டயர் தொழிற்சாலையில் தீ விபத்து : ரூ.2 கோடி பொருட்கள் நாசம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டயர் தொழிற்சாலையில் தீ விபத்து : ரூ.2 கோடி பொருட்கள் நாசம்

Added : பிப் 13, 2018
Advertisement
டயர் தொழிற்சாலையில் தீ விபத்து : ரூ.2 கோடி பொருட்கள் நாசம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி அருகே, பழைய டயர் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் அய்யப்பன், 55. இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள புளியஞ்சேரி கிராமத்தில், தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு பழைய டயர்களை பவுடராக்கி, பொம்மை மற்றும் மேட்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இங்கு, 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.நேற்று பிற்பகல், 1:00 மணிக்கு, தொழிலாளர்கள் மதிய உணவிற்காக வெளியே சென்றிருந்தனர். உணவு முடிந்து, 1:30 மணிக்கு தொழிலாளர்கள் திரும்பி வந்து பார்த்த போது, தொழிற்சாலையின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டுள்ள பழைய டயர்களில் இருந்து, கரும்புகை வெளியேறியது. உடனே, கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், தீ மளமளவென, தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பழைய டயர்கள், டயர் பவுடர் மற்றும் இயந்திரத்தில் பரவியது. இதனால், காட்டுத் தீ போல் கரும்புகை வெளியேறி, புகை மண்டலமானது. தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால், ஓசூர், ராயக்கோட்டை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்க முயன்றனர்.ஆனால், தீ கட்டுக்குள் வராமல், தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. இதனால், சுற்றுவட்டாரத்தில் இருந்த டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு வந்து, தீயை அணைக்க முயன்றனர். இதில், தொழிற்சாலையில் இருந்த டயர் பவுடர், பழைய டயர்கள், இயந்திரம் மற்றும் ஒரு டூ - வீலர் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமாகின.குருபரப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தீ விபத்தில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. மாலை, 6:00 மணிக்கு பின், தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை