நெருக்கடி அதிகரிப்பு: அணி மாற வாய்ப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நெருக்கடி அதிகரிப்பு: அணி மாற வாய்ப்பு

அ.தி.மு.க., பொதுக்குழு வெற்றிகரமாக முடிந்து, கட்சி முழுமையாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வசம் வந்துள்ளது. இது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

 அ.தி.மு.க பொதுக்குழு, AIADMKGeneralCouncil,முதல்வர் பழனிசாமி ,Chief Minister Palanisamy, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ,Deputy Chief Minister Panneerselvam, தினகரன் , Dinakaran, கூர்க் சொகுசு விடுதி,Coorg Luxury Hotel, சசிகலா, Sasikala,எம்.எல்.ஏ,MLA, ஸ்லீப்பர் செல்,Sleeper Cell,  பழனிசாமி ,Palanisamy,பன்னீர்செல்வம் ,Panneerselvam, புதுச்சேரி,Puducherry,

தினகரன் அணியில், 21 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். புதுச்சேரியில் தங்கியிருந்த அவர்கள், தற்போது, கர்நாடக மாநிலம், மைசூரு அடுத்த கூர்க், சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர், 'கட்சியில் தினகரன் கை ஓங்கும்; முக்கிய பதவிகளைப் பெறலாம்' என, நம்பினர்.

'மேலும், பலஎம்.எல்.ஏ.,க்கள், 'ஸ்லீப்பர் செல்' எனப்படும், ரகசிய பிரிவாக உள்ளனர். அவர்கள், முதல்வருக்கு எதிராக போர்க்கொடி துாக்குவர்' என, தினகரன் கூறி வந்தார்.
அது, சுத்தப் பொய் என்பது, பொதுக்குழுவில் உறுதியாகி உள்ளது. பொது செயலர் பதவியில் இருந்து, சசிகலா துாக்கி எறியப்பட்டதால், தினகரன் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.

அடுத்தகட்டமாக, தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்குகள் எதுவும் உள்ளதா என, ஆய்வு செய்யப்படுகிறது. வழக்கு இருந்தால், உடனடி நடவடிக்கை எடுக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, அவர்களை வழிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.

Advertisement


இனி தினகரனுடன் தொடர்ந்து இருந்தால், எதிர்காலம் வீணாகி விடுமோ என்ற அச்சம், அவருடன் உள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில், அவர்கள் அணி மாறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (42)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
14-செப்-201715:52:11 IST Report Abuse

Tamilachiநான் நினைத்தேன் ஜெயாவை யாரும் மிரட்டவோ பணியவைக்கவோ முடியாது...நிச்சயம் சசிகலாவை அவர் ஒரு வேலைக்காரி இடத்தில் தான் வைத்திருக்கிறார் என்று. இப்போது மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்ற வெட்கம் சிறிதும் இன்றி ஆட்சிக்காக துடிப்பதை பார்த்தால், ஜெயா இருக்கும்போதே இவர்கள் நிச்சயம் ஆட்சியை கைப்பற்ற முயற்சித்திருப்பார்கள். அப்படி இருந்தும் ஜெயா சசியை தன்னுடன் இருக்க அனுமதித்திருக்க மாட்டார். வளர்மதி சொல்வதுபோல் அவரை இந்த கொள்ளை கும்பல் என்ன சொல்லி மிரட்டி வைத்திருந்தது தெரியவில்லை. இல்லையெனில் சசி திமுகவுடன் சேர்ந்து மிடாஸ் வருமானம் பார்ப்பது ஜெயாவுக்கு தெரிந்து விட்டு வைத்திருக்க மாட்டார்...

Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
14-செப்-201715:31:23 IST Report Abuse

Vijay D Ratnam21 பேரும் அணி மாறவேண்டிய அவசியமில்லை. ஒரு ஏழு எட்டு பேர் மாறினால் போதும். ஆட்டம் க்ளோஸ். மன்னார்குடி மாஃபியா ஆட்டம் ஒன்றிரண்டு வாரங்களில் முடிந்துவிடும்.

Rate this:
Sundaram - Thanjavur,இந்தியா
14-செப்-201715:13:58 IST Report Abuse

Sundaramமுதலில் அரசியல் பரபரப்புக்கு முடிவை கூறுங்கள்...ஊழல் குடும்பத்தை நீக்கிய ஆட்சியை மட்டுமே அமைக்க வேண்டும்

Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X