சொந்த மண்ணில் ஆதரவில்லை:தினகரன் தரப்பு சோர்வு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சொந்த மண்ணில் ஆதரவில்லை:தினகரன் தரப்பு சோர்வு

Added : செப் 14, 2017 | கருத்துகள் (50)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தினகரன்,Dinakaran,  மன்னார்குடி,Mannargudi, சசிகலா, Sasikala, தஞ்சாவூர்,  Thanjavur, அ.தி.மு.க பொதுக்குழு, AIADMK General Council,முதல்வர் பழனிசாமி, Chief Minister Palaniswamy, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ,Deputy Chief Minister Panneerselvam, எம்.பி வைத்திலிங்கம்,MP vaithilingam, அ.தி.மு.க, AIADMK,

தஞ்சாவூர்: அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களின் சொந்த மண்ணில் ஆட்கள் இல்லாதது, தினகரன் தரப்பினரை சோர்ந்து போக செய்துள்ளது.

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, தினகரன் பதவிகளை பறித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் எம்.பி., வைத்திலிங்கம் ஆகியோரின் உருவ படங்களை எரித்து, தஞ்சையில், தினகரன் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட, 126 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சசிகலா தரப்பினரின் சொந்த ஊர் மன்னார்குடி என்றாலும், அவர்கள் தஞ்சாவூரை, தங்களின் அரசியல் களமாக பயன்படுத்தி வந்தனர். மாவட்ட, அ.தி.மு.க.,வில் பொறுப்பில் உள்ள, 90 சதவீதம் பேர், சசிகலா சிபாரிசு அடிப்படையில் பதவி பெற்றவர்கள். இப்படிப்பட்ட சூழலில், தங்களை கட்சியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சை மாவட்டத்தில் பெரும் போராட்டம் வெடிக்கும் என, தினகரன் தரப்பில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மாவட்டம் முழுவதுமே வெறும், 126 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டதால், தினகரன் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது.அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களின் சொந்த மண்ணில் ஆட்கள் இல்லாதது, தினகரன் தரப்பினரை சோர்ந்து போக செய்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
14-செப்-201720:37:44 IST Report Abuse
madhavan rajan தொண்ணூறு சதவிகிதம் பேர் சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்கள் என்றால் சசிகலா பேரைச் சொல்லி வோட்டுக் கேட்டால் போடுவார்களா? இவர்களே ஜெ யின் பேரைச் சொல்லித்தான் காலம் ஓட்ட முடியும். நாங்கள்தான் ஜெ வையே அரசியலில் வாழவைத்தோம் என்று சொன்னால் தமிழ் நாட்டில் யார் இவர்களை ஆதரிப்பார்கள். இவர்கள் சொல்வது பூனைதான் புலிக்கு வேட்டையாடச் சொல்லிக்கொடுத்தது என்பதுபோல உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
14-செப்-201720:34:34 IST Report Abuse
madhavan rajan சொந்த மண் என்று எதைச் சொல்கிறார்? அந்த சொந்த மண்ணில் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை ஏன் கொண்டு போய் வைக்கவில்லை? சொந்த மண்ணை அவரே நம்பவில்லையே? பின் எப்படி அந்த மண் காரர்கள் இவரையும் இவர்கள் குடும்பத்தையும் நம்புவார்கள்?
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
14-செப்-201720:19:31 IST Report Abuse
dandy இந்த மோசடி ..கொலைகார குடும்பத்தின் முடிவு பரிதாபமாக இருக்க போகின்றது ...மக்களின் சாபம் சும்மா விடாது ..
Rate this:
Share this comment
Cancel
Bharatha Nesan - Chennai,இந்தியா
14-செப்-201719:44:58 IST Report Abuse
Bharatha Nesan எவ்வளவோ பணம் செலவு, செய்து தேர்தல் நடத்தி, மக்களுக்கு லஞ்சம் கொடுத்து நம்பிக்கையின் பேரில் ஒட்டு வாங்கி ஜெயித்தபின்னர் MLA ஆனவர்களை மிரட்டி பணயக்கைதியாக வைத்திருப்பது, மக்களுக்கு சேவை செய்யவிடாமல் அவர்களை தடுப்பதை எப்படி சொல்வது? கொலைகள் செய்வதை விடவும் கொடுரமானது. ஆட்களை கடத்துபவர்கள் மீது அதிகபட்ச தண்டணைக்கொடுக்க வேண்டும். அதற்கு MLA க்கள் காணவில்லை என்று, அந்த அந்த தொகுதிகளில் இருந்தும் பொது மக்கள் போலீஸ்-இல் உடனடியாக புகார் கொடுக்கவேண்டும், அல்லது நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனுவை உடனடியாக வழக்காக தொடரவேண்டும். அதற்கு உண்மையான காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என நினைக்கிறேன். செய்வீர்களா? ப்ளீஸ் .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201719:06:56 IST Report Abuse
Srinivasan Kannaiya கட்டபொம்மன் வசனம் தான் ஞாபகம் வருகிறது...கொடி கட்டினாயா... போஸ்டர் ஒட்டினாயா. தெரு மூலை கூட்டம் போட்டாயா...போராட்டம் நடத்தினாயா... சிறை சென்றாயா... உண்ணாவிரதம் இருந்தாயா...லஞ்ச பேயே .....யார் கொடுப்பார் ஆதரவு...?
Rate this:
Share this comment
Cancel
Musthafa - Cuddalore,இந்தியா
14-செப்-201718:37:14 IST Report Abuse
Musthafa இவர் குடும்பமென்ன சுதந்திர போராட்ட தியாகிகளா? சுரண்டல் வாதிதிங்க
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
14-செப்-201718:07:51 IST Report Abuse
vns இந்தியா அரசியல் அமைப்புக்கு எதிரான ஒரு உறவுமுறையில் உருவான பந்தங்கள் தங்களை அரசாளப்பிறந்தவர்கள் என்று எண்ணுவது பேதைமை. நித்யானந்தாவை விளம்பர படுத்தியவர்க்குக்கு அவருக்கு மேலே போகும் தைரியம் இருக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-செப்-201717:55:17 IST Report Abuse
மலரின் மகள் ரிசார்ட்டில் தங்குவதற்கே மூன்று கோடி மூன்று கிலோ என்று இருக்கும் பொது, போராட்டத்திற்கு கைதாவதற்கு என்று எவ்வளவு எதிர்பார்ப்பார்கள். குறைந்தது மூணு லட்சம் முஉண்ணூறு கிராம் என்று சொன்னாலாவது எதாவது பிரயோசனம் இருக்கும். மூன்று மணி நேர கூட்டத்திற்கு ஐந்நூறு ருபாய் பிரியாணி, போக்குவரத்து டாஸ்மாக் செலவு என்றால் தான் வருவார்களாம். சரியாக மூன்று மணிநேரம் கழிந்ததும் கிளம்பிவிடுகிறார்களாம். அப்படி இருக்க கைது என்றால் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ருபாய் முன்பணம் ஒரு லட்சம் என்று தந்தாள் தான் கதை நடக்குமாம். விசுவாசம் என்றெல்லாம் எதுவும் கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
14-செப்-201715:48:37 IST Report Abuse
vnatarajan தினகரனுக்கு இனிமேல்தான் அடிமேல் அடி விழும்.
Rate this:
Share this comment
Cancel
Sundaram - Thanjavur,இந்தியா
14-செப்-201715:09:58 IST Report Abuse
Sundaram ஊழல் நிறைந்த அணிக்கு எங்கு சென்றாலும் ஆதரவு கிடைக்காது ...தினகரன் போன்று பணத்தை காட்டி ஆள் பிடிக்கும் கூட்டம் விரைவில் அழியும்
Rate this:
Share this comment
14-செப்-201717:09:17 IST Report Abuse
மோகன்ஆமாம். உத்தமர்கள் இரண்டு பேர் கை கோர்த்த காரணத்தால் ஊழல் பேர்வழிகள் தினகரனும் சின்னம்மாவும் அரசியலிலிருந்து காணாமல் போய் விடுவார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை