பள்ளிகள் செயல்பாட்டில் தலையீடு இருக்காது; ஆசிரியர்களிடம் செங்கோட்டையன் உறுதி Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பள்ளிகள் செயல்பாட்டில் தலையீடு இருக்காது;
ஆசிரியர்களிடம் செங்கோட்டையன் உறுதி

சென்னை : ''பள்ளிகளை நல்ல முறையில் நடத்துங்கள். அதில், எங்கள் தலையீடு இருக்காது; வெளிப்படை தன்மையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்,'' என, விடுப்பு எடுக்காத ஆசிரியர்களுக்கு, நற்சான்றிதழ் வழங்கிய, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

பள்ளிகள் செயல்பாட்டில் தலையீடு இருக்காது; ஆசிரியர்களிடம் செங்கோட்டையன் உறுதி


அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆண்டின், 210 வேலை நாட்களிலும், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு, பாராட்டு நற்சான்றிதழ் வழங்கும் விழா, சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று நடந்தது.

பாராட்டுதொடக்கக் கல்வி இயக்குனரகம் சார்பில் நடந்த விழாவில், 2016 - 17ம் கல்வி ஆண்டில், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய, 51 ஆசிரியர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:மாநிலத்தில் உள்ள, 45 ஆயிரத்து, 120 பள்ளிகளில், 2.21 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில், 51 பேர் மட்டுமே, ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல், பணிக்கு வந்துள்ளனர்.

மற்ற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஆசிரியர்களை ஊக்கப்படுத்த, இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில், இந்த எண்ணிக்கை, 50 ஆயிரமாக உயர வேண்டும்.

தொடக்கப் பள்ளிகளில், 37. 81 லட்சம்மாணவர்களில், 20 ஆயிரத்து, 739 மாணவர்கள் மட்டுமே விடுப்பு எடுக்காமல், பள்ளிக்கு வந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை உயர, பெற்றோர் ஒத்துழைப்பு தர வேண்டும். பள்ளிகளை ஆசிரியர்கள் நல்ல முறையில் நடத்த வேண்டும்; அதில், எங்களின் தலையீடே இருக்காது; வெளிப்படைத் தன்மையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இந்த விழாவில், சால்வைக்கு பதிலாக புத்தகம் அளித்தனர். அதிலொரு புத்தகம், 'கண்டேன் புதையலை' என்ற தலைப்பில் இருந்தது. புதையலான கல்வியை மாணவர்களுக்கு தர, ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். அடுத்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. மாணவர்களுக்கு புதிய நிறத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன.

பிளஸ் 2 படிக்கும், 70 ஆயிரத்து, 432 மாணவர்கள், போட்டி தேர்வு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு, மார்ச், 20க்குள், இலவச, 'லேப் - டாப்' வழங்கப்படும். அதில், போட்டி தேர்வு பயிற்சி பாடங்கள் இணைக்கப்பட்டிருக்கும். அவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தி, எட்டு கல்லுாரிகளில், தலா, 500 பேர் என, 4,000 பேருக்கு, உணவு, உறைவிடத்துடன், 25 நாட்கள் தொடர் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


சுழற்கேடயம்


கற்றல், கற்பித்தல்; பள்ளி இணை செயல்பாடுகள் மற்றும் பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்திருத்தல் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டதாக, மாவட்டத்திற்கு மூன்று பள்ளிகள் வீதம், 96 பள்ளிகளுக்கு சுழற்கேடயத்தையும், சான்றிதழையும், தலைமை ஆசிரியர்களிடம், செங்கோட்டையன் வழங்கி பாராட்டினார்.

விழாவில், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் சிறப்புரையாற்றினார். தொடக்கக் கல்வி இயக்குனர், கருப்பசாமி வரவேற்றார். பாடநுால் கழக மேலாண் இயக்குனர், ஜெகநாதன், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர், நந்தகுமார், இயக்குனர்கள், இளங்கோவன், கண்ணப்பன், இணை இயக்குனர்கள், பாஸ்கர சேதுபதி, ஸ்ரீதேவி, நாகராஜ முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
13-பிப்-201812:13:05 IST Report Abuse

rajan.  அப்போ இனி பணி நியமனம், இடமாற்றத்துக்கு எல்லாம் லஞ்சம் வாங்க மாட்டீங்களாமா. அப்புறம் இது எப்படி அம்மா வழி ஆட்சின்னு சொல்லுவீக? என்னப்பா இது கட்டிங் இல்லாத துறை எங்களுக்கு கசப்பாசே. அட போங்கப்பா.

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
13-பிப்-201811:57:36 IST Report Abuse

IndhuindianIt is not just enough to keep off daily affiairs of the school and college education. Ensure that the ion of teaching and non teaching staff are purely on merit and for any other consideration including on money and e consideration. Similarly institute a proper incentive and punishment for poor results.implement curriculum on expert advice on par with national standards. Just the numbers is not sufficient it is the quality of education. The proof of the pudding is in eating. Just ensure that the students coming out of technical institutions are employable. Along with curriculum provide vocational guidance and make at the least 20% of the students venturing on their own so that they are gainfully self employed and also provide employment for others. Encourage start up ventures however insignificant they may appear. After all Apple Computers started in a car garage. These are possible only there exists sufficient infrastructure and dedicated and qualified teaching staff.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
13-பிப்-201811:06:20 IST Report Abuse

balakrishnanமற்ற வடஇந்திய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நமது கல்வி ஒன்றும் அவ்வளவு தரம் தாழ்ந்தது இல்லை, நமது மாணவர்களும் மோசம் இல்லை, இருப்பதை இன்னும் மேம்படுத்தவே விமர்சனங்கள், அரசு மேலும் சிறப்பாக பணியாற்றினால் நன்றாக இருக்கும்

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X