'அனைவரின் பிரார்த்தனையும் வீண் போகவில்லை' - சிறுமி தன்யஸ்ரீ தந்தை உருக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அனைவரின் பிரார்த்தனையும் வீண் போகவில்லை' - சிறுமி தன்யஸ்ரீ தந்தை உருக்கம்

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (12)
Advertisement
'அனைவரின் பிரார்த்தனையும் வீண் போகவில்லை' - சிறுமி தன்யஸ்ரீ தந்தை உருக்கம்

சென்னை : ''அனைவரின் பிரார்த்தனையால், என் மகள் நலம் பெற்றாள்,'' என, சிறுமி தன்யஸ்ரீயின் தந்தை, ஸ்ரீதர் உருக்கமாக தெரிவித்தார்.

சென்னை, தண்டையார்பேட்டை, ஸ்ரீராமலு தெருவைச் சேர்ந்தவர், ஸ்ரீதர், 34; குடிநீர் கேன் விற்பனையாளர். இவரது மகள், தன்யஸ்ரீ, 4.ஜன., 27ல், தன்யஸ்ரீயுடன், அவரது தாத்தா, அருணகிரி, தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெரு வழியாக நடந்து சென்றார்.

அப்போது, அப்பகுதியின் உள்ள ஒரு வீட்டின், 4வது மாடியில் இருந்து, சிவா, 24, என்ற போதை வாலிபர், தடுமாறி, தன்யஸ்ரீ மீது விழுந்தார். இதில், சிறுமி படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்றார்.

அப்பல்லோ மருத்துவ மனையில், சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையில், தன்யஸ்ரீயின் மூளை பகுதியில், பலத்த காயம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அப்பல்லோ மருத்துவக் குழுவினர், சிறப்பு அறுவை சிகிச்சை செய்து, சிறுமியை, அபாய கட்டத்தில் இருந்து மீட்டனர். சில தினங்களுக்கு முன், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, சாதாரண வார்டுக்கு, தன்யஸ்ரீ மாற்றப்பட்டார்.தன்யஸ்ரீயின் உடல்நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், 'மூளை அழுத்தத்தை கண்காணிக்கும் சிறப்பு கருவி வழியாக, பி.ஐ.சி.யு., நியூரோ சிறப்பு சிகிச்சை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. படிப்படியான சிகிச்சைகளின் வழியாக, குழந்தை நலம் பெற்றாள்' என்றனர்.

தன்யஸ்ரீயின் தந்தை, ஸ்ரீதர் கூறியதாவது: என் மகளின் நிலை குறித்து அறிந்த நண்பர்கள், சமூக வலைதளங்களின் வழியாக உதவி கோரினர். பலர், தேவையான பண உதவியை செய்தனர். தமிழக அரசும், சிகிச்சைக்கு பண உதவியை தருவதாக தெரிவித்தது.பலரின் பிரார்த்தனை களும், வீண் போகவில்லை. என் மகள், நலம் பெற்றாள். அவளுக்காக பிரார்த்தனை செய்தோருக்கும், பண உதவி அளித்தோருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement