பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவியர்: அதிகாரிகள் விசாரணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவியர்: அதிகாரிகள் விசாரணை

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரம்பலூர்: 'தினமலர்' செய்தி எதிரொலியாக, மாணவியரை கழிவறை சுத்தம் செய்ய வைத்த பள்ளியில், கல்வித் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆதனூர் யூனியன் துவக்க பள்ளியில், ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறையை, பள்ளியில் பயிலும் மாணவியர் இருவர் சுத்தம் செய்தனர். இது குறித்து, நேற்று, தினமலர் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, கல்வி துறை அதிகாரிகள் நேற்று பள்ளியில் விசாரணை நடத்தினர். மாணவ, மாணவியர், பெற்றோர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரித்தனர். இதில், ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறையை, ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரை வைத்து, தினமும் ஆசிரியர்கள் சுத்தம் செய்தது உண்மை என தெரிந்தது. மேலும், இக்கொடுமையை வெளியில் கொண்டு வருவதற்காக, அடையாளம் தெரியாத இரு வாலிபர்கள், சம்பந்தப்பட்ட மாணவியரை கழிவறை சுத்தம் செய்வது போல் நடிக்க சொல்லி, வீடியோ எடுத்து, 'வாட்ஸ் ஆப்'பில் பரப்பியதும் தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-பிப்-201809:05:38 IST Report Abuse
Srinivasan Kannaiya தலைமைஆசிரியரிடம் முன்பே படித்த மாணவர்களோ... பழைய கடனை தீர்த்து விட்டார்கள் போல உள்ளது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X