செப்., 20 வரை நம்பிக்கை ஓட்டெடுப்பு கூடாது: ஐகோர்ட்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

செப்., 20 வரை நம்பிக்கை ஓட்டெடுப்பு கூடாது: ஐகோர்ட்

Updated : செப் 14, 2017 | Added : செப் 14, 2017 | கருத்துகள் (57)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
தினகரன்,Dinakaran, திமுக,DMK, ஐகோர்ட்,High Court, கவர்னர்,Governor, தமிழக சட்டசபை,Tamil Nadu Assembly, சென்னை, Chennai, முதல்வர் எடப்பாடி பழனிசாமி , Chief Minister Edappadi Palanisamy,  திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,DMK Act Leader Stalin, வழக்கறிஞர் கபில்சிபல், Advocate Kapilipal, பெரும்பான்மை,Majority, எம்.எல்.ஏ., MLA,

சென்னை: வரும் செப்., 20ம் தேதி வரை தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது பெரும்பான்மை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று துவங்கியது.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் தனது வாதத்தில்; பெரும்பான்மை நிரூபிக்க வேண்டியது அரசின் கடமை. அதற்கு உத்தரவிட வேண்டியது கவர்னரின் கடமை. ஆனால் கவர்னர் இதற்கு காலம் தாழ்த்துவது ஏன் ? முதல்வரும், கவர்னரும் கூட்டாக சேர்ந்து ஒரு அணியாக செயல்படுகின்றனர். திமுகவை சேர்ந்த 21 மற்றும் அதிமுக எம்.எல்.ஏ,.க்கள் 19 பேர் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய அரசு முயற்சித்து வருகிறது எனக்கூறினார்.
இந்த விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சார்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அட்வகேட் ஜெனரலான பி.எஸ்.ராமன் ஆஜராகி முறையிட்டார். இந்த முறையீட்டில் நாங்களும் இதில் வாதிட அனுமதி வழங்க வேண்டும் என கோரினார்.
இதனையடுத்து நீதிபதிகள்; தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என சபாநாயகர் மற்றும் சட்டசபை பேரவை செயலாளரிடம் கேட்டு இன்று மாலைக்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞரிடம் கூறினர்.


மதியம் 2 மணியளவில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்தார். மேலும் எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி துவங்கி விட்டது. நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று உத்ரவாதம் அளிக்க முடியாது. சபாநாயகர் அதிகாரத்தில் கோர்ட் தலையிட முடியாது என்று கூறினார்.


இதனையடுத்து தகுதி நீக்கம் செய்துவிட்டு மெஜாரிட்டியை நிரூபிக்க முயற்சிகள் நடக்கிறது என்று திமுக மற்றும் தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் வரும் செப்., 20 வரை நம்பிக்கை ஓட்டெடுப்பு கூடாது என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சபாநாயகர், சட்டப்பேரவை செயலர், கவர்னரின் செயலர் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


திமுகவின் மற்றொரு வழக்கு:குட்கா பொருட்களை சட்டசபைக்கு கொண்டு வந்தது தொடர்பாக திமுக எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சபாநாயகர் உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதில் எம்எல்ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்ற மனு மீது விசாரணை இன்றும் நடந்தது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து வரும் அக்.12 ம் தேதி முடிவு செய்வதாகவும், இதுவரை சபாநாயகர் எவ்வித நடவடிக்கையும் எடுக்க பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு நீடிப்பதாகவும் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (57)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-செப்-201702:16:22 IST Report Abuse
Mani . V "நீதிமன்றங்கள்" என்ற பெயர் பலகைகளை நீக்கி விட்டு "ஆளும் கட்சி ஆதரவு மன்றம்" என்று பெயர் மாற்றம் செய்து விடலாம். பேசாமல் 2020 ஆண்டு வரை நம்பிக்கை வாக்கெடுப்பு கூடாது என்று உத்தரவு இடலாம். டிவி ஷோக்களில் வரும் நீதிபதிகள் எவ்வளவோ மேல்.
Rate this:
Share this comment
Cancel
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
15-செப்-201701:34:24 IST Report Abuse
Nagan Srinivasan சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் இப்போதெல்லாம் ஜோசியர்களை கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுக்கின்றார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
14-செப்-201720:36:55 IST Report Abuse
Kuppuswamykesavan எனக்கென்னமோ, திரு பி.எச். பாண்டியன் சார் (முன்னாள் சபாநாயகர்), என்ன ஒப்பினியன் கூறுகிறார் என்று அட்வைஸ் கேட்பதில் தவறில்லைதானே?.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
14-செப்-201720:03:44 IST Report Abuse
mindum vasantham Muthalamaichar aakura arivu suthaama I'll a stalinukku , he could have easily formed alliance with bjp and captured power instead stuck with veeramani and going to tihar
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201718:48:46 IST Report Abuse
Srinivasan Kannaiya செப்., 20 க்குள் எல்லாவித பிரச்சனைகளுக்கும் விடிவுகாலம் வந்துவிடுமா...
Rate this:
Share this comment
Cancel
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
14-செப்-201718:40:11 IST Report Abuse
karthikeyan இந்த மாதிரி எப்போதும் கோர்ட்டில் வழக்கு அடித்து கொண்டால் லாயர்தான் ஓட்டு போட வேண்டும். கொஞ்சம்கொஞ்சமாவது மக்களுக்கு செய்ய வேண்டும் அக்கறையே இல்லை திராவிடத்திற்கு முற்றுபுள்ளி
Rate this:
Share this comment
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
14-செப்-201718:32:09 IST Report Abuse
anbu முதல்வர் மீது இரகசிய நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவு இடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
14-செப்-201717:44:08 IST Report Abuse
Narayanan Muthu தீர்ப்பு படும் பாடு தெளிவாக உணர்த்துகிறது. மோடியின் மூக்கு எங்கெல்லாம் நீள்கிறது என்று எல்லாமே நன்மைக்குத்தான் இந்த அதிகார ஆட்டத்தின் உச்சத்தை தமிழக மக்கள் வெறுத்து தேர்தல் வரும்போது ஒரு தெளிவான முடிவை கொடுப்பார்கள். மோடியுடன் சேர்ந்து திமுகவும் காலி
Rate this:
Share this comment
Cancel
NsMurthy - Chennai,இந்தியா
14-செப்-201717:43:22 IST Report Abuse
NsMurthy ஆட்சி நடந்தா என்ன நடக்காட்டி என்ன.டாஸ்மாக் கடை திறந்தாா சரி.ஃப்ரீ ரேஷன் லா சாப்பிட்டுவிட்டு சினிமா கோமாளிகள் ஆரம்பிக்கிற கட்சியில சேர்ந்து கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் போது எலக்ட்ரிக் ஷாக் அடித்து செத்து மோக்ஷம் அடைவதுடன் அவனது குடிசைக்கு அரசியல் மற்றும் சினிமா ஸ்டார்களின் வருகையால் நடக்கும் நாடக நிதியுதவியுடன் வாழ்வின் பயனைப்பெருவதுதான் வீரதமிழனின் பெருமை
Rate this:
Share this comment
Cancel
Anand T S V - Frankfart,ஜெர்மனி
14-செப்-201717:40:45 IST Report Abuse
Anand T S V மக்கள் ஆதரவு தினகரானுக்கே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை