போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது:தமிழக அரசு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது:தமிழக அரசு

Added : செப் 14, 2017 | கருத்துகள் (117)
Advertisement
அரசு பள்ளி ஆசிரியர்கள்,Government School Teachers,  சென்னை ஐகோர்ட், Chennai High Court, நீதிபதி கிருபாகரன், Judge Krupakaran,  தமிழக அரசு, TN Government, மாணவர்கள், Students,நீதிமன்றம், Court,

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது. துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறியுள்ளது.


கேள்விகள்:

ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டத்தால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, இழப்பீடு வழங்க வேண்டியது வரும் என்றும், அதற்கு நிவாரணம் கேட்டு, நீதிமன்றத்திற்கு வர முடியாது என்றும் கண்டித்துள்ளது. மேலும், போராட்டம் தொடர்பாக, 12 கேள்விகள் எழுப்பி, அதற்கு விளக்கம் தரவும், அரசுக்கு உத்தரவிட்டது.


அதிக சம்பளம்:

இதற்கு பள்ளி கல்வி இயக்குநரகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது. 33,487 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்த நாட்கள் அங்கீகரிக்கப்படாத விடுமுறை நாட்களாக கருதப்படும். 43,508 ஆசிரியர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.75 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. தனியார் பள்ளி ஆசிரியர்களை விட அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டது.


ஒத்திவைப்பு:

இதன் பின்னர் நீதிபதி கிருபாகரன் கூறியதாவது: உங்களது குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவீர்களா? அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு கோர்ட் எதிரானது அல்ல. போராட்டம் சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் போராட்டத்தை தான் கவனத்தில் கொள்கிறேன். அரசு ஊழியர்கள் பற்றி நான் கேட்கவில்லை. ஆரம்பத்தில் அரசியல் ரீதியாக இருந்த போராட்டம், சமூக, மதம் மற்றும் மொழிவாரியாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளை(செப்.,15)க்கு ஒத்திவைத்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
15-செப்-201709:38:47 IST Report Abuse
g.s,rajan Politicians are also Government Servants elected by the people they are getting salary,pension,other benefits from the Tax payers money as like the Government servants , Teachers.we definitely have to compare .
Rate this:
Share this comment
Cancel
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
15-செப்-201706:30:57 IST Report Abuse
madhavaraman போராட்டத்தில் வேலை செய்யாத ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது சரி.அரசு நடத்தை விதிகளினபடி தலைமை இடத்திலும் இல்லாமல் தலைமை செயலகத்திலும் இல்லாமல் மாநிலம் விட்டு மாநிலம் செல்கிற ஆளும் கட்சி எம் எல் ஏக்களுக்கும் சம்பளம் நிறுத்தப்படுமா?
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
15-செப்-201702:57:54 IST Report Abuse
Dr.C.S.Rangarajan ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை ஜனவரி 2016 முதல் அறிமுகப்படுத்தியதால் மத்திய அரசில் பணிபுரிபவர்கள் பயன் அடைத்தார்கள். தமிழ்நாட்டை பொருத்தமட்டில் ஏழாவது ஊதிய கமிஷனின் பரிந்துரைகள் இன்று வரை செயல்படுத்தாது இருப்பதன் காரணமென்ன? ஒரு சமூகவியல் வல்லுநர் தொழிலாளர்கள் தங்களின் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கையாளும் போராட்ட யுக்திகள் அளவற்றவையாகும் அவர்களின் அறிவாற்றலின் வல்லமையால். பிரச்சினைகள் நியாயம் என்றால், தீர்த்துவைக்கும் நேரம், காலத்தை குறிப்பிட அரசு தயக்கம் காட்டுவதேன்? வன்முறை அற்ற அறப்போராட்டங்கள் ஜனநாயகத்திற்கு எப்புடையதான ஒன்று இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
suriyanila - Vaniyambadi,இந்தியா
15-செப்-201701:37:19 IST Report Abuse
suriyanila இங்கு கருத்து எழுதுபவர்கள் அரசு பள்ளிகளின் நிலை என்ன என்று அறியாமல், ஒரு சிலர் செய்யும் தவறுகளை கருத்தில் கொண்டு ஒட்டு மொத்த ஆசிரிய சமுதாயத்தையே குறை கூறுவது தவறு. (1) அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தரமும், குடும்ப சூழ்நிலையும் - தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தரமும், குடும்ப சூழ்நிலையும் வேறு. (2) அரசு பள்ளிகளில் 6 – ம் வகுப்பில் எழுத்துக்களும் எண்களும் தெரியாத மாணவர்களை சேர்த்துக் கொள்வார்கள். – தனியார் பள்ளிகளில் இத்தகைய மாணவர்களை சேர்த்துக் கொள்வார்களா? (3) பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஆசிரியர்களுக்கு கூடுதலான பணிச்சுமை. அதனையும் மகிழ்வுடன் ஏற்று பணி செய்யும் ஆசிரியத் தெய்வங்கள் (4) அரசு பள்ளிகளில் 10 – ம் வகுப்பு பாடங்களை எட்டாம், ஒன்பதாம் வகுப்பில் நடத்துவதில்லை. (5) சம்பளத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ஒன்றுமே அறியாமல் எங்கோ அமர்ந்துகொண்டு காழ்ப்புணர்ச்சியுடன் கருத்து எழுதாதீர்கள். (6) ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என அரசாணை பிறப்பித்ததினால் வந்த விளைவு தான் கல்வித் தரம் குறைந்ததற்கான காரணம். (7) எல்லாத் தடைகளையும் மீறி அரசு பள்ளிகளில் 10 – ம் வகுப்பில் 485 மதிப்பெண்களுக்கு மேல் மாணவர்களை கல்வி கட்டணம் இலவசம் என்று தன் பக்கம் இழுக்கும் தனியார் பள்ளிகள். இதில் தனியார் பள்ளிகள் தரமான கல்வித் தருகின்றன என மொக்க சான்றிதழ் வேறு. (8) தனியார் பள்ளிகள் NEET – தேர்வில் என்ன கிழித்தன. (9) என் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் படிக்கின்றனர். அங்கு மிகவும் சிறப்பாக சொல்லித்தருகின்றனர். 9 ஆசிரியர்கள் இருக்கவேண்டிய பாலூர் அரசு உயர் பள்ளியில் (பேர்ணாம்பட்டு) 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்(தமிழ் மீடியத்துக்கு மட்டும்). (அ) இதில் தமிழ் மீடியம் 6 முதல் 10 – ம் வகுப்பு வரை 5 வகுப்புகள், (ஆ) ஆங்கில மீடியம் 6 முதல் 9 – ம் வகுப்பு வரை 4 வகுப்புகள் மொத்தம் 9 வகுப்புகள் இருக்கும். 9 வகுப்புக்கு 5 ஆசிரியர்கள் போதுமா? (10) ஒரே வகுப்பில் கூட்டல் கழித்தல் கற்காமல் வரும் மாணவர்களை வைத்துக்கொண்டு தமிழ் மீடியத்துக்கும் ஆங்கில மீடியத்துக்கும் ஒரே ஆசிரியராக பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் திறமைசாலிகள்தான். இதற்கு சான்றாக நிறைய பள்ளிகளை காட்டுவேன்.
Rate this:
Share this comment
Cancel
STP - Villupuram,இந்தியா
15-செப்-201700:25:30 IST Report Abuse
STP உன்னைப்போல படித்து விட்டு தனியார் 10000,15000 வாங்கிட்டு உங்கள் பிள்ளைக்கு நல்ல கல்வியறிவு வழங்குகிறோம் நீங்கள் உங்கள் மனதைத்தொட்டு சொல்லுங்க வாங்கும் சம்பளத்திற்க்கு உண்மை யாக உழைக்கிறேன் என்று
Rate this:
Share this comment
Cancel
STP - Villupuram,இந்தியா
15-செப்-201700:15:42 IST Report Abuse
STP எம்எல்ஏ சம்பளம் அதிகம் தான் நான் ஒத்து கொள்கிறேன் அவர்கள் 234பேர் அவர்களின் பணிக்காலம் ஐந்தாண்டு காலம் ஆனால் இவர்கள் எத்தனை பேர் இவர்களின் பணிக்காலம் எத்தனை ஆண்டுகள் இன்று தனியார் பள்ளி கள்ள புற்றீசல்போல இருப்பதற்க்கு இவர்கள் தான் முதல் காரணம் இவர்களின் பிள்ளைகள் படிக்க மட்டும் தனியார் பள்ளி வேலை மட்டும் அரசு வேலை வேண்டும் இவர்கள் பணிக்கு வரவில்லை என்றால் இவர்களின் சங்க அங்கிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் இவர்களை வேலையை விட்டு நிறுத்தி விட்டு புதிய வர்களுக்கு பணி வழங்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-செப்-201721:52:09 IST Report Abuse
Pugazh V MLA க்களின் சம்பளத்தை மட்டும் உயர்த்திக்கொள்வார்கள். அறிவாளி வாசகர்கள் அதைப்பார்த்து 2 நாள் கூப்பாடு போட்டுட்டு ஓய்ந்துவிடுவார்கள். இப்போ ஆசிரியர்கள் சம்பள உயர்வு கேட்டால்,அதே அறிவாளிகள் , குடுக்காதே, வேஸ்ட், கைது செய் என்று கூப்பாடு போடுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
14-செப்-201721:25:51 IST Report Abuse
srisubram இந்த அரசு ஆசிரியர்களுக்கு , இதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது , அவர்களை வேலையை விட்டு தூக்கினாலும் , ரியல் எஸ்டேட் , டிபார்ட்மென்டல் ஸ்டார் , ஆட்டோ , கந்துவட்டி , டுஷன் சென்டர் , என பல பல வகையில் பணம் வந்துகொண்டு இருக்கிறது , இவர்களால் தான், பல நகைக்கடைகள் , பல இடங்களில் கிளைகள் திறந்துள்ள .இவர்களை வேலையிலிருந்து நீக்கி , எதாவது ஒரு கல்குவாரியில் , அல்லது சாலை போடும் இடங்களில் பணியினை தந்து அவர்களுக்குரிய சம்பளம் மட்டுமே தரவேண்டும் . இவர்களுக்கு சம்பளம் 75000 ரூபாய் என்பது மிக குறைவு என்றால், படித்து விட்டு , பெட்ரோல் பங்க் , டிபார்ட்மென்டல் ஸ்டோர் , கல்குவாரி இங்கெல்லாம் முதுகலை பட்டம் வரை படித்து மாத சம்பளம் 10000 வரை மட்டுமே பெறுபவர்கள் என்ன செய்யவேண்டும் ? எம் எல் ஏ சம்பளம் அதிகம் அதை ஏன் கேட்பதில்லை என்று கேட்கும் நபர்களே , எம் எல் ஏ கல் , எங்கள் வாழ்வில் குறுக்கிடவில்லை , இவர்கள் குறுக்கீடு அளவிடமுடியாது , இவர்களுக்கு கணக்கும் சொல்லித்தர்ரதெறியாது, அறிவியலும் தெரியாது , எம் எல் ஏ வாவது தம்பி நான் நல்ல படிக்கலை, தொகுதிக்கு வருவதில்லை ஆனால் சட்டமன்றத்திற்கு போகிறேன் என்கிறார் , ஆனால் இந்த வாதி மாறுங்க பள்ளிக்கூடம் வரதே இல்லையே .. மேலும் இந்த வாத்திமாருங்க எம் எல் ஏ ஆகவேண்டியது தானே ,
Rate this:
Share this comment
Cancel
podhujanam - seychelles,இத்தாலி
14-செப்-201721:09:36 IST Report Abuse
podhujanam nalathu mudhala koovathur la irukumbodhu vanguna sambalatha thiruppi kudungs apram pesunga unga vekkanathha
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
14-செப்-201720:54:08 IST Report Abuse
bal இவர்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டு, எங்கு நல்ல வசதி கிடைக்கிறதோ அங்கு சேர வேண்டியதுதானே. அப்படி செய்ய முடியாது இவர்களால். ஏனென்றால் இவர்கள் எல்லாம் பெஞ்ச் தேய்பவர்கள், திறமைசாலிகள் அல்ல. ஏதாவது அரசாங்க பள்ளியோ அலுவலகமோ திறமையாக இருந்ததுண்டா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை