உ.பி.,யில், 'சோலார்' மின் ஆலை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
உ.பி.,யில், 'சோலார்' மின் ஆலை
துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

லக்னோ : உ.பி.,யில், 'சோலார்' எனப்படும், மிகப்பெரிய சூரிய ஒளி மின் ஆலையை, பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர், இமானுவேல் மேக்ரானும், நேற்று துவக்கி வைத்தனர்.

உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின், மிர்சாபுர் மாவட்டத்தில், மாநிலத்தின் மிகப்பெரிய சோலார் மின் ஆலை நிறுவப்பட்டு உள்ளது.

இங்கு, 75 மெகாவாட் மின் திறனுள்ள இந்த ஆலையை, பிரதமர் மோடி, ஐரோப்பிய நாடான, பிரான்ஸ் அதிபர், மேக்ரான் திறந்து வைத்து, உ.பி., மக்களுக்கு அர்ப்பணித்தனர்.

Modi,Narendra modi,Uttar Pradesh,உத்தரபிரதேசம்,நரேந்திர மோடி,மோடி

இந்த ஆலை, 500 கோடி ரூபாய் செலவில், பிரான்சின், 'என்கி' என்ற நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டது. 380 ஏக்கர் நிலத்தில், 1.18 லட்சம் சோலார் பேனல்களுடன், இந்த ஆலை நிறுவப்பட்டு உள்ளது.

Advertisement

இதில் தயாரிக்கப்படும் மின்சாரம், ஜிக்னா துணை மின் நிலையத்துக்கு அனுப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.முன்னதாக, உ.பி., வந்த பிரான்ஸ் அதிபர், மேக்ரானையும், அவரது மனைவி, பிரிகிட்டையும், விமான நிலையத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத், கவர்னர், ராம் நாயக் வரவேற்றனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
13-மார்-201820:06:27 IST Report Abuse

நக்கீரன்சோலார் போன்ற பாதுகாப்பான, எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் எல்லாம் வடமாநிலங்களுக்கும், அணு உலை மற்றும் நியூட்ரினோ போன்ற மக்கள் விரோத, எதிர்கால சந்ததிகளுக்கே வேட்டு வைக்கும் திட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கா? மோடிஜி சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். இல்லையேல் தமிழர்களின் தீராப்பகையை சம்பாதிக்க நேரிடும்.

Rate this:
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
13-மார்-201819:04:17 IST Report Abuse

த.இராஜகுமார் அப்படியே அந்த ஆக்சிஜென் சிலிண்டரும் எல்லா மருத்துவ மனைக்கும் குடுங்கப்பா

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
13-மார்-201817:38:18 IST Report Abuse

ganapati sbசூரிய ஒளி மின்சாரத்தில் குஜராத்சாதனை படைத்த மோடி இப்போது தேசம் முழுவதும் இதை கொண்டு சேர்கிறார் உபி யோகி கரம் கோர்த்து பயன் பெறுகிறார் வாழ்த்துக்கள்

Rate this:
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
13-மார்-201816:04:10 IST Report Abuse

Apposthalan samlinடிஜிட்டல் இந்தியா என்கிறோம்.பின் ஏன் பிரான்ஸ் நிறுவனம் வந்து அமைத்தது. நம்மிடம் தொழில் நுட்ப்பம் இல்லையா ?மனித வளங்கள் இல்லையா?வேலை வாய்ப்பு கொடுத்து நாமே அமைத்து இருக்கலாமே.ஊழல் ஆக இருக்குமோ எனக்கு தெரிய வில்லை அப்பா

Rate this:
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
13-மார்-201812:06:31 IST Report Abuse

Loganathan Kuttuvaசுற்று சூழல் மாசடையாத முறையில் இலவசமாக கிடைக்கும் மின்சாரம்.எல்லா மாநிலங்களுக்கும் இந்த திட்டங்கள் தேவை.

Rate this:
ARASU - ,சிங்கப்பூர்
13-மார்-201811:51:13 IST Report Abuse

ARASUமோடி, முதல்ல அத்வானியை மதிக்க கற்றுக்கொள்ளுங்க

Rate this:
Ramachandran Madambakkam - Chennai,இந்தியா
13-மார்-201817:00:45 IST Report Abuse

Ramachandran  Madambakkamசோலாருக்கும் அத்வானிக்கும் என்ன தொடர்பு ?...

Rate this:
ARASU - ,சிங்கப்பூர்
16-மார்-201809:01:40 IST Report Abuse

ARASUசோலார் திட்டத்தை தொடங்கியதால் உ பி, பீகார் இடைத்தேர்தலில் பாஜக மண்ணை கவ்வியது....

Rate this:
ரத்தினம் - Muscat,ஓமன்
13-மார்-201809:48:17 IST Report Abuse

ரத்தினம்பாராட்டுகிறோம்

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
13-மார்-201809:25:49 IST Report Abuse

mindum vasanthamUttar pradesham sariyana paathayil,aathi kalam muthal valam petru irukkum oralavu nallatchiye petra tamilakam viraivil thirumba vum,edappadi athiradiyai ethavathu pannu paa

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-மார்-201808:37:04 IST Report Abuse

Srinivasan Kannaiyaசோலார் மின் உற்பத்தி நிலையத்தை கொண்டுவந்தது நல்லது... இதையே தமிழகத்தில் கொண்டுவந்தால் நல்லது... காரணம் தமிழக அரசு மின் உற்பத்தியில் நாட்டம் செலுத்துவது இல்லை.,,, எனவே மத்திய அரசு மின்னுற்பத்தி நிலையங்க அமைக்க ஏற்பாடு செய்தல் தமிழக மக்கள் பி ஜெ பி யை நினைத்து கொண்டு இருக்க பெரும் வாய்ப்பு உள்ளது...

Rate this:
Ramachandran Madambakkam - Chennai,இந்தியா
13-மார்-201817:02:50 IST Report Abuse

Ramachandran  Madambakkamதமிழ் நாட்டில் தற்போது மின் உற்பத்தி உபரியாகத்தான் இருக்கிறது....

Rate this:
13-மார்-201805:33:02 IST Report Abuse

c.Thirumalaisamyசூரியன் ஹிந்துக்களின் கடவுளே எனவே சோலார் மின்சாரம் காவி அல்லது ஹிந்துத்துவா மின்சாரம் என தமிழகமாய் இருந்தால் எதிர்ப்பைக்காட்டியிருக்கலாம்.தமிழன்டா என்று வேறு குதித்திருக்கலாம்

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement