சிறப்பு பகுதிகள் செய்தி

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

பதிவு செய்த நாள் : ஆக 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
Advertisement

அறிவியல் ஆயிரம்

கேரளாவின் 'சிரபுஞ்சி'

இந்தியாவில் அதிக மழைபெறும் இடங்கள் பட்டியலில், கேரளாவின் நேரியாமன்கலம், ஏழாவது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டின் மழை பொழிவு, 3,849 மி.மீ. இது எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரியாறின் ஆற்றங்கரையில் அமைந்து உள்ள நேரியாமன்கலம், எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களுக்கு எல்லையாக உள்ளது. பெரியாறின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நேரியாமன்கலம் பாலம், 'உயர் எல்லைகளின் நுழைவுவாயில்' என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. அதிக மழைப்பொழிவை பெறும் இவ்விடம் கேரளாவின் 'சிரபுஞ்சி' என அழைக்கப்படுகிறது.
தகவல் சுரங்கம்

மீண்டும் இடைத்தேர்தல்

ஒரு தொகுதியின் சட்டசபை உறுப்பினர் இறந்து விட்டாலோ, நீதிமன்ற தீர்ப்பின்படி உறுப்பினர் பதவியை இழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ இடைத்தேர்தல் நடத்தப்படும். இறப்பு சான்றிதழ் அல்லது நீதிமன்ற தீர்ப்பு நகல் அல்லது ராஜினாமா கடிதம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர் அதனை சட்டப்பேரவை செயலருக்கு அனுப்புவார். செயலர் அதனை அரசிதழில் வெளியிடுவார். வெளியிட்ட நாள் முதல் அத்தொகுதி காலி தொகுதி என பதிவு செய்யப்படும். அன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X