Chandrababu Naidu is richest CM, Manik Sarkar poorest: Report | பணக்காரர் முதல்வர் சந்திரபாபு| Dinamalar

பணக்காரர் முதல்வர் சந்திரபாபு

Updated : பிப் 13, 2018 | Added : பிப் 13, 2018 | கருத்துகள் (26)
Advertisement
பணக்காரர், சந்திரபாபு

புதுடில்லி: ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம் என்ற அமைப்பு, வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு 177 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், நாட்டின் பணக்கார முதல்வர் என்ற அந்தஸ்தை, அவர் பெற்று உள்ளார்.

இதற்கு அடுத்த இடத்தில் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா கண்டு உள்ளார். அவருக்கு 129 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளது. 3வது இடத்தில் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 48 கோடி ரூபாய் ஆகும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7.80 கோடி ரூபாய் மதிப்பு சொத்துகளுடன் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார்.


பணக்கார முதல்வர் சந்திரபாபு

ஏழை முதல்வர்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 30 லட்ச ரூபாயும், காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்திக்கு 55 லட்ச ரூபாயும் சொத்து உள்ளது.

திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், ஏழை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த இவரது சொத்து மதிப்பு, 27 லட்ச ரூபாய் என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஏழை முதல்வர் பட்டியலில் ஐந்து பேர், பா.ஜ.,வை சேர்ந்தவர்கள்.




குற்ற வழக்குகள்

இந்தியாவில் உள்ள 31 முதல்வர்களில் 20 பேர் மீது எந்த வழக்குகளும் இல்லை. 11 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளதாகவும், 8 பேர் மீது பெரிய குற்றவழக்குகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவீஸ் மீது 22 வழக்குகள் உள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது11 வழக்குகளும், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது 10 வழக்குகளும், ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் மீது 8 வழக்குகளும், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் மீது 4 வழக்குகளும் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-பிப்-201817:51:55 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் பிசெபிக்கு எதிரா ஸ்டேட்டுமெண்டு உட்டா ஈத்து எல்லா சந்திக்க வரு நைனா.. ஏற்கனவே எத்தன பேரு சிக்கிட்டு தவிக்கிறாங்கனு தெரியுமே நைனா.. லாலூ பேசுனத்துக்கு பிராயச்சித்தமா அவரோட அரசியல் வாழ்கையவே அழிச்சிட சுப்ரீம் கோர்ட்டு மூலமா என்னமா பிசெபி துடிச்சிடிருக்கு.. பிசெப்பியோட முழுநேர வேல அவங்களுக்கு எதிரா இருக்கவங்க பேசுறவங்க பிரச்சனைய கெளப்புறவங்கள ரவுடி ராச்சியம்மாதிரி அதிகார வரம்பையு தில்லாலங்கடிக்கலையு ஒபயோகிச்சு ரவுண்டு கட்டி அவங்களுக்கு பாட எடுக்குறதுதா நைனா.. பிசெப்பி 2018 ஓட இந்தியாவுல அட்றஸ் இல்லாம போயிடும்னு எதிர்பாக்கலா...
Rate this:
Share this comment
Cancel
P S Balaji - Mumbai,இந்தியா
13-பிப்-201813:40:29 IST Report Abuse
P S Balaji Chandrababu Naidu is a business man. Heritage Foods Ltd is their family company only. He is not hiding anything.
Rate this:
Share this comment
Cancel
R S GOPHALA - Chennai,இந்தியா
13-பிப்-201813:23:52 IST Report Abuse
R S GOPHALA தப்பு தப்பு. கருணாநிதிதான் இந்தியாவிலேயே பணக்கார தீப் மினிஸ்டர் சாரி சீப் மினிஸ்டர். அவரின் சொத்து மதிப்பு கண்டிப்பாக இருபத்தி ஐந்தாயிரம் கோடிக்கு மேல் இருக்கும். ஆனால் எல்லாமே இந்தியாவிற்கு வெளியே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது...
Rate this:
Share this comment
sekar - ,
13-பிப்-201815:36:20 IST Report Abuse
sekarஇவர்தான் ஆவருக்கு ஆடிட்டர்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X