ஊழல் துணைவேந்தருக்கு 5 நாள் போலீஸ் காவல் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஊழல் துணைவேந்தருக்கு
5 நாள் போலீஸ் காவல்

கோவை : லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான, துணை வேந்தரை தொடர்ந்து ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது.

ஊழல் துணைவேந்தருக்கு 5 நாள் போலீஸ் காவல்கோவை பாரதியார் பல்கலை கழக துணை வேந்தர் கணபதி, 67, வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ், 54, ஆகியோர், உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு, 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், கடந்த, 3ல், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

துணை வேந்தர் கணபதியை, ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு, லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, நீதிபதி, ஜான்மினோ முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, ''உங்களை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டுள்ளனர். என்ன சொல்கிறீர்கள்?'' என்று துணைவேந்தரிடம் கேட்டார். ''போலீஸ் காவலில் செல்ல விரும்பவில்லை,'' என, துணைவேந்தர் பதில் அளித்தார்.

விபரம் தெரிய வரும்


தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் சிவக்குமார் வாதிட்டதாவது: லஞ்சப்பணம் ஒரு லட்சம் ரொக்கத்துடன், நான்கு காசோலைகளை பெற்றுள்ளார்.

இது பற்றி பல முறை விசாரித்தும், எதிரி வாய் திறக்க மறுக்கிறார். 'கஸ்டடி' எடுத்து விசாரித்தால் மட்டுமே, காசோலை நிலை பற்றிய விபரம் தெரிய வரும். உதவி பேராசிரியருக்கான பணி நிரந்தரம், பணி வரன்முறை மற்றும் இதர தொடர்பு பற்றியும் விசாரிக்க வேண்டியிருக்கிறது. காசோலையை கைப்பற்றாவிட்டால், வழக்கு விசாரணை தன்மை பாதிக்கப்படும்.

துணை வேந்தரிடம் விசாரித்த போது, 'காசோலையை வாங்கவில்லை' என்று அவர் கூறவில்லை; 'எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை' என்று கூறியிருக்கிறார். அப்படியானால், அவர் காசோலையை வாங்கியது உறுதியாகிறது. காசோலையை கைப்பற்ற போலீஸ், 'கஸ்டடி'க்கு அனுமதிக்க வேண்டும்.

திசைதிருப்பும்


எதிர்தரப்பு வக்கீல் ஞானபாரதி வாதிட்டதாவது:போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, போலீசார் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், குறைபாடுகள் உள்ளன. போலீஸ் காவல் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவில், சட்டப்பிரிவையே தவறாக குறிப்பிட்டுள்ளனர்.

இதை வைத்தே மனுவை நிராகரிக்கலாம்.அவரிடம், 16 மணிநேரம் வீட்டில் வைத்து விசாரித்தும், காசோலையை கைப்பற்றவில்லை. பிரமாண பத்திரத்தில் காசோலை பற்றியும், போலீஸ் காவலுக்கான அவசிய தேவை பற்றியும் எதுவும் குறிப்பிடவில்லை.

போலீஸ் காவல் கொடுத்தால், புதிதாக ஆவணங்களை ஜோடிக்கும் வாய்ப்புள்ளது. காசோலை எண், வங்கியின் பெயர் எதுவும் குறிப்பிடவில்லை.மேற்கொண்டு விசாரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எதுவும் மனுவில் குறிப்பிடவில்லை. நீதிமன்றத்தை திசைதிருப்பும் நோக்கத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.இவ்வாறு எதிர்தரப்பு வக்கீல் கூறியபோது, அரசு வக்கீல் குறுக்கிட்டு, கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

''இது லஞ்சம் வாங்கி, பொறுக்கித் தின்னதாக போடப்பட்ட வழக்கு. நீதிமன்றத்தை திசை திரும்பும் அவசியம் எங்களுக்கு இல்லை,'' என்றார்.குறுக்கிட்ட நீதிபதி,''நீதிமன்றத்தை திசை திருப்ப முடியாது,'' என்றார்

Advertisementஇதற்கு பதில் அளித்த எதிர்தரப்பு வக்கீல், ''நீதிமன்றத்தை திசை திருப்புவதாக கூறவில்லை. விசாரணை அதிகாரிகளை தான் கூறினேன்,'' என்றார்.அனுமதிக்க வேண்டும் தொடர்ந்து அரசு வக்கீல் வாதிடுகையில், ''லஞ்சம் வாங்கிய ரூபாய் நோட்டுக்களின் எண், காசோலை எண், வங்கி பெயர் உள்ளிட்ட விபரங்களை, முன் கூட்டியே நீதிமன்றத்துக்கு அனுப்பிய மனுவில்குறிப்பிட்டுள்ளோம்.

'காசோலையை எங்கே வச்சிருக்கேன் என்று தெரியவில்லை' என, போலீசில் எதிரி கூறியிருக்கிறார்.''கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது, அவர் சொன்னதை மறுக்கவில்லை. எனவே, காசோலையை கைப்பற்றவும், வழக்கு தொடர்பாக மேலும் விசாரிக்க வேண்டியும், போலீஸ்கஸ்டடிக்கு அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.

அமைதியாக சென்றார்


இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, துணைவேந்தர் கணபதியை, வரும், 16 வரை, ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன், துணை வேந்தர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

'திருவாசகம்' படிக்கும் கணபதி


துணை வேந்தர் கணபதியை கோர்ட்டிற்கு அழைத்து வந்த போது, அவரது கையில், மாணிக்கவாசகர் எழுதிய, 'திருவாசகம்' என்ற புத்தகத்தை வைத்திருந்தார். கடந்த, 9ல், கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டபோது, நிருபர்களை பார்த்து ஆவேசமாக பேசிய அவர், நேற்று எதுவும் பேசாமல் அமைதியாக சென்றார். இறுக்கமான முகத்துடன் காணப்பட்டார். நீதிமன்றத்தில் நடந்த இரு தரப்பு வக்கீல் வாதங்களை, துணை வேந்தரின் மகன் உன்னிப்பாக கவனித்தார்.

Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivek Anandan - Singapore,சிங்கப்பூர்
13-பிப்-201815:19:24 IST Report Abuse

Vivek AnandanGOOD NEWS, ACTION WILL START INTERESTING S WILL COME SOON

Rate this:
Saai sundaramurthy. A.V.K - chennai,இந்தியா
13-பிப்-201814:42:05 IST Report Abuse

Saai sundaramurthy. A.V.Kலஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவர்களையும் கைது செய்து தண்டிக்க வேண்டும். ஏனெனில், லட்சக்கணக்கில் பரிமாற்றம் நடந்திருக்கிறது. இப்பொழுதெல்லாம், மக்களே லஞ்சம் வாங்கிக்கொண்டு ஒட்டு போடா ஆரம்பித்து விட்டார்கள்.

Rate this:
christ - chennai,இந்தியா
13-பிப்-201811:19:47 IST Report Abuse

christநாட்டையே அரித்து விடும் இவனை போன்று மக்களின் ரத்தத்தை அட்டை போல உறிஞ்சி குடிக்கும் லஞ்ச பேய்களால்

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X