போலி நிறுவனத்தில் ஏமாந்த டிராவிட், சாய்னா நேவால்| Dinamalar

போலி நிறுவனத்தில் ஏமாந்த டிராவிட், சாய்னா நேவால்

Added : மார் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பெங்களூரு: பிரபல விளையாட்டு வீரர்கள், ராகுல் டிராவிட், சாய்னா நேவால், பிரகாஷ் படுகோன் உள்ளிட்ட, 800 பேரிடம், பெங்களூரைச் சேர்ந்த போலி நிதி நிறுவனம், 300 கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.கர்நாடகாவில், காங்., கிரசைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தலைநகர், பெங்களூரில், 'விக்ரம் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி' என்ற போலி நிறுவனம் செயல்பட்டது.இந்நிறுவனத்தில், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர், ராகுல் டிராவிட், பேட்மின்டன் வீரர்களான, சாய்னா நேவால், பிரகாஷ் படுகோன் உள்ளிட்ட, 800 பேர், கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். இந்நிறுவனத்தில், சினிமா, கலை, அரசியல், வர்த்தகத் துறையைச் சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக, போலி நிறுவனத்தின் உரிமையாளர், ராகவேந்திரா ஸ்ரீநாத் என்பவரையும், அவரது ஏஜன்டுகள், சுத்ராம் சுரேஷ், நரசிம்ம மூர்த்தி, நாகராஜ், பிரகலாத் ஆகியோரையும், போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில், சுத்ராம் சுரேஷ், பெங்களூரைச் சேர்ந்த, பிரபல விளையாட்டு பத்திரிகையாளர். 'போலி நிறுவனத்தில், விளையாட்டு வீரர்கள் முதலீடு செய்வதற்கு, முக்கிய காரணம் இவரே' என, போலீசார் தெரிவித்தனர்.போலி நிதி நிறுவன கும்பல், 300 கோடி ரூபாய் ஏமாற்றி உள்ளதாகவும், அவர்கள் அனைவரும், 14 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், தகவல்கள் கூறுகின்றன. முதலீடு செய்யும் பணத்துக்கு, ஆண்டுக்கு, 40 சதவீத வட்டி தருவதாகக் கூறியதை நம்பி, முதலீட்டாளர்கள் ஏமாந்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-மார்-201810:30:56 IST Report Abuse
Cheran Perumal விளையாட்டு, வருமானம் இவற்றைத்தவிர வேறு விஷயங்கள் இவர்களுக்கு தெரியாது போலுள்ளது. 40 % வட்டி எப்படி கொடுப்பார்கள் என்ற அறிவு வேணாம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை