பாலியல் சீண்டல்: உடன்படாத சிறுமிக்கு தீ| Dinamalar

பாலியல் சீண்டல்: உடன்படாத சிறுமிக்கு தீ

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராஜ்கர்: ம.பி.,யில், பாலியல் சீண்டலுக்கு உடன்படாத, 13 வயது சிறுமி, தீ வைத்து எரிக்கப்பட்டாள். ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ராஜ்கர் மாவட்டத்தில், விவசாய கூலி வேலை செய்யும் தம்பதியின், 13 வயது மகள், வீட்டில் தனியாக இருந்தாள். அதை அறிந்து, வீட்டுக்குள் நுழைந்த, அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞன், அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டான்.இதற்கு, அந்த சிறுமி மறுப்பு தெரிவித்ததை அடுத்து, ஆத்திரத்தில், அந்த சிறுமியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தான். சிறுமியின் கதறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து காப்பாற்றினர். 50 சதவீத தீக்காயங்களுடன், அந்த சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். தீ வைத்த இளைஞனை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy M - Chennai,இந்தியா
13-பிப்-201810:55:29 IST Report Abuse
Ramamoorthy M சட்டங்களை திருத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனியும் தாமதித்து பிரயோஜனம் இல்லை. பாலியல் கொடுமைகள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரின் பிறப்புறுப்பு அறுத்தெறியப் படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-பிப்-201809:18:28 IST Report Abuse
Srinivasan Kannaiya அந்த மிருகத்தை சுத்தமாக சாம்பலாகும் வரை தீ இட்டு கொளுத்தவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை