மத அரசியல்!| Dinamalar

மத அரசியல்!

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மத அரசியல்!

உ.பி.,யில், தலித் மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, பா.ஜ.,வே காரணம். அவர்களுடைய மத ரீதியிலான அரசியலே, மக்களிடையே வெறுப்பு வன்முறையை அதிகரித்துள்ளது. ஏற்கனவே, வேலை கிடைக்காமல் நாடு முழுவதும் இளைஞர்கள் விரக்தியில் உள்ளனர். அதனால், வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ்
மோடி அலை!
சட்டசபையில், எம்.எல்.ஏ.,க்கள் இல்லாத நிலையிலும், கட்சி மிகவும் வலுவாக இல்லாத நிலையிலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா .ஜ.,வின் சிறப்பான திட்டங்களால், மணிப்பூர் மற்றும் அசாமில் நடந்த சட்டசபை தேர்தல்களில் வென்றோம். தற்போது அதுபோன்ற ஒரு சூழ்நிலை, விரைவில் தேர்தலை சந்திக்க உள்ள திரிபுராவிலும் உள்ளது.
அமித் ஷா, தேசியத் தலைவர், பா.ஜ.,
உயர்ந்தது எப்படி?
ஊழல் குறித்து பிரதமர் மோடி வெளி நாடுகளிலும் பேசுகிறார். அதே நேரத்தில், அவர் தனக்கு, இடது, வலது பக்கம் உள்ளவர்களையும் பார்க்க வேண்டும். கர்நாடகாவில், சிறை சென்ற எடியூரப்பாவை, முதல்வர் வேட்பாளராக நிறுத்தியுள்ளார். ஊழலை பேசும்போது, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா மகன், ஜெய் அமித் ஷாவின் சொத்து மதிப்பு, எப்படி உயர்ந்தது என்பது குறித்தும் பேச வேண்டும்.
ராகுல், தலைவர், காங்.,

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-பிப்-201803:49:39 IST Report Abuse
J.V. Iyer மத அரசியல் என்பது, இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், கூறு கேட்ட தேச துரோகிகள் இந்து மதத்தில், கோவில்களில் மூக்கை நுழைப்பதுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை