தொடர் அமளி: 7 வது நாளாக பார்லி முடங்கியது| Dinamalar

தொடர் அமளி: 7 வது நாளாக பார்லி முடங்கியது

Added : மார் 13, 2018 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 parliament,Opposition parties , Venkaiah Naidu,எதிர்க்கட்சிகள் தொடர் அமளி, பார்லிமென்ட் ஒத்திவைப்பு, பட்ஜெட் கூட்டத்தொடர், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி,  ராஜ்யசபா தலைவர் வெங்கையாநாயுடு, 
 parliament postponement, budget session, Punjab National Bank fraud, Rajya Sabha Chairman Venkaiah Naidu,

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக பார்லிமென்டின் இரு அவைகளிலும் எந்த பணியும் நடக்காத நிலையில் 7 வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வுக்காக, மார்ச் 5ம் தேதி, பார்லி., கூடியது. ஆனால்,கடந்த வாரம் முழுவதும், சபை கூடுவதும், ஒத்தி வைப்பதுமாக காட்சிகள் இருந்தன.பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி பிரச்னைக்காக, காங்கிரசும், திரிணமுலும் இணைந்துஅமளியில் ஈடுபடுகின்றன. இருப்பினும், பல்வேறு மாநில கட்சிகளின் ஆவேசம் தான், இரு சபைகளிலும் அதிகமாக உள்ளது.மாநில சிறப்பு அந்தஸ்து கோரி, ஆந்திர, எம்.பி.,க்களும், காவிரி பிரச்னைக்காக தமிழக, எம்.பி.,க்களும், அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

7 வது நாளாக இன்றும் பார்லிமென்ட் எந்த அலுவலும் நடைபெறாத நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபா துவங்கியதும், தெலுங்கு தேச எம்.பி.,க்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவிலும் எம்.பி.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. எம்.பி.,க்களின் நடவடிக்கைக்கு வேதனைபடுவதாக ராஜ்யசபா தலைவர் வெங்கையாநாயுடு கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு. கூடுவாஞ்சேரி. இப்படி நாடாளுமன்ற முடக்கம் காங்கிரஸ் கட்சியை சாமாதி அடையச் செய்து கொண்டிருக்கிறது. எல்லாம் நன்மைக்கே.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-மார்-201817:36:38 IST Report Abuse
Sanny வங்கியில் வைப்பு தொகை இல்லை என்றால் கட்டணம், அதுபோல பார்லியை முடக்குபவர்களுக்கு ஏதாவது தண்டனை கொடுத்தால் அடங்கிடும், இலவச போன், வாகன செலவு, தங்குமிட வசதி இவைகளை தடைசெய்தால் போதும், MP கள் செத்தே போய்டுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-மார்-201816:18:41 IST Report Abuse
ஆரூர் ரங் ராஜீவ் பார்லிமெட்டை செயல்படாமலடிக்க ஷவுட்டிங் பிரிகேட் என்று ஒரு இளைஞர் எம்பி பட்டாளத்தையே வைத்து அமர்க்களம் செய்தது மறக்காது.இப்போது பல மசோதாக்களை விவாதமின்றி நிறைவேற்றவே போலி போராட்டம் எனத்தோன்றுகிறது
Rate this:
Share this comment
suresh - chennai,இந்தியா
13-மார்-201818:34:34 IST Report Abuse
suresh<போலி போராட்டம் எனத்தோன்றுகிறது> போராட்டத்திற்கு மூன்று காரணங்கள், 1 ) பஞ்சாப் வங்கி ஊழல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்து என ஊடகங்களுக்கு சொன்ன பாஜக, பாராளுமன்றத்தில் நேருக்கு நேர் காங்கிரஸுடன் விவாதிக்க பயந்து ஓடியது முதல் காரணம்,,,. 2 ) உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துக என தமிழகம் பாராளுமன்றத்தை முடக்கியது (இதுவும் போலி போராட்டமாம்)... 3 ) நீண்ட நாள் கோரிக்கையான மாநில சிறப்பு அந்தஸ்து கோரும் ஆந்திராவின் கோரிக்கை,,முடியாது என்றால், முடியாது என நேரிடையாக பளிச்சென அதன் காரணங்களை ஆந்திர மக்களிடம் பட்டியலிடலாம், இல்லேயேல் மாநில சிறப்பு அந்தஸ்துக்கு பதிலாக மாற்று திட்டம் தயாரித்து சமரசம் மேற்கொள்ளலாம், இதில் ஏதேனும் ஒன்றை செய்ததா பாஜக அரசு ? இப்படி எதையும் செய்யாத பாஜக அரசை எதிர்க்கு தெலுங்கு தேச கட்சி பாராளுமன்றம் முடக்கப்பட்டதற்கு மூன்றாவது காரணம், ,,ஆரூர் அவர்களே, போலி போராட்டம் என்றால், நான் மேற்சொன்ன மூன்று காரணங்கள் எந்த வகையில் நியாயம் இல்லை, போலி என சொல்ல முடியுமா ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X