கிருதுமால் நதியில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு| Dinamalar

கிருதுமால் நதியில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு

Added : மே 01, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்புவனம்:விருதுநகர் மாவட்ட எல்லை வழியாக, திருப்புவனம் அருகே மேலராங்கியம் கிருதுமால் நதியில் மணல் குவாரி அமைக்க,கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்புவனத்திலிருந்து, ஆறு கி.மீ., தூரத்தில் உள்ள மேலராங்கியம், கீழராங்கியம், வயல்சேரி, கரிசல்குளம், புளியங்குளம், சங்கங்குளம், வல்லாரேந்தல், பழையனூர், பிரான்குளம், ஓடாத்தூர் வரை சிவகங்கை மாவட்டத்தில் கிருதுமால் ஆறு செல்கிறது.இதற்கடுத்து விருதுநகர் மாவட்ட எல்லை துவங்குவதால், உழுத்திமடையில் அரசு மணல் குவாரி துவக்கி, ஆற்றை ஒட்டிய பட்டா இடத்திலும் மணல் அள்ளப்பட்டது. எல்லை மீறி சிவகங்கை மாவட்டம் ஓடாத்தூரில், ஆறு, பட்டா இடத்தில் மணல் அள்ளியதற்கு,கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.தற்போது,விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பொதுப்பணித்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள கிருதுமால் நதியில்,மேலராங்கியம் பகுதியில் மணல் அள்ள சிலர் முயற்சித்து வருகின்றனர். ஏற்கனவே, இக்கிராமங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்ட குறைவால், விவசாயம் பாதித்துள்ளது.இதனால் விவசாயிகள், விவசாயத்தை கைவிட்டு, கூலித்தொழிலாளர்களாக வெளியூர் சென்று வருகின்றனர்.இங்கு குவாரி அமைக்கும் முயற்சிக்கு 10 கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட தயாராகி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X