போலி ஐ.டி. அதிகாரிக்கும் மாதவனுக்கும் தொடர்பில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலி ஐ.டி. அதிகாரிக்கும் மாதவனுக்கும் தொடர்பில்லை

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
போலி ஐ.டி. அதிகாரிக்கும் மாதவனுக்கும் தொடர்பில்லை

சென்னை: தீபா வீட்டில் நடந்த போலி ஐ.டி. ரெய்டிற்கும், மாதவனுக்கும் தொடர்பில்லை என போலீசார் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணண் மகள் தீபாவின் வீட்டிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரி என் கூறி போலி அதிகாரியாக பிரபாகரன் என்பவர் ரெய்டில் ஈடுபட்டார். ஊடகங்கள் அங்கு கூடியதையடுத்து அங்கிருந்து போலி அதிகாரி பிரபாகரன் தப்பிசென்றார். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் நேற்று பிரபாகரன் மாம்பலம் போலீசில் சரணடைந்தார். அப்பொழுது தீபாவின் கணவர் மாதவன் தான் தன்னை ரெய்டில் ஈடுபட சொன்னதாகவும், அவர் தான் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்ததாகவும், கூறினார்.

இந்நிலையில் போலிசார் விசாரணையில் பிரபாகரன் தான் போலி ஆவணங்களை தயாரித்து ரெய்டிற்கு சென்றதாகவும், பங்கு சந்தையல் நஷ்டம் ஏற்பட்டதால் பணம் பறிக்க இச்செயலில் ஈடுபட்டதாகவும், பிரபாகரன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
14-பிப்-201807:39:29 IST Report Abuse
K.Sugavanam என்ன கொடுமையப்பா? இது..நம்பிட்டோம்,நம்பிட்டோம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை