தமிழக அதிகாரிகள் வருவதாக பீதி; கர்நாடக அணைகளுக்கு பாதுகாப்பு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழக அதிகாரிகள் வருவதாக பீதி
கர்நாடக அணைகளுக்கு பாதுகாப்பு

மைசூரு : தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு, கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதி அணைகளில், தமிழக அதிகாரிகள் ஆய்வு செய்ய வாய்ப்புள்ளதாக கருதி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழக அதிகாரிகள் வருவதாக பீதி; கர்நாடக அணைகளுக்கு பாதுகாப்பு


தமிழகத்தில், விவசாயம் செய்வதற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், காவிரி நதிநீர் தீர்ப்பாய உத்தரவின்படி, கர்நாடகாவிலிருந்து, தண்ணீர் திறந்துவிடும்படி, அம்மாநில தலைமைச் செயலருக்கு, தமிழக தலைமைச் செயலர், சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

பழனிசாமி கடிதம்


இதற்கு, 'காவிரி நீர்பிடிப்பு அணைகளில் குடிப்பதற்கு மட்டுமே தண்ணீர் உள்ளதால், தமிழகத்துக்கு திறந்து விட முடியாது' என, கர்நாடகா மறுப்பு தெரிவித்திருந்தது.

இதையடுத்து, தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக, தமிழகத்தின் நிலையை எடுத்துக் கூறி ஆலோசனை நடத்துவதற்கு, நேரில் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும்படி, கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, சித்தராமையாவுக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி, கடிதம் எழுதியிருந்தார்.
'தற்போதைய சூழ்நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது' என, முதல்வர் சித்தராமையாவும், நீர்வளத்துறை அமைச்சர், எம்.பி.பாட்டீலும் தெரிவித்திருந்தனர். இதற்கிடையில், கபினி அணையை திறப்பதற்காக, தமிழகத்தின் மன்னார்குடியிலிருந்து, விவசாயிகள் குழுவினர், நேற்று முன்தினம் கர்நாடகாவுக்குள் நுழைய முற்பட்டனர். அவர்கள், தமிழக - கர்நாடக எல்லையான, அத்திப்பள்ளியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

தீவிர சோதனைஇந்நிலையில், கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகளிலுள்ள, தண்ணீர் அளவை ஆய்வு செய்வதற்காக, தமிழக அதிகாரிகள் வரவுள்ளதாக, நேற்று பெங்களூரில் தகவல் பரவியது.

Advertisementஇதையடுத்து, காவிரி நீர்பிடிப்பு பகுதி அணைகளை சுற்றி, தடுப்புகள் அமைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ்., அணையின் நான்கு நுழைவு பகுதிகளிலும், தமிழக பதிவெண் உடைய வாகனங்கள், தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றன.

திடீரென, 'கர்நாடகா பதிவெண் உடைய வாகனங்களை, தமிழக அதிகாரிகள் வாடகைக்கு எடுத்து வரக்கூடும்' என கருதி, அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிர சோதனை நடத்த துவங்கினர்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
16-பிப்-201810:27:53 IST Report Abuse

Manianஇருக்குற தண்ணியை சரியாக சேமிக்காமல், தண்ணி அதிகம் தேவை இல்லாத நெல், பயிர்களை பயன் படுத்தாமல், சாயம், தோல் கழிவு நீரை கலக்கவிடாமல்,.... எதுவுமே செய்யாமல், கருணா கொள்ளை அடித்ததுபோல் நாமும் கொள்ளை அடிக்கலாம் என்ற முட்டால்களை காசு வாங்கி தேர்ந்தெடுக்கும் மக்கள், கர்நாடாகாவை குறை சொல்வதை விட்டு, தணீர் சேமிப்பை ஏன் செய்வதில்லை? அவன் தண்ணி தந்தாலும், அதை சேமித்து வைக்க என்ன செய்து இருக்கிரோம். நம் குற்றங்களை ஒப்புக்கொள்வது திராவிட நாகரிகம் ஆகுமா?

Rate this:
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
15-பிப்-201815:42:19 IST Report Abuse

Muruganஇந்த காவிரி நீரை பெறுவதர்குக்கு நாம் செய்யும் செலவை அணைகளையும், நீர் தேக்கங்களையும் கட்டி தன்னிகரற்ற மாநிலமாக தமிழ் நாட்டை மாற்றினால் , ஆந்திராகாரனும் கேரளாக்காரனும் வந்து கையேந்துவான்கள் நம்மிடம் .அதை செய்ய வேண்டும் என மக்களாகிய நாம் அடுத்தமுறை தேர்தலில் அணி இறங்கும் அரசியவாதிகளுக்கு கெடுவைத்து தேர்ந்து எடுப்போமென அறிவிப்போம் .வெற்றி இளம் வாக்காளர்களே உங்கள் கையில் தமிழகம் என்பதை மறக்காதீர்கள்.................................

Rate this:
shankar - chennai,இந்தியா
15-பிப்-201814:39:23 IST Report Abuse

shankarகர்நாடகா இந்தியாவில் தான் இருக்கிறது என்று மறந்துவிட்டார்கள் போலும் கர்நாடக மாநிலம் என்று ஒன்று இந்தியாவில் இருப்பது தெரிந்ததே தமிழகத்தை எதிர்த்து காவிரி பிரசினை செய்தால் தான் இல்லையென்றால் இது இருண்ட மாநிலம்தான். அந்த மடையர்களை எவ்வளவு திட்டினாலும் ஒரைக்காது நம் மாநிலத்தில் தயாராகும் மின்சாரத்தை மட்டும் மானம் கெட்டு உபயோக படுத்துகிறார்கள் கேட்டால் NLC என்ன அவர்கள் சொத்தா என்று வக்கணையான கேள்வி வேறு.

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
15-பிப்-201813:14:40 IST Report Abuse

Jaya Ramமடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்றொரு பழமொழி உண்டு , ஆகையால் உங்களிடம் தண்ணீர் இல்லையென்றால் திறந்த மனதுடன் எந்த அதிகாரிகளும் எங்கள் அணைகளை பார்வையிடலாம் என்று வெளிப்படையாக கூறலாமே வாதத்திற்கு மருந்து உண்டு ஆனால் பிடிவாதத்திற்கு மருந்து இல்லை எனவே இந்நிலையில் தமிழக அரசானது மேயாரில் அணைகட்ட துவங்கலாம் செல் போனில் இதைப்பற்றி நிறைய செய்திகள் வருகின்றன

Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
15-பிப்-201810:44:13 IST Report Abuse

raghavanஇவனுங்களுக்கு, மகாதாயி ன்னா ஒரு நிலைப்பாடு காவேரின்னா வேற நிலைப்பாடு. வழக்கம் போல மத்திய அரசு நழுவிடும். ரஜினி பாடுதான் திண்டாட்டம்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-பிப்-201809:29:57 IST Report Abuse

Srinivasan Kannaiyaதவித்த வாய்க்கு தண்ணீர் கொடு என்கிறார்கள்... ஆனால் இவர்களோ....

Rate this:
P. SIV GOWRI - Chennai,இந்தியா
15-பிப்-201808:30:37 IST Report Abuse

P. SIV GOWRIமழை வந்தால் மட்டும் தண்ணீரை இங்கு திறந்து விடும் இவ்ர்களை என்ன செய்வது

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-பிப்-201807:49:29 IST Report Abuse

ஆரூர் ரங்நீர்த்தட்டுப்பாட்டுக்கு உண்மைக்காரணம் பசுமைப்புரட்சி என்ற பெயரில் வீரிய ரகங்களை பயிரிட்டதுதான் . இவை இயற்கை விவசாய பயிர்களைவிட நான்கைந்து மடங்கு நீர்தேவையுள்ளவை .இரு மாநிலங்களுமே காவிரி ஒப்பந்ததைமீறிபல லட்சம் ஏக்கர் நிலங்களில் கூடுதலாக நீர்ப்பாசனம் செய்துவருவதும் உண்மை. இதனால் பரம்பரையாக விவசாயம் செய்பவர்கள் பாதிக்கப்பட்டுளள்னர்

Rate this:
Prabhakaran - Delhi,இந்தியா
15-பிப்-201809:52:15 IST Report Abuse

Prabhakaranகாவேரி தீர்ப்பாணையம் தமிழ்நாட்டில் பயிரிடும் நிலப்பரப்பை 28 லட்சம் ஏக்கரில் இருந்து 24 லட்சம் ஏக்கராக குறைத்துள்ளது. ஆனால் கர்நாடகாவில் 1991 ல் 11 லட்சம் ஏக்கராக வரையறுக்கப்பட்ட பாசன நிலம் தற்போது 21 லட்சம் ஏக்கராக மாற்றியுள்ளது காவேரி தீர்ப்பாணையம். இவர்களுக்கு தமிழர்களை குறை சொல்வதே வேலையா போச்சு. உங்களுக்கும் சேர்த்துதான் அணைத்து தமிழர்களும் போராடுகிறார்கள். மரம் பட்டுபோனவுடன் வேறு மரம் தேடி இடம் பெயரும் சுயநல பட்சிகளிடம் என்ன எதிர் பார்க்க முடியும்?...

Rate this:
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
15-பிப்-201807:05:06 IST Report Abuse

Samy Chinnathambiநாம ஏன் கர்நாடகத்தின் அணையை விட மிக உயரமான அணைக்கட்டை அதன் அருகிலேயே கட்ட கூடாது? நமக்கு தண்ணி கொடுக்காதவன் அதிக மழை பெஞ்சா தண்ணிய நம்ப பக்கம் திறந்து விட கூடாது...நாம என்ன வெறும் வடிகாலா? எல்லா பயலும் அங்கேயே அணை ஒடஞ்சி சாகட்டும்....... துன்பத்தை மட்டும் நாம ஏன் ஏற்க வேண்டும்............... அவனுங்களும் சேர்ந்து துன்பத்தை ஏர்கட்டும்..........

Rate this:
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
15-பிப்-201807:02:25 IST Report Abuse

Samy Chinnathambiஇந்த தமிழக அரசுக்கு என ஏதாவது நீர் வள திட்டம் உள்ளதா? காவிரி நீரை மட்டுமே எதிர்பார்த்து நாம் இருக்க முடியாது.......தமிழக அரசு முப்பதாயிரம் கோடியை செலவழித்தால் முப்பது இடங்களில் கடல் நீரை சுத்திகரித்து நன்னீரை கொடுக்கும் பிளாண்ட்களை அமைக்கலாம்........இந்த தொகை என்னை கேட்டால் மிகவும் சொற்பமான தொகை.....இதை கூட செலவழிக்க திராணியில்லாமல் திட்டமிடல் இல்லாமல் ஊழல் லஞ்சம் , ஓட்டுக்கு பணம் இந்த சின்ன வட்டத்திற்குள்ளேயே தான் தமிழக அரசு நீண்ட காலமாக சிக்கி தவிக்கிறது......... இதற்கு காரணம் பொறுப்பற்ற மக்களும் கூட ..................

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement