தமிழக கோவில்களில் கடைகளை அகற்ற உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக கோவில்களில் கடைகளை அகற்ற உத்தரவு

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (34)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தமிழக கோவில்களில் கடைகளை அகற்ற உத்தரவு

சென்னை: தமிழக கோவில்களில் உள்ள கடைகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து தமிழக கோவில்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்: ‛‛ தமிழகத்தில் உள்ள கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் வளாகங்கள், மற்றும் கோவில் மதில் சுவர்களை ஒட்டியுள்ள கடைகளை உரிய வழிமுறைகளை பின்பற்றி அகற்ற வேண்டும். கோவில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோவிலில் உள்ள சிற்பங்களுக்கு சேதம் ஏற்படதாவாறு மின் வயரிங் செய்யப்பட வேண்டும்.

பக்தர்கள் கொண்டு வரும் நெய், எண்ணெய் ஆகியவற்றை சேகரித்து அன்றாட பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பெரிய கோவில்கள் அருகே தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கோவில்களில் தீ தடுப்பு கருவிகள் பொருத்தப்பட வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை தீத்தடுப்பு கருவிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

இதுகுறித்து தணிக்கை செய்ய தலைமை செயலா் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும். அதற்கு தேவையான அதிகாரிகள், வல்லூநர்கள், ஊழியர்கள், நிதிகள் குறித்து 2 வாரங்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அமைக்கப்படவுள்ள குழுவிற்கு கோவில் நிர்வாகம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவேண்டும். இவ்வாறு தனது உத்தரவில் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-பிப்-201803:30:28 IST Report Abuse
Mani . V "எங்களுக்கு (எனக்கு?) மணல் குவாரிகளின் மூலமே பல ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. கோவில்களில் உள்ள கடைகளின் மூலம் சில ஆயிரம் மட்டுமே வருமானம் வருகிறது. எனவே கோவில்களில் உள்ள கடைகளை உடனே அகற்ற உத்தரவிடுகிறேன்"
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-பிப்-201802:54:58 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அனைவருடைய ஆர்வக்கோளாறை பார்த்தா பாவமா இருக்கு. இவரு ஒண்ணும் கடையை நாளைக்கே மூடி காலி பண்ணிட போறதில்லை. பத்து வருஷம் ஆனாலும் எதுவும் மாறப்போறதில்லை. அதான் வெவரமா "உரிய வழிமுறைகளை பின்பற்றி அகற்ற வேண்டும்" ன்னு நல்லா அடித்தளம் போட்டு வச்சிருக்காரே. அது என்ன "உரிய வழிமுறை"ன்னு எவனுக்காவது தெரியுமா? ஹூஹூம்.. , லஞ்சம் கொடுத்தால் கண்ணை கட்டிக்கொள்வார்கள்.. இவங்களுக்கு தெரிஞ்ச வழிமுறை அதுமட்டும் தான்.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
13-பிப்-201823:42:10 IST Report Abuse
Kuppuswamykesavan ஒன் சைடா ஆர்டர் போடுவதைவிட, வாழ்வாதாரத்தை இழக்க போகும், சிறு வியாபாரிகளுக்கு, மாற்று இடங்களை, அதே நேரம் ஒதுக்கீடு செய்வதுதானே?, நியாயம் தர்மம் எனலாம்.
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
14-பிப்-201806:23:37 IST Report Abuse
jaganஎல்லாத்துக்கும் ஒதுக்கீடு ....போய்யா போ...
Rate this:
Share this comment
Narayanan K S - Chennai,இந்தியா
14-பிப்-201806:56:00 IST Report Abuse
Narayanan K Sகோவில் சொத்துக்கள் மற்றும் இடங்கள் வியாபாரிகள் சொத்துக்கள் அல்ல. விருப்பம் போல் கடை போடுவதற்கு. முதலில் கடை போட்டு பின் காலி செய்ய சொன்னபோது அதற்க்கு மாற்று இடம் வேண்டும் என்று உரிமை கொண்டாடுவது சரியல்ல....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-பிப்-201823:13:03 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அப்புறம் இந்த பிரச்சினையில் மக்களை ஏமாற்ற கோவிலையெல்லாம், அது கோவிலே இல்லே, சர்ச்சுன்னு எழுதி கொடுத்துறாதீங்க. மூட சொன்ன டாஸ்மாக்கை தொறக்குறதுக்காக, ஹைவேஸ் எல்லாம் சாதா ரோடுன்னு மாத்தின கண்ணியவான்கள் ஆச்சே நீங்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-பிப்-201823:11:14 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஹைவேஸ்லே இருக்குற டாஸ்மாக், பார்களை சுப்ரீம் கோர்ட்டு எடுக்க சொன்னா மாரியா ஈப்பீஸ் அவர்களே? கர்ப்பக்கிரகம் இருக்குற இடம் தான் கோவில், மத்த பிரகாரம் எல்லாம் கோவில் இல்லன்னு நீயே உன் வண்டுமுருகன் வக்கீல்களை விட்டு சுப்ரீம் கோர்ட்டில் சொல்லி வாதாடுவீர்களா? அதை இந்த புகழ்பெற்ற சுப்ரீம் கோர்ட்டு சரின்னு சொல்ல, டாஸ்மாக்கை கூட உள்ளே நீர் திறந்து வைப்பீர்களா?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-பிப்-201821:36:46 IST Report Abuse
Pugazh V மடத்தனமான முடிவு. கோவிலுக்கு வந்து கால்கடுக்க வரிசையில் நின்று தரிசனம் முடிந்து வந்து ஒரு காபி, டீ , கலர் குடிக்க வேண்டாமா? அர்ச்சனை தட்டு வாங்க கடை வேண்டாமா..
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
14-பிப்-201801:49:10 IST Report Abuse
Agni Shivaமடத்தனமான கூமுட்டை கருத்து. மூர்க்கனே இது ஹிந்துக்கள் விஷயம். ஹிந்துக்கள் பார்த்து கொள்வார்கள். அவர்களுக்கு குடிக்க காபி டீ, கலர், குடிக்க வேண்டுமா, அல்லது அர்ச்சனை தட்டு வாங்க வேண்டுமா அதை எங்கு வாங்கவேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள்....
Rate this:
Share this comment
Narayanan K S - Chennai,இந்தியா
14-பிப்-201807:02:15 IST Report Abuse
Narayanan K Sநல்ல முடிவு தான். கோவில் மற்றும் கோவில் இடங்கள் பக்தர்கள் சுற்றிவந்து ஓய்வு எடுப்பதற்க மட்டுமே. வியாபாரம் செய்வதற்கு அல்ல ....
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
13-பிப்-201820:51:57 IST Report Abuse
அம்பி ஐயர் சுவாமி சிலைகளையும் நகைகளையுமே திருடி விற்று மற்றும் கடத்தி கொள்ளை லாபம் பார்த்துவிட்டனர்..... அதிகாரிகள் சில அர்ச்சகர்கள் மற்றும் அமைச்சர்கள் / அரசியல் வியாதிகள்.... இனி கடைகளைக் காலி செய்தாலென்ன செய்யாவிட்டாலென்ன.... அவர்கள் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றால் இன்னும் ஒரு மாமாங்கத்துக்குக் கடைகளைக் காலிசெய்ய வேண்டியதில்லை.... நடைபாதை நடப்பதற்கே.... ஆனால் அரசியல் வியாதிகள் / அதிகாரிகள் பணம் வாங்கிக் கொண்டு நடைபாதையில் கடைகள் வைக்கவும் அனுமதி கொடுத்து நடைபாதை வியாபாரிகள் சங்கம் என அதற்கும் அனுமதி கொடுத்து.....அநியாயம் செய்தார்கள்... எங்கே சென்னையில் எந்த நடைபாதையிலாவது ஆக்கிரமிப்பு இல்லாமல் மக்கள் சுதந்திரமாக நடக்க முடிகிறதா....??? அது போலத்தான்.... அரசாங்கத்திடமிருந்து கோவில்களைக் கைப்பற்ற வேண்டும்.... ஆனால் யாரிடம் ஒப்படைப்பது என்பதிலும் சிக்கல் தான் எழுகிறது.... நேர்மையான நல்லவர்களைத் தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது தமிழ்நாட்டில்... என்ன செய்ய...??? ஈஸ்வரோ... ரக்‌ஷது...
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
14-பிப்-201801:52:54 IST Report Abuse
Agni Shivaநல்லவர்கள் ஆயிரமாயிரம் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் குடத்தில் போட்ட விளக்கு போல இருக்கிறார்கள். aar எஸ் எஸ் உட்பட ஹிந்து இயக்கங்கள் மற்றும் ஹிந்து சமய தொண்டு நிறுவனங்களின் கைகளில் கோவில்கள் செல்லுமேயானால் கோவில்கள் பழைய பொலிவு பெறும். ஆன்மிகம் மீண்டும் தழைக்கும்.. ஹிந்துக்கள் மத அறிவு பெறுவார்கள்..மத மாற்றம் தடுத்து நிறுத்தப்படும்....
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-பிப்-201820:49:32 IST Report Abuse
Bhaskaran கடைகளை அகற்றுவதில் மாற்றுத்திறனாளி அமைச்சருக்கு வேண்டியவன் அப்படின்னு பார்க்காமல் எல்லோரையும் அகற்றிவிடவேண்டும் பின் பக்தர்குழுவின் ஆலோசனைந்தபடிமட்டும் எங்கு கடைகள் vanthaal பாதுகாப்பாக இருக்குமோ அங்கு வைக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
13-பிப்-201820:47:49 IST Report Abuse
raghavan கடைகளை எடுத்தால் மட்டும் போதாது. வருமானம் வரும் என்று டிவி சீரியல்கள், திரைப்படங்கள் எடுக்க அனுமதிப்பது போன்றவைகளும் தடுக்கப்பட வேண்டும். கடவுளை தரிசிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் வரும் பக்தர்கள் மட்டும் வந்தால் போதுமானது.
Rate this:
Share this comment
Cancel
13-பிப்-201820:41:53 IST Report Abuse
ராதாகிருஷ்ணன் நல்ல முடிவு. வியாபாரிகள் பாதிகாதவாறு முடிவு எடுத்தால் நல்லது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை