'அம்மா குடிநீர்' தனியார் மயமா? Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'அம்மா குடிநீர்'
தனியார் மயமா?

சென்னை : தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், நிர்வகிக்கப்பட்டு வரும், 'அம்மா குடிநீர்' திட்டத்தை, தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

SETC,Amma drinking water,Late CM Jayalalitha,அம்மா குடிநீர், தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம், அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் ,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கும்மிடிப்பூண்டி நிலத்தடி நீர்மட்டம்,TNSTC,  Tamil Nadu State Transport Corporation, amma drinking water plant, late former Chief Minister Jayalalithaa, Gummidipoondi underground water level, State Express Transport Corporation
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில், 2.47 ஏக்கர் பரப்பில், 10.5 கோடி ரூபாய் முதலீட்டில், அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது; இங்கு தினமும், மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள, முக்கிய பேருந்து நிலையங்களில், 10 ரூபாய்க்கு, இந்த குடிநீர் பாட்டில்கள் விற்கப்படுகின்றன.குறைந்த விலையில் குடிநீர் கிடைப்பதால்,

பயணியரிடம் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, கும்மிடிப்பூண்டியில், மற்றொரு குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்க உள்ளதாக, முன்னாள் முதல்வர், ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தண்ணீரின் தேவையும் கூடியுள்ளது. எனவே, மற்றொரு குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுவடைந்துள்ளது.இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:அம்மா குடிநீர் திட்டம், நஷ்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின், 54 தொழில்நுட்ப பணியாளர்கள், குடிநீர் உற்பத்தி மையத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இதனால், பஸ்களை பராமரிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு குடிநீர் விற்பனை நிலையத்திலும், ஓட்டுனர் அல்லது நடத்துனரை, விற்பனையாளராக நியமிக்கிறோம்.
சராசரியாக, ஒரு நிலையத்தில், தினசரி, 1,000 பாட்டில்கள் தான் விற்பனையாகின்றன.ஆனால், அங்கு பணியாற்றும் ஊழியருக்கு, ஒரு நாளைக்கு, 1,200 ரூபாய்க்கும் மேல் சம்பளம் தரப்படுகிறது.

Advertisement


ஏற்கனவே, கும்மிடிப்பூண்டியில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், தண்ணீரின் சுவை குறைந்துள்ளது என்றும், அம்மா குடிநீர் திட்டத்தால், அரசே, 'பிளாஸ்டிக் பாட்டில்' பயன்பாட்டை ஊக்குவிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில், இன்னொரு குடிநீர் ஆலை அமைத்தால், போக்குவரத்து கழகத்திற்கு அதிக நஷ்டம் ஏற்படும். அதனால், இத்திட்டத்தை, முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்ற யோசனையை, அரசுக்கு அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Delhi,இந்தியா
14-மார்-201814:10:16 IST Report Abuse

Rajeshசாராயத்தை விற்கும் அரசாங்கத்தை யாரும் எது சொல்லவில்லையா ??? பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்றால் அரசே பிளாஸ்டிக் பயன்பாட்டை ஊக்குவிக்கின்றது என்று சொல்லுகிறார்களா ????

Rate this:
Abdul rahim - Thanjavur,இந்தியா
14-மார்-201813:58:56 IST Report Abuse

Abdul rahimதனியாரிடம் ஒப்படைத்தால் தண்ணீர் பாட்டில் 20 ரூபாய்க்கு தான் விற்பார்கள் அதற்க்கு அம்மா குடிநீரை நிறுத்திவிடலாம்

Rate this:
Paddy Sundaram - Chennai,இந்தியா
14-மார்-201821:40:26 IST Report Abuse

Paddy Sundaramஅதற்கான முதல் காலடி இது....

Rate this:
kumar - chennai,இந்தியா
14-மார்-201813:15:07 IST Report Abuse

kumarடாஸ்மாக் துறையை தவிர எல்லா துறையிலயும் நஷ்டம் தான்... அப்போ எதுக்குயா இந்த கோவேர்ந்மேன்ட்....

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X