விவசாய கடன் தள்ளுபடி : ராஜஸ்தான் அரசு அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விவசாய கடன் தள்ளுபடி : ராஜஸ்தான் அரசு அறிவிப்பு

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், 50 ஆயிரம் ரூபாய் வரையிலான, விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.ராஜஸ்தானில், முதல்வர், வசுந்தரா ராஜே தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் கிடைத்த தோல்வியால் விழித்துக் கொண்ட, முதல்வர், வசுந்தரா ராஜே, தன் கடைசி பட்ஜெட்டில், விவசாயிகள், ஏழைகள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில், பல்வேறு சலுகைகளை அறிவித்து உள்ளார்.சட்டசபையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், '2017 செப்., 30 வரை உள்ள, 50 ஆயிரம் ரூபாய் வரையிலான, விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்' என, அறிவிக்கப்பட்டது.பட்ஜெட்டில் மேலும், அறிவிக்கப்பட்ட சலுகைகள்:இளைஞர்களுக்கு ஒரு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்; கல்வித் துறையில் உள்ள, 77 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புதல்; 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இலவச பஸ் பயணம்; ஏழு லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பொதுத் தேர்வில், 85 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, இருசக்கர வாகனம் பரிசு உள்ளிட்ட சலுகைகளும்அறிவிக்கப்பட்டு உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
13-பிப்-201807:03:36 IST Report Abuse
Loganathan Kuttuva ராஜஸ்தான் முதல்வர் தமிழக முதல்வர்களை போல் செயல்படுகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X