முதல்வருடன் ஸ்டாலின் சந்திப்பு; 27 கோரிக்கைகள் வைத்தார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வருடன் ஸ்டாலின் சந்திப்பு; 27 கோரிக்கைகள் வைத்தார்

Updated : பிப் 13, 2018 | Added : பிப் 13, 2018 | கருத்துகள் (48)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சென்னை: முதல்வர் பழனிசாமியை, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து போக்குவரத்து கழகத்தை சீர் செய்வது குறித்த 27 பரிந்துரைகளை வழங்கினார்.


சந்திப்பு

தமிழகத்தில் கடந்த மாதம் திடீரென பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் பஸ் கட்டண உயர்வு குறித்து ஆய்வு நடத்திட தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்ட குழு தனதுஅறிக்கையை ஸ்டாலினிடம் சமர்பித்தது. இதனை முதல்வர் பழனிசாமியிடம் ஒப்படைக்க திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக நேரம் கேட்கப்பட்டது.நேரம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து இன்று தலைமை செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் முதல்வர் பழனிசாமியை ஸ்டாலின் சந்தித்து, போக்குவரத்து கழகத்தை சீர் செய்வது குறித்த திமுகவின் அறிக்கையை வழங்கினார்.27 பரிந்துரைகள்


பின்னர் நிருபர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது: போக்குவரத்து கழகத்தை எப்படி சீரமைப்பது குறித்து ஆராய திமுக சார்பில் குழு அமைப்பட்ட குழு 27 பரிந்துரை வழங்கியுள்ளது. இதன்படி செயல்பட்டால், மக்கள் தலையில் பஸ் கட்டணத்தை சுமத்த வேண்டிய அவசியமில்லை.
இந்த அறிக்கையின்படி, போக்குவரத்து கழகத்தை மக்களின் சேவையாக கருதி நஷ்டத்தை அரசே ஏற்க வேண்டும்.டீசல் மீதான கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரிகளை ரத்து செய்ய வேண்டும். ஒரே சீரான 10 சதவீத ஜிஎஸ்டி வரியை விதிக்க வேண்டும். டிரைவர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு நல்லிணக்க கூட்டம் நடத்த வேண்டும். பஸ்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளோம்


அனைத்து கட்சி கூட்டம்

முதல்வருடனான சந்திப்பின் போது, துணை முதல்வர், போக்குவரத்து அமைச்சர் மற்றும் பல அமைச்சர்கள் இருந்தனர். எங்களது கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளோம். அரசு தரப்பில் எந்த உறுதியும் அளிக்கவில்லை. பார்ப்போம் என கூறியுள்ளனர். அரசு நிர்வாகம் செயல்படாத நிலையில் தான் எதிர்க்கட்சியாக நாங்கள் யோசனை கூறியுள்ளோம் எங்கள் பரிந்துரைகளை செயல்படுத்தனால், வரவேற்போம். இல்லாதபட்சத்தில், தேவைப்பட்டால், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்வோம். பொருட்கள் கட்டுமானத்தில் கமிஷன் வாங்குவதை கட்டுபடுத்தினால் கடனை குறைக்க முடியும்.


விளக்கம் வேண்டும்

அவர்கள் மீதான தவறுகளை மறைக்க, அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இது குறித்து ஏற்கனவே விளக்கமளித்துள்ளோம். சட்டசபையில், ஜெயலலிதா படத்தில் எந்த அடிப்படையில் திறக்கப்பட்டது என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும். ஜெயலலிதா பட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர்,கவர்னர் அழைத்தும் வரவில்லை ஏன் வரிவில்லை என்பது குறித்து விளகக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
14-பிப்-201807:35:26 IST Report Abuse
Panneerselvam Chinnasamy கட்டண உயர்வை ஒரே அடியாக உயர்த்தாமல் ஆண்டு தோறும் பட்ஜெட் போடும் காலத்தில் அரசு போக்குவரத்து துறை பட்ஜெட் போட்டு அதில் ஏற்படும் பற்றாக்குறையை சரிசெய்ய பெர்மிட் வரி அல்லது பொது மான்யம் வழங்கலாம்... ஊழலை கட்டுப்படுத்த வேண்டும். லாபம் இல்ல வழித்தடங்களை ஏலம் விடலாம் .. அதிகப்படி ஊழியர்களை vrs மூலம் குறைக்கலாம் ..
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-பிப்-201803:11:31 IST Report Abuse
Mani . V ஸ்டாலின்: "எங்கள் கட்சியின் கொள்கையும், உங்கள் கட்சியின் கொள்கையும் ஓரளவு ஒன்றுதான். ஒரே ஒரு வித்தியாசம், நீங்கள் பதவியில் இருக்கும் பொழுது எங்களால் கொள்ளையடிக்க முடியவில்லை. அதற்க்கு தக்க ஏற்பாடு செய்தால், உங்கள் பதவி காலம் முடியும் வரையிலும் நாங்கள் எந்த 'கரைச்சலும்' செய்யாமல் உங்களுக்கு மறைமுக ஆதரவு தருவோம்".
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
13-பிப்-201820:53:19 IST Report Abuse
madhavan rajan இவருடைய காட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் தொழிற்சங்கம் என்ற போர்வையில் வேலையே செய்யாமல் சம்பளம் மற்றும் படிகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்களே அந்த நபர்களுக்கெல்லாம் பனி அளித்து ஒழுங்காக எட்டு மணிநேரம் வேலை செய்யச் சொல்லலாம் என்று ஆலோசனை அளித்துள்ளாரா? அது செய்தாலே பல கோடி பணம் மிச்சமாகும்.
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
13-பிப்-201820:52:11 IST Report Abuse
Sivagiri அடடா . . . இந்த அறிவுரைகள் எல்லாம் கடந்த காலங்களில் இவரது தலைவரும் கூட்டாளிகளும் செய்ய தவறிய மாபெரும் சாதனைகள் . . . (பதவி) போதை வந்த போது புத்தியில்லையே . . . புத்தி வந்த பொது பதவி இல்லையே . ..
Rate this:
Share this comment
Ramana Ramana - kumbakonam,இந்தியா
17-பிப்-201813:29:49 IST Report Abuse
Ramana Ramanaஎல்லாம் தெரிஞ மாதிரி கருத்து சொல்லாதீர்....
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
13-பிப்-201820:41:22 IST Report Abuse
ManiS Ivarum balti sambbar lam adichu paakarar. Ennna panradhu panninadhu konjama? makka marakka maatengudhuga. Ini marandhaalum punniyam illa.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
13-பிப்-201820:32:51 IST Report Abuse
balakrishnan இது ஒரு சிறந்த அணுகுமுறை என்று தான் தோன்றுகிறது, அதேபோல பா.மா.கா வருட வருடம் மாதிரி பட்ஜெட் போடுவார்கள், விவசாயத்திற்கு என்று சில விஷயங்களையும் கூறி வருகிறார்கள், அரசு நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும், அது நல்லது
Rate this:
Share this comment
Cancel
Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா
13-பிப்-201819:46:11 IST Report Abuse
Raajanarayanan Raaj Narayanan கொள்ளை கொள்ளை யாய் அடித்தது நீங்களும் தான் இன்று ஆட்சியில் அவர்கள் இருக்கிறார்கள் இல்லையென்றால் மக்களின் வாழ்க்கைத்தரம் கூடிவிட்டது வாங்கும் திறன் அதிகரித்து விட்டது எனவும்.டீசல் விலை உயர்வால் தவிர்க்க முடியாது.எனவும் எதிர் கட்சிகள் மக்களை குழப்புகின்றன எனவும் கருத்து சொல்லியிருப்பார் ஆட்சியில் இருந்திருந்தால். இனிமேல் ஆட்சியில் அமர போவதில்லை அணைத்து விலைவாசி உயர்வுக்கும் அடிப்படை காரணமே இந்த திராவிடக்கட்சிகள்தான் அதிலும் இந்த திமுக மாதிரி கட்சி இந்திய முழுவதும் இருந்திருந்தால் கருணாநிதிக்கு மாநிலத்திற்கு ஒரு மனைவி கிடைத்திருக்கும் ஆனால் மக்களுக்கு நிம்மதி கிடைக்காது மக்களை இலவசம் போதை உண்டாக்கி போதையை விட்டு வராமல் தடுத்ததுடன் ஏழ்மையாக்கி இதனை பயன் படுத்தி கொள்ளை அடிக்க குடும்பம் முழுவதும் சுரண்டுவதற்கு நம் மக்களே காரமானவர்கள் பின்னுக்கும் எத்தனை காலம் தான் தமிழக மக்களை ஏமற்றவர்களோ மக்களும் எத்தனை காலம் தான் ஏமாறுவார்களோ.ஆண்டவனுக்கே வெளிச்சம்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Muscat,ஓமன்
13-பிப்-201819:39:56 IST Report Abuse
Ramesh Sundram ஹி ஹி என் அன்பு மகன் உயநிதி ஒரு பேருந்து நிறுவனம் அமைக்க போகிறார் RTO தொல்லை இல்லாமல் நீங்கள் தான் பார்த்துக்கொள்ளவேண்டும் மற்றபடி வேறு ஒன்றும் இல்லை ஹி ஹி உங்களுக்கு வர வேண்டிய கட்டிங்/கமிஷன் சரியாக வந்து சேரும் பன்னீர்செல்வத்தை நீங்கள் கழட்டி விட்டால் கழகம் பார்த்து கொள்ளும் உங்கள் ஐந்து ஆண்டு ஆட்சியை ஹி ஹி
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
13-பிப்-201819:32:06 IST Report Abuse
Arivu Nambi எதிர்க்கட்சிகள் ஆளும்கட்சியுடன் சேர்ந்து செயல் படுவதுதான் மக்களுக்கு பயன் கிடைக்க வழிவகுக்கும் ,ஆனால் இங்கே முட்டாள்களின் கருத்துகள் நிறைய உள்ளதை பார்த்தால் எதிர்கட்சிகளை சேர்ந்தவர்களை எதிரிகளாக நினைக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது .
Rate this:
Share this comment
Cancel
KGSriraman -  ( Posted via: Dinamalar Android App )
13-பிப்-201818:40:34 IST Report Abuse
KGSriraman ஆக்க பூர்வமான. எதிர்க்கட்சி யாக ,, தி.மு.க., செயல் பட்டுள்ளது ஆம். செயல் தலைவர் அல்லவா?? செயல்படுகிறார்!!! இப்படி, திட்டமிட்டு. செயல் பட்டு இருந்தால்,,, தமிழகத்தில் தி.மு.க. தொடர்ந்து. ஆட்சி புரிந்து இருக்கும்!!!என்ன செய்வது?? ஆளும் கட்சியாக, இருக்கும் போது. மக்கள் நலன்,,,நாட்டு நலன் என அக்கறை கொண்டு. செயல்படாமல்,, தி. மு.க. ஆட்சியை பறி கொடுத்து விட்டது..கடந்த தேர்தலில். நமக்கு நாமே,, என செயல் தலைவர்,,,,கஷ்ட்டப்பட்டு,,,உழைத்தார்,, ஓரளவு. நல்ல வெற்றியை கண்டார்,,, இப்படி. மக்கள் நலம் சார்ந்த விஷயங்களை,,,கையில் எடுத்து,,,,,செயல் படவேண்டும்.,,கூடவே இனி திராவிடம். ஆரியம்,, பார்ப்பனர்,,,கடவுள் இல்லை,,, பகுத்தறிவு. என பேசும். வழக்கத்தை கைவிட்டு,, அப்படி பேசுபவர்களை,,,தன் பக்கத்தில் வைத்து கொள்ளாமல் செயல் தலைவர் செயல் பட வேண்டும்,,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை