தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்:ஸ்டாலின் எதிர்ப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்:ஸ்டாலின் எதிர்ப்பு

Added : செப் 14, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நவோதயா பள்ளிகள்,Navodaya schools, ஸ்டாலின், Stalin, மத்திய அரசு, Central Government, ஐகோர்ட், High Court, தமிழகம், Tamil Nadu, சென்னை, Chennai,நவோதயா வித்யாலயா பள்ளிகள், Navodaya Vidyalaya Schools, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், DMK Act Leader Stalin,

சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நவோதயா வித்யாலயா பள்ளிகள் திறக்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். மாநில பள்ளிகளில் என்ன கல்வி கற்று கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பையும் மத்திய அரசு பறிக்க துடிக்கிறது. மாநில உரிமையை பறித்து கொள்ள துடிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு துரோகம் இழைக்கும் செயல். நவோதயா வித்யாலாயா சமீதி அமைப்பின் மூலம் நடத்தப்படும் பள்ளகளில் இந்தி மொழிதான் ஆதிக்கம் செலுத்துகிறது. 10ம்வகுப்பு வரை தமிழில் கற்பிக்கப்படும் எனக்கூறினாலும் அது கட்டாயம் எனக்கூறப்படவில்லை. நவோதயா பள்ளிகளை திறக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக ஏன் மேல்முறையீடு செய்யவில்லை. மேல்முறையீடு செய்யாததை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். எந்த மாநிலத்தில் நவோதயா பள்ளி இருக்கிறதோ அங்கே அலுவல் மொழி இந்தி தான். இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள நவோதயா பள்ளிகளில் இந்திக்கு மட்டுமே முக்கியத்துவம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தமிழக நவோதயா பள்ளிகளுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
15-செப்-201700:47:35 IST Report Abuse
Aarkay நமக்கு ஒரு நல்லது யார் மூலமாகவும், தப்பித்தவறியும் நடந்துவிடக் கூடாதென்பதில் தளபதிக்குள்ள அக்கறையே தனி நான் ஒன்று கேட்கிறேன் இவர் பேரன், பேத்திகள் தமிழ் வழிக்கல்வியா பயில்கின்றனர்? கனிமொழி அக்கா எத்திராஜில் என்ன தமிழ் வழியிலா பயின்றார்? இவருக்கு ஒரு நியாயம் ஊருக்கு வேறொரு நியாயமா? நம் அரசு பள்ளிகளை விட Central Schools தரத்தில் பன்மடங்கு மேல் RTE வந்த பின்னர் அரசு ஊழியர் மட்டுமல்லாது, மற்றவர்களும் அப்பள்ளிகளின் கல்வித்தரத்தை அனுபவிக்கின்றனர். மத்திய அரசு, அவர்கள் செலவில் தரமான கல்வி வழங்க முன்வரும்போது, அதுவும் தமிழ் மொழியும் ஓர் பாடமாக இருக்கும் பட்சத்தில், இவர்களுக்கேன் குடைகிறது? இவர் கட்சியினர் நடத்தும் (சென்னை பப்ளிக் ஸ்கூல்) பள்ளி முன் நின்று போராட இவர் தயாரா? எங்களையெல்லாம் என்ன கேனையன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாரா தளபதி? இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே????
Rate this:
Share this comment
Cancel
venkat - chennai,இந்தியா
14-செப்-201715:03:05 IST Report Abuse
venkat ஒரு தலைமுறையையே ஹிந்தி எதிர்ப்பு என்று கெடுத்துவிட்டார் உங்கள் அப்பா. இதற்க்கு மேலும் தமிழ்நாட்டு மக்களை முட்டாள் ஆக்க முடியாது. ஜனங்களே உஷார் இந்த திராவிட கட்சிகளின் பேச்சை கேட்டு தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-செப்-201713:15:23 IST Report Abuse
Cheran Perumal உங்க கூட்டாளி காங்கிரஸ் இதை ஆதரிக்கிறதே.
Rate this:
Share this comment
Cancel
S.Durai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-செப்-201712:53:34 IST Report Abuse
S.Durai தமிழ் மாணவர்களுக்கு நல்லது நடக்க கூடாது. என தெளிவா இருக்கார் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை