வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க புதிய திட்டம்... 'இந்தியாவில் படியுங்கள்' ரூ.300 கோடி செலவில் களமிறங்குகிறது மத்திய அரசு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'இந்தியாவில் படியுங்கள்'
வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க புதிய திட்டம்...
ரூ.300 கோடி செலவில் களமிறங்குகிறது மத்திய அரசு

வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களை நம் நாட்டில் படிக்க ஊக்குவிக்கும் வகையில், 'ஸ்டடி இன் இந்தியா' எனப்படும், 'இந்தியாவில் படியுங்கள்' திட்டத்தை, மத்திய அரசு, விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. 300 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், உயர்மட்ட அளவில் இறுதி செய்யப்பட்டு விட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

Foreign Students, Central Government, Study in India, Prime Minister Narendra Modi,வெளிநாட்டு மாணவர்கள்,  ஸ்டடி இன் இந்தியா, பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார சீர்திருத்தங்கள் , இந்தியாவில் படியுங்கள், இந்தியா, மோடி புதிய திட்டம்,  Economic Reforms, indiavil padiyungal, India, Modi New Plan,மத்திய அரசு,


கடந்த, 2014ல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றது முதல், பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு தயாரிப்பு


உள்நாட்டில் தயாரிப்பை அதிகரிக்கவும், முதலீடுகளை குவிக்கவும், அதன் மூலம், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.பிரதமர் மோடியின் உத்தரவுப்படி, 'டிஜிட்டல் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி' உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

கறுப்புப் பணத்தை ஒழிக்க, செல்லாத ரூபாய் நோட்டு திட்டமும், நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை உறுதி செய்ய, ஜி.எஸ்.டி.,யும் அமல்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, தற்போது, வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்பதை ஊக்குவிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


1 லட்சம் மாணவர்கள்


இதற்காக, 'ஸ்டடி இன் இந்தியா' திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக, உயர் மட்டக் கூட்டம் நடத்தப்பட்டு, திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக,தகவல்கள் கூறுகின்றன.இத்திட்டப்படி, இந்தியாவில் உள்ள கல்வி மையங்களில் படிக்க, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒருலட்சம் மாணவர்களை, ஒவ்வொரு ஆண்டும் சேர்க்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: 'இந்தியாவில் படியுங்கள்' திட்டத்துக்கு, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். முதற்கட்டமாக, உலகின், 10 நாடுகளில் இருந்து மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், இந்தியாவில் படிக்க முக்கியத்துவம் தரப்படும்.

கடந்த, 2015 - 16ம் கல்வியாண்டில், இந்தியாவில் உள்ள கல்வி மையங்களில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 45 ஆயிரத்து, 424 மாணவர்கள் படித்தனர். இவர்கள், 165 நாடுகளைச் சேர்ந்தவர்கள்.இந்த நாடுகளில், முதல், 10 நாடுகள், புவியியல் அடிப்படையில் நமக்கு நெருக்கமானவை.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குறைந்த செலவில் கல்வி


இந்தியாவில் தரம் வாய்ந்த கல்வியை குறைந்த செலவில் பெற முடியும் என்பதை, உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் நோக்கில், 'இந்தியாவில் படியுங்கள்' திட்டம் அமல்படுத்தப்படுவதாக,அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., உட்பட, 115 கல்வி மையங்கள், சிறப்பான கல்வியை வழங்குவதில், உலகளவில் புகழ் பெற்றவையாக உள்ளன.

Advertisement

என்.ஐ.டி., எனப்படும், தேசிய தொழில்நுட்ப கல்வி மையம், என்.ஐ.ஆர்.எப்., எனப்படும், நேஷனல் இன்ஸ்டிடியூட் ரேங்கிங் பிரேம்வொர்க் ஆகியவற்றில் சேர்ந்து படிக்கவும், வெளிநாட்டு மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலக நாடுகளை ஒப்பிடுகையில், நம் நாட்டில், மிக குறைந்த செலவில் கல்வி கற்க முடியும். ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க, குறைந்தபட்சம், 25 லட்சம் ரூபாய் செலவாகிறது. இந்தியாவில், அதே படிப்பை முடிக்க, மூன்று லட்சம் ரூபாய் இருந்தால் போதும்.

2வது இடத்தில் தமிழகம்

நம் நாட்டில் உள்ள கல்வி மையங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், பி.டெக்., - பி.பி.ஏ., - பி.ஏ., - பி.எஸ்சி., - பி.காம்., ஆகிய பாடப்பிரிவுகளில் ஆர்வம் காட்டுகின்றனர். தவிர, 2,000 வெளிநாட்டு மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கின்றனர். வெளிநாட்டு மாணவர்கள், அதிகம் படிக்கும் மாநிலமாக, கர்நாடகா திகழ்கிறது. மொத்த வெளிநாட்டு மாணவர்களில், மூன்றில் ஒரு பங்கினர், கர்நாடகாவில் படிக்கின்றனர். வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதில், தமிழகம், மஹாராஷ்டிரா, உ.பி., ஆகிய மாநிலங்கள், அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ramesh - doha,கத்தார்
14-பிப்-201821:23:38 IST Report Abuse

S.Rameshநமது மாணவர்களுக்கு இலவசமாக கல்வி தராமல் தனியாரிடம் கல்வித்துறையை வளரவிட்டிருக்கும் நமது அரசுக்கு வெளிநாட்டு மாணவர்களின் மீது என்ன அக்கறையோ

Rate this:
mani -  ( Posted via: Dinamalar Android App )
14-பிப்-201817:41:26 IST Report Abuse

maniஇன்னும் நம் சட்ட திட்டங்கள் மிக மோசமாக உள்ளது. ஏன் என்றால் இன்னும் நம்நாட்டில் உள்ள பெண்களுக்கு நம்மால் முறையான பாதுகாப்பு கொடுக்க முடிவதில்லை. very very important is our country need more secure system then we have to think about....

Rate this:
alexandrte - france,பிரான்ஸ்
14-பிப்-201816:57:15 IST Report Abuse

alexandrteVery good idea but be carefull with african nationals.Don't admit them in india.they come to india as a student but specialzed in drugs and sex.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
14-பிப்-201816:16:03 IST Report Abuse

Endrum Indianநம்ம பசங்க இந்த வெள்ளையை நாக்கை தொங்க போட்டுகொண்டு எதிர்ப்பார்த்துக் கொண்டே இருப்பார்கள் ஏன்னா இதுங்களுக்கு Morals என்று ஒண்ணுமே இல்லை.

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
14-பிப்-201815:36:36 IST Report Abuse

dandyசரி இங்கு வரும் வெளி நாட்டு மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது யார் ..?

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
14-பிப்-201815:35:59 IST Report Abuse

dandyஇந்திய கல்வியின் தரம் அவ்வளவு நல்லது ..ஆப்பிரிக்க நாடுகள் கூட அங்கீகரிப்பதில்லை .. பக்கத்துக்கு நாட்டின் GRADE 12 தரத்துடன் எந்த உலக பல்கலைக்கழகங்களிலும் அனுமதி பெறமுடியும்..சிங்கப்பூர் ...இந்திய முதல் பட்டங்களை அங்கீகரிப்பதில்லை ...மலேஷியா ..இந்த முயற்சி செய்தது ..ஆக கடைசியில் வந்து இறங்கியது போதை பொருள் விற்கும் ஆபிரிக்க கூட்டம்

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
14-பிப்-201815:32:39 IST Report Abuse

pradeesh parthasarathyமேலும் பல பச்சமுத்துக்களும் , ஜெகத்ரட்சகன்களும், எஸ் எ ராஜாக்களும் , ஜேப்பியார்களும் உருவாவதற்கு வாழ்த்துக்கள் .... கல்வி என்பது சிறந்த வியாபாரமாகிவிட்டது....

Rate this:
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-201815:11:15 IST Report Abuse

PRABHUவெளிநாட்டு மாணவர்களை , இந்து முன்னணி, வி ஐச் பி , சிவா சேனா, அனுமன் சேனா , பஜ்ராஜ் தள் இவர்களிடமிருந்து எப்படி காப்பாத்துவீர்கள்..... ஒருநாள் வரும் சுற்றுலா பயணிகளையே விடாமல் துரத்தி மதசேட்டைகள் செய்கிறார்கள்....இவர்களிருக்குமிடத்தில் நான்கு வருடம் எப்படி படிக்க முடியும்..... வெளிநாட்டிற்கு போய் பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் இந்திய எவ்வளவு பின்தங்கியுள்ளதுன்னு.....

Rate this:
sundar - Hong Kong,சீனா
14-பிப்-201812:46:00 IST Report Abuse

sundarவரவேற்போம், மற்ற நாடுகளைவிட இங்கு எல்லாம் குறைந்த செலவு. நீட் எக்ஸாம் வந்ததே இதற்குத்தான். இவர்களுக்கு என இடங்கள் அதிகப்படுத்தலாம், நம் நாட்டில் வளரத்துடிக்கும் புதியதலைமுறைகளை நசுக்காமல்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201808:45:49 IST Report Abuse

Srinivasan Kannaiyaசீதோஷண நிலையை கருத்தில் கொண்டால் கன்னடம் முன்னே நிற்பது சரிதான்,,,

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement