காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (40)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை

ஐதராபாத்: 'தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில், காதலர் தினத்தன்று, கிளப் மற்றும் ஓட்டல்களில், சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது' என, பஜ்ரங்தள் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம் முழுவதும், காதலர் தினம், நாளை(பிப்.,14) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, பூச்செண்டுகள், பரிசு பொருட்கள் விற்பனை, களைகட்ட துவங்கி உள்ளன.இந்நிலையில், 'வெளிநாட்டு கலாசாரமான காதலர் தினத்தை, இந்தியாவில் கொண்டாடக் கூடாது' என, பஜ்ரங்தள் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இதையடுத்து, 'ஐதராபாதில் உள்ள கிளப் மற்றும் ஓட்டல்களில், காதலர் தினத்துக்காக, சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது' என, பஜ்ரங்தள் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், வாழ்த்து அட்டை, பரிசு பொருட்கள், பூங்கொத்து விற்கும் கடைகளிலும், காதலர் தினத்துக்காக, ஸ்பெஷலாக எதுவும் விற்பனை செய்யக் கூடாது என்றும், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அன்று, பொது இடங்களில் காதலர்கள் தாக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்து உள்ளதால், ஐதராபாத்தில், இளைஞர்கள் கூடும் இடங்களில், போலீசார் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-201813:53:03 IST Report Abuse
SALEEM BASHA Bajrang thala amaippu ivvaru seivathu thavarilla.Ithai aadharippavarkal avarkal veettu pengal avvaru kadalar dinam kondadinal oppukolvarkala.
Rate this:
Share this comment
Cancel
Scorpio - Alaska,யூ.எஸ்.ஏ
14-பிப்-201807:23:46 IST Report Abuse
Scorpio அமேரிக்காவில் லவ்வுக்கு காப்பி ரைட் யாரோ போட்டுள்ளதாக ஒரு வதந்தி - இனி அதுவும் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் போல - கப்பம் கட்டிட்டு தான் அப்புறம் எல்லாம் -
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-பிப்-201804:32:49 IST Report Abuse
Kasimani Baskaran காதல் இல்லை என்றால் பிரபஞ்சமே ஸ்தம்பித்துப்போகும்...
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-பிப்-201811:32:32 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஹூம்.. உங்களுக்கு தெரியுது.. பிரபஞ்சத்தை ஆள்வதாக நினைத்து உலகம் சுற்றும் சிலருக்கு தெரியவில்லையே....
Rate this:
Share this comment
Cancel
Bala Subramani - Pittsburgh,யூ.எஸ்.ஏ
14-பிப்-201803:34:04 IST Report Abuse
Bala Subramani ஒன்றும் பிரச்சனை இல்லை காதலித்தவர்களை திருமணம் செய்துவைத்தால் போதும். அப்பொழுது தெரியும் கள்ள காதலா? இல்லை நல்ல காதலா? என்று.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-பிப்-201800:23:25 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம், கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம், ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே. - முண்டாசுக்கவிஞன், பாரதி.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-பிப்-201800:21:25 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ராமனின் மோதிரத்தை கொண்டு போய் சீதையிடம் சேர்த்து சீதா-ராமரின் காதலை வளர்த்தவன் அனுமன், திரும்பி வந்து "கண்டேன் சீதையை" - முதலில், "கண்டேன்" என்று சொல்லி ராமனின் மனதுக்கு ஆறுதல் சொன்னாராம், கம்பரின் சொல் விளையாட்டில் உள்ள காதல். முதலில் "சீதையை" என்று சொன்னால், "கண்டேன்" என்பதற்குள் ராமன், என்னவாயிற்றோ என்று நினைத்து வருந்துவான் என்று நினைத்தது அனுமன் சீதா-ராமரின் காதலை அவ்வளவு உயர்வாக பார்த்ததால் தானே? அப்படி காதலை வளர்த்த அனுமாரின் வானர சேனை, காதலை எதிர்ப்பது அவ்வளவு உசிதமில்லை. அதீத அன்பும், காதலும் பக்தியின் இருவேறு தோற்றங்களே. கண்ணன் மேல் கொண்ட காதலுக்கு அடையாளம் ராதை. மால் மேல் கொண்ட காதலுக்கு அடையாளம் ஆண்டாள் கோதை. காதல் பருவத்தில் வந்த அபரீத உணர்வை பக்தி கலந்து பாடியவை தான் நாச்சியார் திருமொழி, சவுந்தரிய லகரி போன்ற பக்தி படைப்புகள். இளைமையை துறக்க முடியாமல் அதன் வேகத்தை பக்தியாக வடித்தார்கள். காரைக்கால் அம்மையாரும், ஔவையாரும் அதன் வேகத்தை உணர்ந்து மூப்பை வரமாக பெற்றார்கள். காதல் தவிர்க்க முடியாதது. ஆதலினால் காதல் செய்வீரே
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-பிப்-201813:58:29 IST Report Abuse
Sanny கண்டேன் சீதையை யாரிடம் இருந்து காப்பி அடித்தீர்கள், லொள்....
Rate this:
Share this comment
Cancel
Kumar - Chennai,இந்தியா
14-பிப்-201800:14:01 IST Report Abuse
Kumar காதலர் தினம் என்பதை கலாச்சார சீரழிவு தினம் என்று பெயரிடவேண்டும் அல்லது தவறொழுக்க தினம் என்று பெயரிடவேண்டும். பெற்றோர்கள் இதனை உற்சாகப்படுத்தாமல் தங்களது பிள்ளைகளை அறிவுறுத்தவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
13-பிப்-201822:46:32 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி விஷ் யு ஆல் ஹாப்பி வாலெண்டின்ஸ் டே. ஐ லவ் யு சோ மச் தினமலர். அண்ட் மங்கி மவ்ஸ், சன்னி, ரீஸ்வரன், பையர் சிவா, அண்ணா ஹே ஊறா சுத்தா போரேன், ஜாலீ.
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-பிப்-201805:09:42 IST Report Abuse
Sanny பரவாய் இல்லையே, நந்தினி திவ்விய பாரதி சகோதரிக்கும் எனது குடும்ப சார்பாக ( அதோடு உங்க மழலை தமிழை பார்த்து விழுந்து, விழுந்து சிரிக்கும் எனது மகளும்) உங்களுக்கு வாழ்த்துக்கள். But behave your limit....
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
13-பிப்-201822:41:35 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி பன்வாலன்டின்ஸ் டே அப்டீன்னு செலிப்ரட் பண்ணமான்னு சொல்லீ வச்சி போட்ருக்காங்கலமா. அங்கல்லம் லீவு கொடுக்குவங்களா. ஜாலியாட்டமா இருந்துவச்சிரும்.
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
13-பிப்-201821:09:00 IST Report Abuse
கைப்புள்ள காதலர்கள், காதலர் தினம் என்ற பெயரில் ரோட்டிலேயே எல்லா கருமத்தயும் செய்து தொலைக்காதவரை இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. மேற்கத்திய பாணியை கடைபிடிக்கிறேன்னு சொல்லி கேனத்தனமான நடந்து கொள்வதுதான் பிரச்சினையே. சிலதெல்லாம் வெளிநாட்டுக்கு சரி ஆகும். நம்ம ஊருக்கு ஒத்து வராது. ஆகையால் கண்ணியமாக நடந்துகொண்டால் ஓகே. இல்லைனா நாறி போக வேண்டியது தான் நாறி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை