சட்டசபையில் ஜெ., உருவப்படம் திறப்பு: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சட்டசபையில் ஜெ., உருவப்படம் திறப்பு:
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

சென்னை : முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் உருவப்படம், தமிழக சட்டசபையில், நேற்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை, தி.மு.க., - காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

A.D.M.K,Jayalalithaa,அ.தி.மு.க,ஜெயலலிதா


ஜெ., மறைவுக்கு பின், முதல்வராக பொறுப்பேற்ற பழனிசாமி,பிரதமர் மோடியைசந்திக்க டில்லி சென்ற போது, சட்டசபையில், ஜெ., உருவப்படத்தை திறந்து வைக்க கோரிக்கை விடுத்தார்.

பச்சை நிற உடை


ஆனால், அரசியல் சூழல் காரணமாக, இந்த கோரிக்கையை, மோடி ஏற்கவில்லை. இந்நிலையில், ஜெ., உருவப்படத்தை, தலைமை செயலக வளாகத்தில் உள்ள, சட்டசபையில் திறந்து வைக்க, தமிழக அமைச்சரவை முடிவெடுத்தது.

அதன்படி, சட்டசபையில் நேற்று காலை, 9:30 மணிக்கு விழா துவங்கியது. இதற்காக, சபாநாயகர் இருக்கை அகற்றப்பட்டு, அங்கு, நிகழ்ச்சி மேடை அமைக்கப்பட்டிருந்தது.தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர்,பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர், ஜெயராமன் ஆகியோர் பேசினர்.பின், ஜெ., உருவப்படத்தை, சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். சட்டசபையில், சபாநாயகர் இருக்கைக்கு வலது புறத்தில், உருவப்படம் மாட்டப்பட்டு உள்ளது. பச்சை நிற உடையில் காணப்படும், ஜெ., உருவப்படத்தின் கீழ், 'அமைதி, வளம், வளர்ச்சி' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

ஜெ., உருவப்படத்தை வரைந்து தந்த, ஓவியக் கல்லுாரி பேராசிரியர், மதியழகனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன்,நிதித் துறை செயலர், சண்முகம் உள்ளிட்ட மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்; தமிழக, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

A.D.M.K,Jayalalithaa,அ.தி.மு.க,ஜெயலலிதா


மலர் அலங்காரம்


மேலும், அ.தி.மு.க., அவைத் தலைவர், மதுசூதனன், முன்னாள் சபாநாயகர், பி.எச்.பாண்டியன் உள்ளிட்ட ஆளுங்கட்சி பிரமுகர்கள், ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள்; முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் வாரிய தலைவர்களும் பங்கேற்றனர்.

ஜெ., உருவப்படம் திறக்க, எதிர்க்கட்சித் தலைவர், ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு, அரசு செவி சாய்க்காததால், படத்திறப்பு விழாவை, தி.மு.க., - காங்., புறக்கணித்தன.

Advertisement

சுயேச்சை, எம்.எல்.ஏ.,க்கள், தினகரன், தமிமுன் அன்சாரி ஆகியோர் பங்கேற்கவில்லை; கருணாஸ் பங்கேற்றார். ஜெ., உருவப்பட திறப்பையொட்டி, சட்டசபையில், கண்ணை பறிக்கும் விதத்தில், பல்வேறு வண்ணங்களில், மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தலைமை செயலகம் மற்றும் கடற்கரை சாலையில், ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

'பிரதமர் ஏன் வரவில்லை'


தமிழக சட்டசபையில், ஜெ., உருவப்படம் நேற்று திறக்கப்பட்டட நிலையில், அறிவாலயத்தில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டி: உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என, அறிவிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவர், உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவோடு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்.

குட்காவை சபையில் காண்பிக்கும் போது, சபை மீறல் எனக் கூறி, எங்கள் மீது, சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார். தற்போது அவரே, ஜெ., உருவப்படத்தை திறந்து, சபையின் மரபை மீறியுள்ளார். இது தொடர்பாக, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில், ஜெ., படம் வைப்பது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அவசர அவசரமாக, சட்டசபையில், ஜெ., உருவப்படம் திறக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.ஜெ., உருவப்படத் திறப்பு விவகாரத்தில், நாங்கள் அரசியல் செய்யவில்லை; அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விழாவிற்கு, பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வராதது ஏன் என்பதற்கு, அமைச்சர் ஜெயகுமார் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
14-பிப்-201800:06:14 IST Report Abuse

Manianஒரு கோடி அயோக்கியர்கள் இருந்தால்தான் ஒரு நல்ல மனிதனைப் பற்றி பேச முடியும்.

Rate this:
Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா
13-பிப்-201820:34:15 IST Report Abuse

Krishnamurthy Ramaswamyஅக்கிரமக்காரர்கள் கடைசி புகலிடம் அரசியல் ' என்றார் பெர்னார்ட் ஷா தமிழகத்தில் காமராசருக்குப்பின் வந்த தலைவர்களில் அண்ணாவை விட்டு எல்லா திராவிட அரசியல் வாதிகள் ' ஊழல் பேர்வழிகள் ' கருணாநிதி 'இந்திராவிடம் சரண் அடைந்திராவிட்டால் இன்று வரை அவர் 'புகழிலோ அல்லது வேறு சிறையிலோ ' விஞ்ஞான முறை திருட்டை இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தி ' அதில் முனைவர் பட்டம் பெற்றவர் சுடாலின் தந்தை வம்சத்தினர் .ஜெயா -வும் அதில் கொஞ்சமும் சளைத்தவர் அல்ல. 'ஊழல் என்பது வெள்ளை சட்டை போட்டிருக்கும் அரசியல் வாதிகளின் அடையாளம் ' திராவிட அரசியல் வாதிகள் அனைவரது ஆஸ்தி ,அசையும் அசையாத சொத்துக்கள் ஊழலால் வந்ததே ' இதில் ஜெயாவை நாம் பாராட்டுவது 'மோதியா அல்லது இந்த லேடியா என்று தேர்தல் சமயத்தில் அதுவும் மோதியின் பலமான அலையை கேர் பண்ணாமல் பேசியதுமட்டும் அல்ல '37 சீட்டுகள் வென்றும் காட்டினார் . அது மட்டும் அல்ல ' சாதாரண கிராமப்புற பிள்ளைகள் எத்தனை பேர் அவரால் மருத்துவ எஞ்சினீரிங் மற்றும் பட்டதாரியாகி இருக்கின்றனர் . இலவச சைக்கிள் , லாப் டாப் இலவச பஸ் போன்றவை அதில் அடங்கும் . அவர் மட்டும் இருந்திருந்தால் போன இந்த ' நீட் தேர்வை கட்டாயம் தமிழக குழந்தைகளுக்கு விலக்கு வாங்கி இருப்பார் .இன்றைய தமிழக அரசியல் ஒரு கேலிக்குறியாக்கி ,கண்டவர்கள் கண்டபடி பேசும் தைர்யம் அவர் இல்லாததால் ,இந்த கமல் விஜய் , ரஜனி போன்றவர்கள் இருக்கும் இடம் தேடி கண்டு பிடிக்க வேண்டும் [ முக்கியமாக அரசியலில் ] புரோஹித் கவர்னர் இப்படி துள்ளுவாரா ஜெயா இருந்து இருந்தால் ,மோடிதான் தமிழகத்தை கேவலப்படுத்த முடியுமா / சித்த ராமையா தமிழகத்தை பற்றி பேச விட்டிருப்பாரா ? சுடாலின் 'எண்ணையில் போட்ட கடுகு போல் துள்ளுவாரா ' இந்த ஆளுமை திறமை பேச்சுத்திறமை [ தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி மற்றும் ஆங்கிலம் ] , கணீர் குரல் எல்லாவற்றிக்கும் அவ்ருக்கு போட்டோ வைப்பது தவறு இல்லை . அவர் செய்த நற்பணிகள் ' அவரது ஊழலை சிறு கோடு ஆக்கிவிட்டது ' அவர் ஒரு சிறந்த தலைவர் ,சுடாலின் அவர்களே கூறியதுபோல் ' அவரை எதிர்ப்பவர்கள் ஒரு சிங்கத்தை எதிர்ப்பதுபோல் எண்ணுவர் ' [அவரது ஊழல் ஒரு குறையே ,தப்பு செய்யாத மனிதர் யார் ]

Rate this:
kandhan. - chennai,இந்தியா
13-பிப்-201819:23:46 IST Report Abuse

kandhan.தமிழகத்தில் பகுத்தறிவாதிகளின் எண்ணிக்கையை பார்த்தால் குறைந்து கொண்டே வருகிறது காரணம் என்ன என்றால் மக்களின் மூடநம்பிக்கையை வைத்து இந்த ஆட்சி நடக்கிறது அதிலும் பி ஜே பி யின் துணையோடுதான் நடக்கிறது என்பதை சிறு குழந்தைக்கு கூட தெரியும் உண்மை புரியும் காரணம் கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்திடம் ஆட்சி சிக்கியுள்ளதால் இந்த நிலை ,ஜெயா அம்மையாரின் பட திறப்பை வைத்தே சின்ன அம்மாவை தியாகி போல மாற்றி வரும் தேர்தலில் பணத்தோடு வோட்டு கேட்க வருவார்கள் அப்போதும் இந்த மானம் கெட்ட மக்கள் இவர்களுக்கு பணத்தை பெற்றுக்கொண்டு வோட்டு போடுவார்கள் இதுதான் அம்மாவின் சாதனை மக்களே சிந்தித்து இந்த கயவர்களை துரத்துங்கள் இல்லையேல் நம் நாடு ???????சிந்தித்தால் உண்மை புரியும் கந்தன் சென்னை

Rate this:
Urimai Kural - CHENNAI,இந்தியா
13-பிப்-201815:19:34 IST Report Abuse

Urimai Kuralஉழல்வாதிகளுக்கு ஊக்கம் அளிப்பது போன்று உள்ளது

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
13-பிப்-201815:15:52 IST Report Abuse

Endrum Indianஓம் டாஸ்மாக் நாடு நாசனமாய நமஹ என்று ஓங்காரம் கேட்கின்றது அது தான் இந்த படத்திற்கு பூஜை செய்யும் மந்திரம்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-பிப்-201815:10:26 IST Report Abuse

Pugazh Vஜெயா படத்தைப் பார்ப்பதே தண்டனையா? இது என்ன புதுசா இருக்கு? ஊழலுக்கு எதிரான பிஜேபி இந்த நிரூபிக்கப்பட்ட ஊழல் பேர்வழியின் படத்தை வைப்பதில் தஹபிபே இல்லை என்று எல்லா டி வி யிலும் நேற்று வாழ வாழ கொழ கொழா என்று சல்லியடித்தார்கள் பார்க்க படா ஜோராக இருந்தது. ஒரு டி வி யில் நிருபர் கேட்டார் : ஜெயா குற்றவாளியா இல்லையா? அதற்க்கு பிஜேபி ஆசாமி சொல்கிறார் : அதல்ல பிரச்னை, ஜெயா இறந்துவிட்டார் , அவர் ஊழல் செய்திருக்கலாம், அது வேறு படம் வைப்பது வேறு"..அப்படியே புல்லரித்துவிட்டது. பங்கு கண்டெயினர்ல வந்துடுச்சில்லா அப்புறம் எப்படி எதிர்க்கறது?

Rate this:
Karun Muruga - banglore,இந்தியா
13-பிப்-201813:57:35 IST Report Abuse

Karun Murugaசட்ட சபைக்குள் கரை படியாத கை லஞ்சம் வாங்காத கை குடும்ப அரசியல் இல்லாத.. பொதுநலம் மட்டுமே உள்ளவர் யார் அவர் ஜெயா போட்டோவை கழட்டட்டும் .. சவாலுக்கு யார் தயார்

Rate this:
Divahar - tirunelveli,இந்தியா
13-பிப்-201812:42:40 IST Report Abuse

Divaharகுமாரசாமி படத்தையும் எங்காவது வைக்க வேண்டும்

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-பிப்-201820:01:43 IST Report Abuse

தமிழ்வேல் ஜெயில்ல ?...

Rate this:
Muthu Ramalingam - THOOTHUKKUDI ,இந்தியா
13-பிப்-201811:57:30 IST Report Abuse

Muthu Ramalingamஉயிருடன் இருந்தால் பரப்பன அக்ரஹார சிறையில்?? இறந்தால் தமிழக சட்டமன்ற அவையில் ஆள் உயர படம் டேய் என்னங்டா உங்கள் அரசியல்

Rate this:
A.Gomathinayagam - chennai,இந்தியா
13-பிப்-201810:35:55 IST Report Abuse

A.Gomathinayagamஊழல் வாதிகள் அவர்கள் தலைமைக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement