உள்நாட்டு ஆயுத தயாரிப்புக்கு ஆலோசனை; ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
உள்நாட்டு ஆயுத தயாரிப்புக்கு ஆலோசனை
ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு

''ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்களை, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்குங்கள்,'' என, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.

BJP,Nirmala,Nirmala Sitharaman,நிர்மலா,நிர்மலா சீதாராமன்


ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களை, உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில், தமிழகம் மற்றும் உ.பி.,யில், 'காரிடார்' எனப்படும், தொழிற்சாலை வழித்தடம் அமைக்கப்படும் என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, இந்த சிறப்பு ராணுவத் தொழிற்சாலை வழித்தடம் அமைப்பது குறித்த, நாட்டின் முதல் ராணுவக் கண்காட்சி, சென்னையில், அடுத்த மாதம் நடக்க உள்ளது.இந்நிலையில், ராணுவ தளவாடங்களை, உள்நாட்டில் உற்பத்தி செய்வது குறித்த கருத்தரங்கம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிர்மலா சீதாராமன் கூறியதாவது:மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி, ராணுவ ஆயுதங்கள் தயாரிக்கும், இரண்டு தொழிற்சாலை வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.

உ.பி.,யில், ஆக்ரா, அலிகார், லக்னோ, கான்பூர், ஜான்சி, சித்திரகூட் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில், ஒரு வழித்தடம் அமைய உள்ளது. தமிழகத்தில், சென்னை, ஓசூர், கோவை, சேலம், திருச்சியை இணைக்கும் வகையில், மற்றொரு வழித்தடம் அமைய உள்ளது. ஆயுத உற்பத்தியின் மையமாக, நம் நாட்டை மாற்ற வேண்டும். அதற்கு, இத்துறையில், தனியார் நிறுவனங்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும்.

அதற்கேற்ற வகையில், தனியார் நிறுவனங்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

Advertisement

இத்துறையில் தற்போது, 37 லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆயுதத்தயாரிப்பில், அதிக அளவிலான நிறுவனங்கள் ஈடுபட வேண்டும்.

உள்நாட்டு ஆயுதத் தயாரிப்பு உற்பத்தியை அதிகரிப்பது, இத்துறையை மேம்படுத்துவது போன்றவை குறித்து, ஏற்கனவே, இதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும், புதிதாக ஈடுபட ஆர்வமாக உள்ள நிறுவனங்களும், தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம்.புதிய தொழில் வழிப்பாதை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
14-மே-201801:12:31 IST Report Abuse

Manianதமிழ் நாட்டில் தொழில் தொடங்க யாரும் நிலம் தர மாடடார்கள். சமுதாய சுரண்டல் கும்பல், அமெரிக்க கத்தோலிக்க சபை, போன்ற மதம் சார்ந்தவர்களிடம் இருந்து பணம் பெற்று, கூடாங்குளம் அணு உலைகளை தடை செய்ய முயன்ற அமெரிக்க தளவாட நிறுவனங்கள் இதை தடுக்கப் பார்ப்பார்கள். மேலும், சீரான மிஞ்சாரம் வேனும் என்றால், தனியாக மின் அம்பும் அமைத்து சூரிய ஒளி மூலம் மின்சாரம், கடலில் காராடி அமைத்து வரும் மின்சாரம் எல்லாம் அந்த தொழில்களுக்கே போகவேண்டும் . தனியார் முதலையிடு செய்வதை மத்திய அராசாங்க ஆனாய் மூலமே செய்ய வேண்டும். இப்படி வரும் மிஞ்சாரத்தை பொது மக்களுக்கு விற்க கூடாது. மேலும் ஜாதி-மதம்-இட ஒதுக்கீட்டில் தகுதி அற்றவர்கள் லஞ்சம் மூலம் பின் வாசல் மூலம் வரக்கூடாது. பணப் பரிவர்த்தனை நேரடியாக தொழில் நிறுவனங்களுக்கு செல்ல வேண்டும். இத்தடை தரகர்களாக திருடர்கள் கழக அரசியல் வியாதிகளை கட்டு படுத்தும். எந்த வித உள்ளூர் வரி, ஜி.எஸ்.டி 10 வருஷங்களுக்கு கூடாது. பாதுகாப்புக்கு உள்ளூர் போலீசை நம்பக் கூடாது. ஆயுதப்படை வேற்றார்களே இருக்க வேண்டும். அவர்களும் அடிக்கடி மாற்றப்பட வேண்டும்.தண்ணீர் தேவைக்கு கடல் நீரை அந்த நிறுவனங்களே அவர்களுக்கு கிடைக்கும் மிஞ்சரம் மூலம் பெற வேண்டும். அதில் பொது மஹாலுக்கு எந்த பகிர்மானமும் கிடையாது . வெளி நாட்ட்டு இந்தியர்கள் முதலீடு செய்தால் அவர்களுக்கு வரி கிடையாது. 10 வருஷம் கழித்து, 20 % வருமான வரியே கடடவேண்டும். அதன் பின் ஜிஎச்டி வரியம் தரவேண்டும் (இதுவே பல மேல் நாடுகளில் வெளிநாடடார் முதலீடை ஈற்கும்விதம்) . அப்போது போடுடா மூலதனம் எல்லாம் எடுத்து வி டதால், லாபத்திலேயே வரி கட்டுவார்கள். அண்ணல் இதெல்லாம் வெறும் கற்பனையே. என் என்றால் (1 ) முதலீடு சாடாதை மாரற எதிர் கட்சிகள் ஒத்துழைக்காது. நாடு நாசமாக் போயி, சைனாவிடம் ஒப்படைத்து அடிமைகளாக ஆனால் பணக்காரார்களாக வாழவே அவர்கள் விரும்புவார்கள்.அவர்களை சைனா கொன்றுவிடும். (2 ) உள் கட்ட அமைப்பு சீராக்க யாரும் பணம் தரமாடார்கள். அதில் இடை தரகர்களாக திருடர்கள் கழகம் போன்று நாடு பூறா அரசியல் ஒட்டுண்ணிகள் இருக்கிறார்கள். மரண தண்டனை மூலமே அவர்களை ஒழிக்க முடியும். (3 ) இங்கு ஓசி கேட்க்கும் மக்கள், வெளிநாடார் பலன் இல்லாமல் முதலீடு செய்து போண்டியாக வேண்டும் என்று சொல்வார்கள்.(4 ) 95 % இளைஜர்களுக்கு எந்த ஆளுமை திறமை, சிந்திக்கும் திறமை என்னும்போது, வெளி மானிலத்தாரை வரவிடாமல் தினசரி போராட்டம் நடத்துவார்கள்.(5) வேலை வாங்கிய மறுநாளே அதிக சம்பளம் வேண்டும் என்று கோடி பிடித்து, கோஷம் இட்டு, ஆலைகளை மூடிவிட கம்யூனிஸ்ட்டு காம்ரேட்டுகளுடன் திருடர்கல் கழகம், ப. மா க, வைகோ, திருமா வளவன் போன்ற அற்ப்பர்கள் போராட்டம் நடத்துவார்கள். (6 ) சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் வன்முறையை தூண்டி உற்பத்தியை தடை செய்ய பார்ப்பார்கள். ... ஆகவே, நிர்மலா, மோடி விரும்பும் மாற்றங்களை சமூக விரோதிகள், முடடாள் மக்கள் வர விட மாட்டார்கள். ஒரே வழி, 10 வருஷம் எமர்ஜென்சி கொண்டுவருதல் நன்று.

Rate this:
16-மார்-201817:32:38 IST Report Abuse

MurugeshSivanBjpOddanchatramராணுவ மந்திரி அவர்களே நீங்கள் எத்தனை நன்மை செய்தாலும் இந்த நன்றி கெட்ட தமிழர்கள் ஓட்டை திராவிஷங்களுக்கு விற்றுவிட்டு மோடி ஒழிக கோசம் மட்டும்தான் போடுவார்கள்

Rate this:
Govind Srinivasan - Worthing,யுனைடெட் கிங்டம்
13-மார்-201821:04:11 IST Report Abuse

Govind Srinivasanஆனால் வெங்கட்ராமனுக்கு பூணுல் அறுத்து தஞ்சாவூரில் அசிங்க படுத்தி மகிழ்ந்தது நமது திருட்டு கழகமும் திருட்டு முட்டாள் கழகமும். வரலாறை மறக்க வேண்டாம், மறைக்கவும் வேண்டாம் நண்பரே

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X