காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை| Dinamalar

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஐதராபாத்: 'தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில், காதலர் தினத்தன்று, கிளப் மற்றும் ஓட்டல்களில், சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது' என, பஜ்ரங்தள் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.உலகம் முழுவதும், காதலர் தினம், நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, பூச்செண்டுகள், பரிசு பொருட்கள் விற்பனை, களைகட்ட துவங்கி உள்ளன. இந்நிலையில், 'வெளிநாட்டு கலாசாரமான காதலர் தினத்தை, இந்தியாவில் கொண்டாடக் கூடாது' என, பஜ்ரங்தள் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதையடுத்து, 'ஐதராபாதில் உள்ள கிளப் மற்றும் ஓட்டல்களில், காதலர் தினத்துக்காக, சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது' என, பஜ்ரங்தள் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், வாழ்த்து அட்டை, பரிசு பொருட்கள், பூங்கொத்து விற்கும் கடைகளிலும், காதலர் தினத்துக்காக, ஸ்பெஷலாக எதுவும் விற்பனை செய்யக் கூடாது என்றும், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அன்று, பொது இடங்களில் காதலர்கள் தாக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்து உள்ளதால், ஐதராபாதில், இளைஞர்கள் கூடும் இடங்களில், போலீசார் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
13-பிப்-201817:09:23 IST Report Abuse
Sitaramen Varadarajan பஜ்ரங்க தள் வாழ்க. பாரதத்தின் கலாச்சாரத்தை சீரழிக்க முனைந்து செய்யப்படும் மறைமுகமான தாக்குதல்களில் இதுவும் ஒன்று. என்னய்யா காதல். காதலர் தினம். மற்றய தினத்தில் எல்லாம் காதல் வராதா.....இந்த கேலி கூத்தை உடனே நிறுத்த வேண்டும். பருவம் வந்த இளைஞர்களின் பால் உணர்ச்சியை தூண்டி.....தவறுகளை நியாயப்படுத்தும் கொடுமைக்கு ஒரு திருவிழாவா.....உடனடியாக இதனை தடை செய்ய வேண்டும். உடனே ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விடுவார்கள் மோதி எதிர்ப்பாளர்கள். ஐயோ ஐயோ வந்தது காதலுக்கு ஆபத்து. பாரதத்திற்கு ஆபத்து. ஆண் பெண்களின் பருவத்திற்கு ஆபத்து. மோதியின் சர்வாதிகாரம்......பாஜகவின் நாசா வேலை. இப்படி எல்லாம் ஒப்பாரி வரும். இந்த நாடு உருப்பட்ட விடும். தூ.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை