சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே! உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே! உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே!

Added : பிப் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே! உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே!

பித்தா என அழைத்தது ஏன்?
'பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா' என்று சிவனை பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இதில் சிவனை, 'பித்தன்' என அழைக்க காரணம் என்ன தெரியுமா?சுந்தரருக்கு திருமணம் நடக்க இருந்த போது, ஆட்கொள்ள முதியவர் வேடத்தில் வந்தார் சிவன். சுந்தரரை தன் அடிமை என்றார். “ஏ பித்தனே! நீ யார்? என்ன உளறுகிறாய்?” என சுந்தரர் கோபித்தார். பின்பு தான் வந்தது சிவன் என்பது சுந்தரருக்கு புரிந்தது. தன்னைப் பாடும்படி சிவன் கேட்க, என்ன சொல்லி ஆரம்பிப்பது என குழம்பினார்.

''என்னை பித்தன் என்று திட்டினாயே! அதிலேயே தொடங்கு'' என்றார்.
சுந்தரரும் அதற்கான காரணத்தை புரிந்து கொண்டார். சிவனின் தலையிலுள்ள கங்கை, மூன்று முறை நம் பாவத்தை பொறுப்பாள். பார்வதியோ, எத்தனை முறை வேண்டுமானாலும், நம் பாவம் பொறுப்பாள். பொறுமையில் சிறந்த பார்வதியை, தலையில் வைத்து கொண்டாடாமல், மூன்று முறை பொறுக்கும், கங்கையை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார் சிவன். இப்படி பிறரால் புரிந்து கொள்ள முடியாதபடி செயல்படுவதால் 'பித்தன்' என்றார் சுந்தரர்.


இரண்டு முக்கிய தலங்கள்காசி செல்பவர்கள், ராமேஸ்வரத்திலும் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது விதி. காசி விஸ்வநாதர் மற்றும் பிற சிவன் கோயில்களில் சிவராத்திரியன்று அபிஷேகம், ஹோமம், வேத பாராயணம் நடக்கும். ராமேஸ்வரத்தில் சிவராத்திரியன்று காலையில் திறக்கும் கோயில், மறுநாள் பிற்பகலில் தான் மூடப்படும். அபிஷேக வழிபாடு இரவு முழுவதும் நடக்கும். தேவாரம், திருவாசகம், ஸ்ரீருத்ர பாராயணம் ஒலிக்கும். இரவின் நான்கு ஜாமங்களிலும் தனித்தனி அலங்காரம் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்திலும், சுவாமி மூன்று பிரகாரங்களிலும் உலா வருவார்.சிவராத்திரியன்று நடந்தவை
* அர்ஜுனன் பாசுபதம் என்ற அஸ்திரத்தைப் பெற்றான்.
* பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான்.
* மார்க்கண்டேயனுக்காக, எமனை சிவன் சம்ஹாரம் செய்தார்.
* பார்வதிதேவி, சிவனின் இடப்பாகத்தில் இடம் பெற்றாள்.
* பார்வதிதேவி, சிவனிடம் ஆகம உபதேசம் பெற்றாள்.
* சிவபெருமான் நஞ்சு உண்டார்.
* வானுக்கும், பூமிக்குமாக லிங்கோற்பவர் என்னும் பெயரில் சிவன் தோன்றினார்.
* கண்ணப்ப நாயனார் ஈசனின் கண்மீது, தன் கண்களை பொருத்தி முக்தி அடைந்தார்.
கற்பூரத்தில் அடித்து சத்தியம் செய்ய மறுப்பது ஏன்?சிவனின் நாட்டிய வடிவம் நடராஜர். இவர் கையில் அக்னி சட்டி ஏந்தியுள்ளார். இது ஞானத்தை குறிக்கிறது. 'உலகில் பிறந்ததே இறைவனை காண்பதற்காகத்தான், இதைத்தவிர வேறு எந்த இன்பமும் எனக்கு வேண்டாம்' என்ற ஒருமித்த எண்ணத்துடன் சிவனை வணங்கினால், அவர் நமக்கு ஆனந்த வடிவாக காட்சி தருவார் என்பதே ஆடல் தத்துவம். அவர் கையிலுள்ள நெருப்பு, உலகத்திலுள்ள நமது சொந்த பந்தங்கள் போன்ற கட்டுகளை எரித்து, நம்மை விடுதலையடையசெய்கிறது. மேலும், 'நீ எங்கு சென்றாலும், முடிவில் இந்த அக்னிக்கு தான் இரையாவாய். நீ வாழும் காலத்தில் நன்மை செய்தால், இந்த நெருப்பு உன்னை எரிக்கும்போது ஆன்மா குளிரும், கேடு செய்தால் சுடும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. கற்பூரத்தை கொளுத்தி, அதன் மீது சத்தியம் செய் என்றால் பயப்படுகிறார்கள். காரணம் கடவுள் நெருப்பு வடிவம் என்பதால் தான்.
தண்ணீர் இல்லாமல் குளியுங்க!


மார்க்கண்டேயரின் ஆயுள் பதினாறு ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவருக்குரிய மரண நாள் வந்ததும், எமன் அவரது உயிரை பறிக்க வந்தான். மார்க்கண்டேயர் உடம்பெங்கும் திருநீறு பூசியபடி, திருக்கடையூர் சிவலிங்கத்தை கட்டியணைத்து கொண்டார்.ஆனாலும் எமன் விடாமல் துரத்தினான். சன்னதிக்குள் நுழைய முயன்ற அவனை, காலால் உதைத்து தள்ளினார் சிவன். இதன் பின், எமன் தன் துாதர்களிடம், “திருநீறு பூசியவர்களை கண்டால் வணங்கிச் செல்லுங்கள்,” என உத்தரவிட்டான். திருநீறுக்கு காப்பு, ரட்சை என்றும் பெயருண்டு. இதற்கு 'பாதுகாப்பது' என்று பொருள். 'மந்திரமாவது நீறு' என்னும் தேவாரம், திருநீற்றின் பெருமையை சொல்கிறது. திருநீற்றை பூசும் போது, கீழே சிந்தாமல் 'சிவாயநம' என்று சொல்லி பூச வேண்டும். இதற்கு 'பஸ்ம ஸ்நானம்' அல்லது 'திருநீற்று குளியல்' என்று பெயர். இதனால் மனத்துாய்மையும், புண்ணியமும் உண்டாகும்.
கவுரிசங்கருக்கு எத்தனை முகம்


தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் அசுரர்கள் பறக்கும் கோட்டைகளுக்கு அதிபதிகள். பறந்து சென்று, திடீரென ஓரிடத்தில் இறங்கி, உயிர்களை கொல்வது இவர்களின் வழக்கம். சிவன் தன் புன்னகையால் இவர்களை அழித்தார். அப்போது சிவனின் கண்ணில் வழிந்த நீர்த்துளிகள், ருத்ராட்ச விதைகளாக மாறி மரங்களாக வளர்ந்தன.

வலதுபுறம் வழிந்த கண்ணீரில் 12 வகை, இடப்புறம் வழிந்த கண்ணீரில் 16 வகை, நெற்றிக் கண்ணில் 10 வகை ருத்ராட்சம் உண்டாகின. ருத்ராட்சத்திலுள்ள கோடுகளின் அடிப்படையில் முகங்களை கணக்கிடுவர். ஒன்று முதல் 16 முகம் இதில் உண்டு. ஒரு முக ருத்ராட்சத்தை சிவனாக போற்றுவர். இரு முக ருத்ராட்சம் பார்வதியுடன் கூடிய அர்த்தநாரீஸ்வர அம்சமான 'கவுரி சங்கர்' எனப்படுகிறது.இன்றைய ஸ்பெஷல்

சிவன் கோயில் நைவேத்யத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் சிறப்பான நைவேத்ய பிரசாதம் இருக்கிறது.
ஞாயிறு - பாயாசம்
திங்கள் - வெண் பொங்கல்
செவ்வாய் - எள் சாதம்
புதன் - சர்க்கரைப்பொங்கல்
வியாழன் - தயிர் சாதம்
வெள்ளி - வெள்ளை சோறு
சனி - உளுந்து சாதம்
சுவாமிக்கு வெற்றிலை, பாக்கு படைக்கும்போது கற்பூரம், ஜாதிக்காய், பத்திரி, லவங்கம் ஆகியவற்றைச் சேர்க்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Snake Babu - Salem,இந்தியா
13-பிப்-201818:37:45 IST Report Abuse
Snake Babu நண்பர்களுக்கு வணக்கம், ஒரு இடத்தை அடையும் பொருட்டு அதை பற்றி அறியும் தேடலில் நமக்கு வழிகாட்டிகள் கிடைக்கும், வழிகாட்டிகள் வழியை காட்டும், வழியை அறிந்துகொண்டு மேற்கொண்டு பயணிக்கவேண்டும், ஆனால் நடப்பது என்னவோ அந்த வழிகாட்டி அருகிலே அமர்ந்துகொண்டு அது தான் முடிவு என்று இருந்துவிட்டோம். உண்மையில் போகவேண்டிய இடத்திற்கு இன்னும் பயணிக்கவேண்டும். வழிகாட்டியின் துணைகொண்டு. நன்றி. கடவுள் என்பது கட உள் உள் கட அதாவது உள்ளத்தை கடத்தல், இறைவன் என்பது இறைந்து இருப்பது அதாவது நிறைந்து இருப்பது. ஆலயம் இதில் ஆ என்பது ஆன்மா ஆலயம் என்பது ஆன்மாவில் லயித்தல். பகவத் கீதையில் ஆன்ம விசாரணையை தான் முதலில் வரும்,. ரமணர் ஆன்மவிசாரணை தான் வேண்டும் என்று கூறுவார். ரமணரும் அத்யாத்ம ராமாயணத்தில் ராமரும் நேதி நிதி என்று கூறுவர். அதாவது இதுவென்று இதுவென்று என்று ஒவ்வொன்றை அலசி ஆராய்ந்து விடுவது. இப்படி ஒன்று விட்டுக்கொண்டே சென்றால் கடைசியில் சேருமிடம், ஆன்மா, இறுதியான ஒன்று. நாசிக்கு மேல் காசி, அதாவது புருவமையத்தை குறிக்கும் இடம், கண்ணாடி பார்த்தல் கண் நாடி பார்த்தல், புருவமையம், நுனி மூக்கின் மேல் கவனத்தை வை என்று கூறுவதும் இதையேதான். மூக்கின் ஒரு நுனி நாம் பார்ப்பது இன்னொரு நுனி பருவமையம். அண்ணாமலை தீபம் அண்ணாக்கின் மேல் உள்ள மலை அதாவது புருவமையம். தீபாவளி தீபஒளியை காண்பது. தீபவொளி பூர்வமய்யத்தில் ஏற்படும் ஒளி... பெண்களுக்கு திலகம் ஆகட்டும், ஆண்களுக்கு திருநீறு (இதற்கு வேறு விளக்கம் இருக்கிறது இன்னொரு நாள் பார்ப்போம்), திருமண் என அதேபோல வேறு மதத்திலும் இந்து புருவமையம் ஒரு முக்கியமானதாவே கருதப்படும்.......... ஆக அனைத்தும் கூறுவது வெளியில் அல்ல நமக்குள்ளே......... ஆன்மா அறியப்படும் இடம் அந்த புருவமைத்தில் தான். அதனால் புருவமையம் அனைத்து இடத்திலும் முக்கியமாக கருதப்படுகிறது. வெளியில் இருக்கும் வரைக்கும் தான் அதன் மனம், அதே மனம் உள்ளுக்குள் திரும்பும் போது இது சிவம் என்பது. இதுதான் சிவம். மனம் அடங்குவது என்பதுதான் அனைத்திற்கும் தேவையானது. ஆங்காங்கு இதை ஒவ்வொரு பெயர்கொண்டு அழைக்கப்படுகிறது, கீதையில் வரும் எந்த வழியில் சென்றாலும் சேரும் இடம் இன்றே இடம் தான். நாராயணன், அயனன் உறங்குபவன் நாராயணன் உள்ளுக்குள் உறங்குபவன், பாற்கடலில் பள்ளிகொண்டான், பாற்கடலும் உள்ளுக்குள்ளே. சித்தர்கள் அறிந்துகூறியது. அதனால் இது வரை மனம் வெளியில் தெரிந்த்தை இனிமேல் உள்ளுக்குள் திருப்ப வேண்டும். மனம் திரும்புங்கள் பரலோகராஜ்ஜயம் சமீபத்தில் இருக்கிறது. இதே தான். உள்ளுக்குள் திரும்பினால்..............., சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுதான்... தியானம் என்பது இந்த ஒருங்கிணைத்தல் செயலைதான் குறிக்கும், இப்படி வெளியில் இருக்கும் மனம் உள்ளே அடங்குதல், அடங்கி கலந்து விடுதல், அதாவது தோன்றிய இடத்திற்கு திரும்பி சென்றுவிடுவதே சிவம் எனப்படும். சிவம் என்பது மனம் என்ற ஒன்று செயல்படாத நிலை, நிகழ்காலத்தில் வாழ்வது. இப்படி கலந்தவர்களுக்கு அமரர்கள், தேவர்கள், சித்தர்கள், என இப்படி பலபேர், உதாரணத்திற்கு மார்க்கண்டேயன் சிவத்தை பற்றியதால் தன்னுள் இருப்பதில் கலந்ததால் சாகாவரம் பெற்றார். கண்ணப்ப நாயனார் காலைக்கொண்டு அதாவது கால் என்பது காற்றை குறிக்கும், காலைக்கொண்டு காற்றைக்கொண்டு கண்ணை வைத்து சிவனுடன் கலந்ததால் அவருக்கு கண்ணப்பனாயினார் என்று அழைக்க படுகிறார். இப்படி அடைந்தவர்களின் ஜீவசமாதி மேல் தான் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆலயங்களாக சிவன் கோவிலாக இருக்கிறது. அமைதி ஆனந்தம் நிரம்பியிருக்கும் இடம், குழப்பத்தோடு செல்பவர்களுக்கு அமைதி ஏற்படுவது இதனால்......... விசயத்திற்கு வருவோம் சிவராத்திரி, புருவமயத்தில் அதாவது புருவமைய தியானத்தில் ஜோதியை காணாதவரை இரவே, அது இரவே எப்போதும் இரவே, ஜோதியை - சிவத்தை அடைந்துவிட்டால் அப்போதிருந்து பகல், ஆகையால் சிவராத்திரி பூஜை . சிவராத்திரியில் விழித்திருப்பது என்பது சிவத்தை மறைக்கும் தன்னுள் இருக்கும் இறைநிலையை மறைக்கும் அழுக்கு, மாயை, அரக்க குணம், திரை இப்படி பலவேறு விதங்களாக சொல்லலாம் இதை அணுகாமல் பார்த்திருப்பதே விழித்திருப்பது,வள்ளலார் கூறிய விழித்திரு, தூங்காமல் இருப்பது அல்ல, .. ஆகையால் சிவ ராத்திரியில் விழித்திருந்து பூஜை என்பது சிவத்தை மறைக்காதபடி விழித்திருந்து கவனிப்பதே ஆகும் இப்படி இருந்தால் மனம் தான் தோன்றிய இடத்திற்கு திரும்பி சென்று விடும். கலத்தல், ஆன்மா மனம், பரமாத்மா ஜிவாத்மா இரண்டற கலப்பது. இரண்டல்ல ஒன்றாவது அதாவது அத்வைதம். இப்படி கலப்பதையே காதலாகி கசிந்து என்றும் கூறுவார். ஆகவே அனைவருக்கும் ஜோதி தெரியட்டும், சிவம் தெரியட்டும். அத்வைதம், முக்தி கிடைக்கட்டும். அனைவருக்கு இனிய சிவ ராத்திரி வாழ்த்துக்கள், இரண்டற கலப்பதால் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள். நன்றி வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X