செம்மங்குடி கோவிலில் மஹாமேரு மகோற்சவம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செம்மங்குடி கோவிலில் மஹாமேரு மகோற்சவம்

Added : மார் 05, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவாரூர்: குடவாசல் அருகே, செம்மங்குடி ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவிலில், மஹாமேரு மகோற்சவம் நடந்தது. திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே, செம்மங்குடி ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, யாகசாலை பூஜையுடன், 20ம் ஆண்டு மஹாமேரு மகோற்சவம் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு தேவி மகாத்மிய பாராயணம் நடந்தது. நேற்று காலை, 7:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, 8:00 மணிக்கு, லலிதா திரிசதி ஹோமம்; 9:00 மணிக்கு, ஆனந்தவல்லி மஹாமேரு தேவிக்கு மஹாபிஷேகம்; 9:30 மணிக்கு, கடம் புறப்பாடு; 10:00 மணிக்கு, சுவாமிகள் மற்றும் மஹாமேருவுக்கு கலச அபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, கஜபூஜை, அஸ்வபூஜை, கோபூஜை; இரவு, 7:00 மணிக்கு, கிளி வாகனத்தில் உற்சவர் வீதியுலா; 7:30 மணிக்கு, வித்யா நவாவரண பூஜை; 10:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. இன்று காலை, 8:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம்; 11:30 மணிக்கு, சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆனந்தவல்லி கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை