ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் கொலை | Dinamalar

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் கொலை

Added : மார் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினருடன் நேற்று நடந்த மோதலில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின், அனந்த்நாக் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு, பாதுகாப்பு படை வீரர்கள் முற்றுகையிட்டனர்.இதைத் தொடர்ந்து நடந்த சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து, துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகள், சமீபத்தில், ஸ்ரீநகரில், காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தி, ஒரு போலீஸ்காரரை கொன்றவர்கள் என, தெரிய வந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை