ஸ்ரீரங்க பூபதி கல்லூரியில்  தமிழ் சங்க விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீரங்க பூபதி கல்லூரியில்  தமிழ் சங்க விழா 

Added : பிப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்லுாரியில் தமிழ் சங்கம் சார்பில், பொங்கல் விழா நடந்தது.செஞ்சி தாலுகா ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்லுாரியில், செஞ்சி தமிழ்சங்கம் சார்பில் பொங்கல் விழா மற்றும் மறைந்த நடிகர் சிவாஜி விழா நடந்தது.கல்லுாரி தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். செஞ்சி தமிழ் சங்க தலைவர் கவிதாஸ் வரவேற்றார். செயலாளர் ஸ்ரீபதி, இயக்குநர் சாந்தி பூபதி, மருத்துவமனை நிர்வாக இயக்குநர்டாக்டர் சர்மிஸ்ரீ முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், எம்.பி., திருச்சி சிவா, திரைப்பட நடிகர் பாக்கியராஜ் சிறப்புரை நிகழ்த்தினர். எம்.எல்.ஏ., மஸ்தான், சிவாஜி சமூக நலபேரவைதலைவர் சந்திரசேகர், கருநாகரசான் வாழ்த்துரை வழங்கினர். முத்து, தலைமையாசிரியர் முத்து கருத்துரை வழங்கினர். நவஜேதி தலைமையில், சிவாஜியின் திரைப்படங்கள் குறித்த பட்டி மன்றம் நடந்தது.தமிழ் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதரன், தேவமூர்த்தி, ஜெய்சங்கர், அம்பேத்கர், பாபு, விமலா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். சிறந்த மாணவர்களுக்கு, எம்.பி., சிவா பரிசளித்து, பாராட்டினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை