு அரட்டை அடிக்க, மற்றவர்கள் நகர்ந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
H Mahadevan - Chennai,இந்தியா
23-மே-201812:10:25 IST Report Abuse
H Mahadevan அரசாங்கம் சத்ய சிங் போன்றவர்களை கைது செய்யுமா ? ஒருக்காலும் நடக்காது ..பின்பு ஏன் இதைப் பற்றி பிரசுரிக்க வேண்டும் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை