Chant Hanuman Chalisa to Prevent Natural Calamities, MP BJP Leader Tells Farmers | இயற்கை பேரிடர்களை தவிர்க்க அனுமன் ஸ்தோத்திரம் : மாஜி எம்.பி., அறிவுரை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

இயற்கை பேரிடர்களை தவிர்க்க அனுமன் ஸ்தோத்திரம் : மாஜி எம்.பி., அறிவுரை

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (66)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இயற்கை பேரிடர், விவசாயிகள், வானிலை, கனமைழை, அறிவுரை ,அனுமன். ஸ்தோத்திரம்

புதுடில்லி : விவசாயிகள், அனுமன் ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லிவந்தால் இயற்கை பேரிடர்களை தவிர்க்கலாம் என்ற மத்திய பிரதேச மாநில பா.ஜ. தலைவரின் கருத்து சமூகவலைதளங்களில் பெரும்விவாதப்பொருளாக மாறியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் செேஹார் தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர் ரமேஷ் சக்சேனா. தற்போது அவர் மாநில பா.ஜ.வில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி, மேற்குவங்கம்ல சி்க்கிம், ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், உத்தர்காண்ட், ஹரியானா வடக்கு, பஞ்சாப் , ஹிமாச்சலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், விதர்பா, சட்டீஸ்கர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த சில நாட்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனிடையே, தங்கள் மாநில விவசாயிகளை காக்கும் மற்றும் எச்சரிக்கும் பொருட்டு மாஜி எம்.பி., ரமேஷ் சக்சேனா கூறியுள்ள கருத்து பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.


பத்திரிகையாளர்களை சந்தித்த ரமேஷ் சக்சேனா கூறியதாவது,

விவசாயிகள், தினமும் 1 மணிநேரம் அனுமன் ஸ்தோத்திரம் சொல்லிவந்தால், இயற்கை பேரிடர்களிலிருந்து தங்களை மற்றும் தங்கள் விவசாய சொத்துக்களை காத்துக்கொள்ளலாம் என்பதை உறுதியளிக்கிறேன். இளைஞர்கள், அடுத்த 5 நாட்களுக்கு தினசரி 1 மணிநேரம் அனுமன் ஸ்தோத்திரம் கூறுமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக அவர் கூறியுள்ளார்.


அமைச்சர் ஆதரவு :

ரமேஷ் சக்சேனாவின் இந்த கருத்திற்கு மாநில வேளாண்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா பட்டிதார் ஆதரவு தெரிவித்துள்ளார்.அனுமன் ஸ்தோத்திரத்தை சொல்வதால் எவ்வித தவறும் இல்லை. எல்லாம் நம்பிக்கை சார்ந்த ஒன்றே என்று அமைச்சர் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா
13-பிப்-201819:50:04 IST Report Abuse
Senthilsigamani.T டிசம்பர் 3, 1984 ல் இந்தியாவில் உள்ள போபாலில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு விஷவாயு வெளியேறி 3000 பேர் இறந்தபோது அக்னிஹோத்ரம் யாகம் செய்த இரண்டு குடும்பத்தினர் மட்டும் விஷவாயு பாதிக்காமல் தப்பிய செய்தி பத்திரிகைகளில் வெளியானது.ஆனால் ஹிந்து நம்பிக்கைகளை குறை கூறி மதமாற்றம் செய்பவர்கள் கூட்டம் மற்றும் அந்நிய மதத்தினர் கூட்டம் இதில் கருத்துக்கள் சொல்ல தேவையில்லை .உண்மையிலே பழமை வாத கோட்பாடுகளில் மூழ்கி திளைப்பது ஹிந்து மதம் அல்ல .பெண்கள் கார் ஓட்ட கூடாது மதவிரோதம் என ஹிந்து மதம் சொன்னது இல்லை .முகநூலில் பெண்கள் படம் போடுவது மதநிந்தனை என ஹிந்து மதம் சொன்னது இல்லை .செஸ் ஆம் சதுரங்கம் விளையாடுவது பாவம் ,பெண்கள் கல்லூரி மேடைகளில் பாடுவது மற்றும் ஆடுவது மதவிரோதம் என ஹிந்து மதம் சொன்னது இல்லை .மேலே சொன்ன செயல்களுக்கு பத்வா என்ற மார்க்க தீர்ப்புகள் ஹிந்து மதத்தில் இல்லவே இல்லை .இதெற்க்கெல்லாம் ஹிந்துக்கள் அந்த மதத்தை குறை கூறியது இல்லை .ஆனால் ஹிந்து மத கடவுளர் துதி பற்றி ஒரு ஹிந்து அமைச்சர் சொன்னதுக்கு இவ்வளவு கீழ்த்தரமான விமர்சனங்கள் தேவையில்லை .மலேயாவில் பாடப்புத்தகங்களில் பன்றி பற்றிய குறிப்புகள் மற்றும் அதன் படங்களும் முற்றிலும் நீக்கப்பட்டன .காரணம் இருபது ஆண்டுகளுக்கு முன்பே அது மதவிரோதம் மத நிந்தனை என்பதால் முஸ்லிம்களின் கோரிக்கையை மலேசிய அரசாங்கம் ஏற்றது .அப்போதும் சரி இப்போதும் சரி ஹிந்து மதத்தினர் இத்தகைய விஷயங்களில் தலையிட்டதில்லை .ஆனால் ஸ்ரீ கிருஷ்ணரும் ஸ்ரீ ராமரும் கற்பனை பாத்திரங்கள் ஏசுவும் அல்லாஹ்வும் உண்மை பாத்திரங்கள் என்று சொல்லும் சிவப்பு ப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கூட்டங்களும் ,மதம் மாறிய ஹிந்துக்களும் ஆண்டாள் விஷயத்திலும் ,மீனாட்சி அம்மன் கோவில் விஷயங்களிலும் மதவிரோத கருத்துக்களை பதிவிட்டு ஹிந்து மதத்தை ஏளனம் செய்கின்றனர் .போன வருடம் ரம்ஜான் நோன்பின் போது தண்ணீர் அருந்திய குற்றத்திற்காக பத்து வயது நிரம்பாத இருபது சிறுவர்கள் நடுத்தெருவில் தூக்கிலிடப்பட்டனர் இராக்கில் .அது மட்டும் அல்ல பெண் வேடம் போட்டு ஹிந்தி பாட்டுக்கு ஆடிய ஐந்து சிறுவர்கள் கல்லால் அடித்து கொல்லப்பட்டனர் சிரியாவில் (அதுவும் ரம்ஜான் மாதத்தில் ) அதுமட்டும் அல்ல கம்யூனிசம் பேசினாலே மரண தண்டனை -அதனால் தான் முஸ்லீம் நாடுகளில் கம்யூனிஸ்ட்கள் உயிர் வாழ முடியாது .அத்தகைய பழமை வாத கோட்பாடுகளை உயர் மார்க்கமென பின்பற்றும் மனித திரள் கூட்டம் ஹிந்து மத கடவுளர் துதிக்கு சக்தி உள்ளது என்று ஒருவர் சொன்னதை எள்ளி நகையாடுவது பிறழ் முரண் .நகை முரண் .
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-பிப்-201816:20:48 IST Report Abuse
Malick Raja we have to close all hospitals and medical college and all offices .. sthotthiram is enough .. why M.P wearing Dress ..? crazys are disappeared from Mental hospital resulted such as out come
Rate this:
Share this comment
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
14-பிப்-201820:48:57 IST Report Abuse
Giridharan SrinivasanMalick Raja - jeddah,சவுதி அரேபியா, Hope you do believe in Allah.And you feel energy when you do thuvaa / prayer. In the same manner when you chant Jai Hamunan and pray definitely you'll get energy, strength, knowledge and all good things in your life. Jai Shri Hanuman...
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ibrahim - Chennai ,இந்தியா
13-பிப்-201816:16:01 IST Report Abuse
Mohamed Ibrahim பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா 13-பிப்-2018 10:58 அதை மூடர்களே அதிகம் நிறைந்த ஒரு பாலைவன கூட்டம் சொல்ல கூடாது...... சலீம் பாஷா அவர்களிடம் கற்று கொள்ளுங்கள் உனக்கு சாதகமாக சொன்னால் நல்லவன்... எதிராக சொன்னால் கெட்டவன்..... சலீம் பாஷா என்ன சொன்னாலும் கேட்பீர்களா? படைத்த இறைவன் ஒருவனே இதுவும் சலீமின் நம்பிக்கை... ஏற்றுகொள்ளுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
அசோக் வளன் - Chuan Chou,சீனா
13-பிப்-201815:53:07 IST Report Abuse
அசோக் வளன் திரை அரங்குகளில் அனுமன் ஸ்தோத்திரம் போட்டு எழுந்து நிற்க சொல்லலாம் ......
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
13-பிப்-201816:39:49 IST Report Abuse
பலராமன்அதில் தவறென்ன ?...
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-பிப்-201816:48:41 IST Report Abuse
Sanny திரை அரங்கில் எழுந்து நிட்பார்களோ, இல்லையோ, இலங்கை சிங்களவன் ஆஞ்சநேயரின் பெயரைக்கேட்டாலே கோபமும் கொள்ளுவான், பயமும் கொள்ளுவான், இலங்கையில் இருந்துவந்த அகதிகள் சொன்னது,...
Rate this:
Share this comment
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
13-பிப்-201815:50:26 IST Report Abuse
Divahar மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என சொன்னால் என் இவர்கள் நம்பவில்லை
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
13-பிப்-201815:02:24 IST Report Abuse
தமிழர்நீதி மீனாக்ஷி அம்மன் கோவிலில இவரை கொண்டு மந்திரம் சோலா சொல்லி பல வருடம் தீ பிடிக்காத நிமிர்ந்து நின்ற கோவிலை தீ விபத்திலிருந்து காப்பாத்தி இருக்கலாம் . சாமிகளே தீ விபத்தில் தத்தளிக்குது தீ குளிக்குது விவசாயிகள், அனுமன் ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லிவந்தால் இயற்கை பேரிடர்களை தவிர்க்கலாம் என்றால் என்னங்க MP .
Rate this:
Share this comment
Cancel
Raj Pu - mumbai,இந்தியா
13-பிப்-201814:57:20 IST Report Abuse
Raj Pu பேரிடர் மேலாண்மை வாரியம் உருப்படியாக எதுவும் செய்வதில்லை, சம்பளம் வீண், அதையேல்லாம் நீக்கிவிட்டு, இவர் கூறுவது போல செய்யலாம், பலன் இல்லையென்றால் இவர்களை வீட்டுக்காவலில் வைத்து பட்டினி போடலாம்
Rate this:
Share this comment
Cancel
sivanesan - nagarkoil,இந்தியா
13-பிப்-201814:12:41 IST Report Abuse
sivanesan இயற்கை பேரிடர் என்று இவர் பிஜேபி ஆட்சியை சேர்த்து தான் சொல்கிறாரோ ???
Rate this:
Share this comment
Cancel
karthik - Chennai,இந்தியா
13-பிப்-201813:52:32 IST Report Abuse
karthik இந்த செய்தியில் என் நீங்கள் தேவையில்லாமல் மொக்கை நுழைக்கிறீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Prabhakaran - Delhi,இந்தியா
13-பிப்-201813:36:44 IST Report Abuse
Prabhakaran பகுத்தறிவு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஜென்மங்கள். நம்ம ராஜுவெல்லம் இவர் முன் ஜுஜுபி போலயே.
Rate this:
Share this comment
Siva - Chennai,இந்தியா
13-பிப்-201814:13:10 IST Report Abuse
Sivaபகுத்தறிவு என்பது பகுத்து அறிவது என்பது பொருள்... நல்லது கெட்டது பிரித்து பார்ப்பது தான் பகுத்தறிவு ... நாத்திகம் தான் பகுத்தறிவு என்று சில அரை வேக்காடுகள் பரப்பியது .... சப்பைகளுக்கு அது புரியாது .......
Rate this:
Share this comment
Siva - Chennai,இந்தியா
13-பிப்-201814:14:45 IST Report Abuse
Sivaஜெய் ஹனுமான் ... நம்பிக்கை வைத்து எதை செய்தாலும் நன்மை பயக்கும் ......
Rate this:
Share this comment
தாமரை - பழநி,இந்தியா
13-பிப்-201814:54:02 IST Report Abuse
தாமரை ஆஞ்சநேயர் ஸ்தோத்திரத்தின் அருமை தெரியாதவர்கள்தான் இவரது கருத்தை கேலி செய்வர் . நமது முன்னோர்களும் ரிஷிகளும் உருவாக்கித் தந்துள்ள மந்திரங்கள் மிகச் சிறந்த அதிசயங்கள்.இதெல்லாம் விஞ்ஞாத்தையும் விஞ்சியவை....
Rate this:
Share this comment
Prabhakaran - Delhi,இந்தியா
13-பிப்-201816:13:20 IST Report Abuse
Prabhakaranயப்பா இந்த மந்திரங்களை வைத்து முகலாயர்களை அகற்றி இருக்கலாமே, வெள்ளைக்காரனை விரட்டி அடிச்சிருக்கலாமே ஏன் விதியில் 100 வருடங்களாக போராட வேண்டும்? அவ்வளவு ஏன் தற்பொழுது இந்த மந்திரத்தை வச்சு இந்தியாவை வல்லரசாக்குங்க பாப்போம். மந்திரம் மாயாஜாலம்னு மக்களை ஏமாத்தின காலம்லாம் முடிஞ்சுபோச்சு. நீங்களும் மாறுங்க மக்களையும் மாற விடுங்க....
Rate this:
Share this comment
vns - Delhi,இந்தியா
13-பிப்-201818:38:29 IST Report Abuse
vnsPrabhakaran - Delhi,இந்தியா மந்திரத்தை வைத்து நீங்கள் சொன்ன எல்லாமும் செய்யலாம் ஆனால் அப்படி செய்யும்போது உங்களைப் போன்ற நாஸ்தீக மக்கள் நாட்டில் இருக்கக்கூடாது.. சம்மதமா ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை