'ஜன் தன்' திட்டத்தில் 30 கோடி வங்கி கணக்குகள் Dinamalar
பதிவு செய்த நாள் :
'ஜன் தன்' திட்டத்தில் 30 கோடி வங்கி கணக்குகள்

புதுடில்லி:நாடு முழுவதும், 'ஜன் தன்' திட்டத்தில், 30 கோடி குடும்பங்களுக்கு, வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

டில்லியில் நேற்று நடந்த, நிதி திட்டம் தொடர்பான கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி பேசியதாவது:நாடு முழுவதும், ஜன்தன் திட்டம், மூன்று ஆண்டுக்கு முன் துவங்க பட்டது. இந்த திட்டத்தில், 30 கோடி

குடும்பத்தினருக்கு, வங்கி கணக்குகள் துவங்க பட்டுள்ளன.இந்த திட்டம் துவங்குவதற்கு முன், நாடு முழுவதும், 42 சதவீத குடும்பத்தினருக்கு, வங்கி கணக்குகள் இல்லை.அனைத்து வர்த்தக வங்கிகளிலும், எல்லாருக்கும், பூஜ்ய நிதி இருப்பு வசதியுடன் கணக்கு துவங்கப்பட வேண்டும் என்பதே,அரசின் நோக்கம்.

ஜன் தன் திட்டத்தில், பூஜ்ய இருப்புடன் உள்ள வங்கி கணக்குகள், 77 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குகள், நேரடி பணப்பட்டுவாடா திட்டம் விரிவுபடுத்தப்பட்ட பின்,

Advertisement

 'ஜன் தன்' ,திட்டத்தில் ,30 கோடி, வங்கி ,கணக்குகள்

முழுமையாகசெயல்பாட்டுக்கு வரும்.ஜன் தன் திட்டம் துவங்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும், 99.99 சதவீத வீடுகளில், குறைந்த பட்சம், ஒரு வங்கி கணக்காவது செயல்பாட்டில் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan Thamotharan - Panagudi, Tirunelveli,இந்தியா
14-செப்-201712:47:34 IST Report Abuse

Nagarajan Thamotharanதமிழக பாரதிய ஜனதா பார்ட்டி NEET , NAVYOTHAYA சர்ச்சையை விட்டு விட்டு கிராமங்கள் தோறும் நிலவும் பராமரிப்பற்ற குடிநீர் மற்றும் தரமற்ற சாலைவசதி மற்றும் கட்டிடங்கள் , நில ஆக்கிரமிப்பு போன்றவற்றிற்கு போராட முன்வரவேண்டும் . திருட்டு திருவிட கழகங்கள் உண்மைக்கு மாறான செய்திகளை ஊடகங்கள் மூலமாக பட்டி தொட்டியெல்லாம் பரப்பிவருவதை வீதி இறங்கி போராடினாலொழிய தமிழகத்தை கைப்பற்ற வேறு வழிகள் இல்லை . வார்டு வாரியாக போராட்டங்களை ஆரம்பித்தால் வரும் உள்ளாட்சி தேர்தலில் கணிசமாக பதவியை கைப்பற்றலாம் .

Rate this:
narayanan - kannur,இந்தியா
14-செப்-201710:46:17 IST Report Abuse

narayananஅதான் பரிமாற்றத்தை அளவை குறை த்து அதிக பறிமாற்றத்திற்கும் கமிஷன் பிடித்தம் செய்கிறது

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201709:33:26 IST Report Abuse

Srinivasan Kannaiyaவங்கி கணக்கு உள்ளது... ஆனால் விக்கிற விலைவாசியில் வங்கியில் பணத்தைதான் சேமிக்க முடிவதில்லை. ஒன்று கேள்வி பட்டீர்களா... குறைந்த அளவு பணம் வைக்காததால் ஒரு தேசிய வங்கி ஏழை பாழைகளின் பணம் ஐநூற்று முப்பது கோடியை ஏப்பம் விட்டு இருக்கிறது..

Rate this:
B.s. Pillai - MUMBAI,இந்தியா
14-செப்-201705:25:45 IST Report Abuse

B.s. PillaiThe FM is living in dream.Actually, the revised minimum balance for a/c holders is affecting these Jan Dhan a/c holders. In no time, their balance is brought into negative balance by the banks. There are many hard rules for ing this Jan Dhan a/c. This scheme should be an ended one, means should continue for ever for the poor to the a/c.The rules are stringent, Such poor people do not have sufficient documents to prove their address. It should be made easiest so each and every poor person is given the chance to be a bank a/c holder. This will enable these poor to get their wages in the a/c directly, thereby eliminating the in between agents, The govt can watch that these poor is getting their minimum wages .There millions of maid servants who are misused by their employers and also do not pay them the minimum wages prescribed by the govt. If this Govt is really working for the uplifting of the below poverty level people, Jan than scheme should be an ended and its rules to the a/c should be flexible, the intention being to help in all possible ways to the a/c and NOT in all possible ways to reject it.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-செப்-201704:43:03 IST Report Abuse

Kasimani Baskaranசாமானியனுக்கு கூட மேம்படவேண்டும் என்று உழைக்கும் இந்த அரசு பாராட்டுக்குரியது... சுபிட்சத்தை சுப்பனும் குப்பனும் அனுபவிக்க வேண்டும்...

Rate this:
14-செப்-201703:50:48 IST Report Abuse

DrPKuppuswamyபாரதப் பிரதமர் மக்கள் நிதி திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு இல்லாத மக்கள் அனைவருக்கும் , எளிய முறையில் , துவக்க வைப்புத் தொகை இல்லாமல் , பற்றுக் கடன் அட்டை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீட்டுடனான அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டது அனைவராலும் வரவேற்கப்பட்ட திட்டம். இது ஒரு கின்னஸ் சாதனையையே உருவாக்கியது . பணத்தை சம்பாதிக்கும் ஏழை எளியவர்கள் அதை பாதுகாப்பாக சேமிக்க தெரியாமல் , தங்களது உழைப்பின் பலனை தொலைத்து வந்தது தவிர்க்கப் பட்டது . சேமிப்பே வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அடிப்படை என்பதை மக்கள் உணர்ந்திருந்தாலும் , அதை செயலாக்க அவர்களுக்கு தேவையான நிதியியல் கல்வியையும் தக்க அமைப்புகளின் மூலமாக ரிசர்வ் வங்கி , மாவட்ட முன்னோடி வங்கிகள் மூலமாக வழங்கியது. வங்கியில் சேமிக்கும் அளவிற்கு , எனக்கு வருமானம் இல்லை என தவறான மனப்பான்மையில் இருந்த நலிவடைந்த பிரிவினர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் அனைவரும் இன்று சேமிக்கும் பழக்கத்திற்கு வந்துள்ளனர் . Savings is a habit and the PMJDY Scheme has inculcated the habit in the minds of poor, vulnerable and weaker sections of the society இதன் முழு வெற்றி இதை செயல்படுத்தும் வங்கிகள் மட்டுமல்லாது , மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பிலும் அடங்கியுள்ளது .இதன் மூலமே நாம் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி (Financial inclusion) எனும் குறிக்கோளை எட்ட முடியும்

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement