ஜப்பான் பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு; 'மோடி ஜாக்கெட்' அணிந்து அபே அசத்தல் Dinamalar
பதிவு செய்த நாள் :
ஜப்பான் பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு '
மோடி ஜாக்கெட்' அணிந்து அபே அசத்தல்

காந்தி நகர்:இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர், ஷின்சு அபேவுக்கு, வரவேற்பு பேரணி நடத்தியும், விமான நிலையத்துக்கு நேரில்சென்று கட்டியணைத்தும், மிகச் சிறந்த வரவேற்பை, பிரதமர் நரேந்திர மோடி அளித்தார்.

பதில் மரியாதையாக, அபே, 'மோடி ஜாக்கெட்' அணிந்தும், அவரது மனைவி, சல்வார் அணிந்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்தினர்.இந்தியா - ஜப்பான் இடையேயான உறவு, மிகவும் வலுவாக உள்ளது. மோடி பிரதமராக பதவியேற்ற பின், ஜப்பான் பிரதமர் ஷின்சு அபே, நான்காவது முறையாக, நம் நாட்டுக்கு வந்துள்ளார். இருவரும் இதுவரை, 10 முறை நேரில் சந்தித்து உள்ளனர்.

ஆமதாபாத் - மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டத் துவக்க விழாவுக்காக, இரண்டு நாள் பயணமாக, ஜப்பான் பிரதமர் ஷின்சு அபே, அவரது மனைவி அகே அபே, நேற்று மதியம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு வந்தனர்.

விமான நிலையத்துக்கு நேரில் சென்று, பிரதமர் மோடி அவர்களை வரவேற்றார். அபேவை, தன்

பாணியில் கட்டித் தழுவி, மோடி வரவேற்றார். பின், அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.விமான நிலையத்தில் இருந்து, சபர்மதி ஆசிரமத்துக்கு, சாலை வழியாக, திறந்த ஜீப்பில் இரு தலைவர்களும் சென்றனர்.

இந்த வரவேற்பு பேரணியின் போது, ஷின்சு அபே, குர்தா மற்றும் மோடி அணியும் ஜாக்கெட் அணிந்து இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த, 8 கி.மீ., நீள பேரணியின்போது, சாலையின் இருபுறத்திலும் இருந்த மக்களுக்கு கையசைத்து, அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றனர்.

இந்த பேரணி பாதையில், 28 இடங்களில், 28 மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை, அபே பார்த்து ரசித்தார். வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்கு, வரவேற்பு பேரணி நடத்தப்படுவது இதுவே முதல்முறை.இதன் பின், சபர்மதி ஆசிரமத்தில், மஹாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அபேயின் மனைவி, நம் நாட்டின் பாரம்பரிய உடையான சல்வார் அணிந்து பங்கேற்றார்.
கி.பி., 16ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, 'சிதி சைய்யித் நி ஜாலி' என்ற மசூதிக்கு தலைவர்கள்

Advertisement

 ஜப்பான், பிரதமருக்கு, பிரமாண்ட ,வரவேற்பு , 'மோடி ஜாக்கெட்' ,அணிந்து ,அபே அசத்தல்

சென்றனர். பாரம்பரியமிக்க இந்த மசூதியின் பெருமைகள் குறித்து, மோடி விளக்கினார். நீண்ட நேரம் அதை சுற்றிப் பார்த்த ஜப்பான் பிரதமருக்கு, அருகில் உள்ள பிரபல ஓட்டலின் மாடித் தோட்ட உணவகத்தில் இரவு விருந்து அளித்தார் மோடி. குஜராத் பாணி உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

புல்லட் ரயில்: இருதரப்பு பேச்சு


இரண்டு நாள் பயணமாக வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சு அபேவுக்கு, விமான நிலையத்தில் வரவேற்பு,வரவேற்பு பேரணி, இரவு விருந்துடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிந்தன. இரண்டாவது நாளான இன்று, மிக முக்கியமான, ஆமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டத்தின் துவக்க விழா நடக்க உள்ளது. இதைத் தவிர, இரு தரப்பு கூட்டம் நடக்க உள்ளது. ரஷ்யாவைத் தவிர, ஜப்பானுடன் மட்டுமே, இந்தியா ஆண்டுதோறும் இருதரப்பு உறவுக்கான கூட்டம் நடக்கிறது.

அதன்படி, இன்று, 12வது கூட்டம் நடக்க உள்ளது. இதில், திட்டங்களின் செயல்பாடுகள், அதை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள், அடுத்தக்கட்ட திட்டங்கள், இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க பட உள்ளன.
முன்னதாக,ஜப்பானின் நிதியுதவியுடன் அமைக்கப்பட உள்ள, ஆமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டத்தின் துவக்க விழா நடக்கிறது. மொத்தம், 508 கி.மீ., நீளமுள்ள இந்த புல்லட் ரயில் திட்டம், 1.10 லட்சம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. வரும், 2022ல் ரயில் சேவை துவக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-செப்-201718:35:44 IST Report Abuse

மலரின் மகள்பாராட்டுக்கள். ////ரஷ்யாவைத் தவிர, ஜப்பானுடன் மட்டுமே, இந்தியா ஆண்டுதோறும் இருதரப்பு உறவுக்கான கூட்டம் நடக்கிறது.

Rate this:
14-செப்-201713:25:48 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்மோடியின் சிறந்த தலைமையின் கீழ் நல்ல திட்டங்கள் வந்துகொண்டிருக்கிறது. வாழ்க மோடி , வளர்க பாரதம்.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
14-செப்-201710:09:58 IST Report Abuse

K.Sugavanamஜாக்கெட் மஹாத்மீயம் விண்ணை முட்டுகிறது..

Rate this:
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-செப்-201710:09:27 IST Report Abuse

Swaminathan Nathமகத்தான திட்டம், வெற்றி அடைய வாழ்த்துக்கள், நம் சென்னை யிலும் இந்த திட்டம் வர வேண்டும், சென்னை, கோவை, சென்னை ,பெங்களூரு திட்டம் வேண்டும்,

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201709:29:15 IST Report Abuse

Srinivasan Kannaiyaஒரு கரம் ஒலியை எழுப்பமுடியாது... இருகரம் சேர்ந்தால் சாதனைகள்தான்... ஜப்பானுடன் இணைந்து சாதனைகள் படைப்போம்..

Rate this:
14-செப்-201710:50:01 IST Report Abuse

எப்போதும் வென்றான் மக்களு(ம்)டன் சேந்தால் தான் சாதனை படைக்க முடியும் .........மக்களிடமிருந்து விலகி இருந்தால் முடியாது..........

Rate this:
Manian - Chennai,இந்தியா
15-செப்-201707:42:15 IST Report Abuse

Manianஓட்டை விற்கும், ஓசியே உலகம் என்ற மக்களுடன் சேர்நதால், புல்லட் வேகத்தில் எல்லா திட்டங்களும் ஓடிவிடும்...

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-செப்-201707:14:01 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்உலக மருத்துவ கவுன்சிலுக்கு கேடி கேத்தன் தேசாயை முன்பொழிந்தது சாட்சாத் ஜப்பான் தான்.. சரித்திரம் தெரியுமா? கி.பி. 2000 இல் 1300 கிலோ தங்கம், அது மட்டுமல்ல 850 கோடி ரூபாய் ரொக்கம் இவனிடமிருந்து அமலாக்கத்துறை அபகரித்தது. வழக்குகள் இத்தனை இருந்தும் மோடியின் ஆதரவில் குஜராத்தில் கோலோச்சினான்., இப்போ நீட் தேர்வில் முடிவுகளில் முக்கிய பங்கு இவனுக்கு. அதையும் தாண்டி உலக மருத்துவ கவுன்சிலின் தனைவனாம். உலக அளவில் ஊழலில் முதலிடம் எப்படியெல்லாம் தக்க வேண்டி உள்ளது பாருங்கள். ஜப்பான்காரனையும் இழுத்து.

Rate this:
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
14-செப்-201709:02:31 IST Report Abuse

Idithangi சும்மா உளற வேண்டாம். WMA பிரான்ஸ் இல் உள்ள தன்னார்வ அமைப்பு. சி பி ஐ வழக்கு நீர்த்து போனது மன்மோகன் ஆட்சியில். குலாம் நபி ஆசாத் இவர்மீது நடவடிக்கை எடுக்க சட்டப்படி தேவை இல்லை என்று அறிக்கை விட்டார். இது நடந்தது 2010 அப்போது ஆட்சியில் யார் இருந்தார்கள்..? இவர் மோடியின் நண்பர் என்றால் நம்ப சிதம்பரம் விட்டு இருப்பாரா..?...

Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
14-செப்-201710:27:21 IST Report Abuse

பாமரன்இடிதாங்கி.. இப்போ நீங்க நல்லவர்ன்னு சொல்ல வர்றது யாரை???.. எல்லாரும் அயோக்கியனுங்க... ....

Rate this:
Madhav - Chennai,இந்தியா
14-செப்-201712:14:15 IST Report Abuse

Madhavதிரு இடிதாங்கி அவர்களே, எந்த அரசாங்கமாக இருந்தாலும் ஊழலை ஒழிக்க முடியாது என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி கேத்தன் தேசாய் காங்கியா சங்கியா அம்பானியை வளர்த்தது காங்கியா சங்கியா மல்லையா தப்பித்ததற்கு கரணம் காங்கியா சங்கியா என வாசகர்கள் தான் அடிதடி செய்ய வேண்டும். ஆனால் எந்த அதிகார வர்க்கத்தினாரோ, தொழில் அதிபரோ இந்த இரு தரப்பினரையும் அனுசரித்து கொள்ளை அடிக்கத் தான் செய்கின்றனர்....

Rate this:
Sivakumar S - singapore,இந்தியா
14-செப்-201705:53:31 IST Report Abuse

Sivakumar Sசூப்பர்

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-செப்-201704:41:06 IST Report Abuse

Kasimani Baskaranஅருமை... இருநாடுகளும் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தி இருநாட்டு உறவும் மேம்பட வகை செய்யவேண்டும்... போக்குவரத்து சம்பந்தப்பட்ட துறைகளில் ஜப்பான் வெகுவாக முன்னேறியது... அதன் நாம் பயன்படுத்திக் கொண்டால் நமது வளர்ச்சி துரிதமாக இருக்கும்...

Rate this:
Renga Naayagi - Delhi,இந்தியா
14-செப்-201702:44:20 IST Report Abuse

Renga Naayagiஇதுக்கும் எடக்கு முடக்கா கமெண்ட் போட ஒரு மூர்க்க கும்பல் வருமே

Rate this:
Appu - Madurai,இந்தியா
14-செப்-201709:40:51 IST Report Abuse

Appuகண்ணுக்கெட்டுன்னு தூரம் வர யாரையும் காணாமேஅது சரி நீ இதே பொழப்பா இருந்தா உன் எண்ணம் அப்படி தானே இருக்கும்...அப்படியே வந்தாலும் அவர்களை எதிகொள்வது தான் தன்மை..இவன் வாரான்,,அவன் வாரான்,,இவன் இப்டி பேசுறேன்னு என்னமோ நீ நெனைக்கிறா மாறியே எல்லாரும் இருக்கனும்னு நினைக்கிறியே நீ ?...

Rate this:
Shriram - Chennai,இந்தியா
14-செப்-201701:02:07 IST Report Abuse

Shriramபடிக்கவே ரொம்ப சந்தோஷமாக உள்ளது .. எனக்கு என்ன புரியவில்லை என்றால் ஆக்ஸ்போர்டில் பயின்ற மன்மோகன் அவர்கள் ஏன் இப்படி மற்ற நாட்டுத் தலைவர்களை கவரமுடியவில்லை ?அவரும் 10 வருடத்தில் ஆசிய மேற்கு மற்றும் மத்திய நாடுகளைத்தவிர மோடி அவர்கள் சென்ற எல்லா நாடுகளுக்கும் சென்றுள்ளார் ..ஆனால் பலன் ஒன்றுமில்லை.

Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
14-செப்-201710:23:15 IST Report Abuse

பாமரன்தம்பீ ஸ்ரீராம்... சப்பான் என்னைக்குமே நமக்கு நட்பு நாடுதான்... உலக வங்கிக்கு அடுத்தபடியான அதிக நிதியுதவி செய்யறதுக்கு அவிங்கதான்... இதெல்லாம் தல அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி இருந்தே இருக்கு... என்ன ஒன்னு முன்னேயெல்லாம் ஹொகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், மெட்ரோ ரயில், மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப பரிவத்தனை மாதிரி நம்ம நாட்டுக்கு நல்ல நல்ல திட்டமா வந்துச்சு... நம்ம தல கைங்கர்யத்தால் சப்பான் கம்பெனிக மட்டுமே காசு பார்க்கிற புல்லட் ரயில் மாதிரியான திட்டங்களும் வர ஆரம்பிச்சிடுச்சு... அப்புறம் எனக்கு ஒரு டவுட்டு.. தல வந்தப்புறம் எல்லா பெரும் ஹிந்தியிலதானே வைக்கிறாங்க... இந்த திட்ட கம்பெனிக்கு மட்டும் இங்கிலிபீசுல NATIONAL HIGH SPEED RAIL CORPORATION LIMITED அப்பிடின்னு வச்சிருக்காங்க... பாக்கப்போனா '''தேஷ்கா ஜாதா ஜல்தி ரயில் நிர்மாண் ஹை '' அப்பிடின்னுதானே வச்சிருக்கணும்... கேட்டு சொல்வீகளா?? (ஏம்பா.. ஹிந்தி கரெக்டுதானே??)...

Rate this:
Manian - Chennai,இந்தியா
15-செப்-201707:55:25 IST Report Abuse

Manian"பாரதீய உச்சகதி ரயில் நிர்மாண் " என்பதே சரி. அது போகட்டும், சுடலையாண்டி என்று சங்கதமிழ் பெயர் வைக்காமல், ரஷிய கொலைகாரன் பெயரை -ஸ்டாலின் - தமிழ்காவலர் நைனா பேர் வைக்கலாமின்னா, இந்தி ய மொழி பேரு வச்சா குண்டுவேக இரும்பு குதிரை ஓடாதா?...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement