'யூ டியூப் மேக் இன் இந்தியா'வை உருவாக்க வேண்டும் : 'மெட்ராஸ் சென்ட்ரல்' நிறுவனர் பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'யூ டியூப் மேக் இன் இந்தியா'வை உருவாக்க வேண்டும் : 'மெட்ராஸ் சென்ட்ரல்' நிறுவனர் பேச்சு

Added : செப் 13, 2017
Advertisement
'யூ டியூப் மேக் இன் இந்தியா'வை உருவாக்க வேண்டும் : 'மெட்ராஸ் சென்ட்ரல்' நிறுவனர் பேச்சு

மதுரை: ''மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போல வெளிநாட்டினருக்கு போட்டியாக 'யூ டியூப் மேக் இன் இந்தியா'வை உருவாக்க வேண்டும்'' என, 'மெட்ராஸ் சென்ட்ரல்' யூ டியூப் சேனல் நிறுவனர் ஆர்.லட்சுமிபதி பேசினார்.

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் தொழில்முனைவோர் மைய துவக்க விழாவில் அவர் பேசியதாவது:ஒரு நாள் நான் தொலைகாட்சியை பார்க்கும் போது பாடல், சீரியல், காமெடி என ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள் ஓடின. இதை எல்லாம் மாற்றி அமைக்கும் வகையிலான புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதற்கு பின் தான் 'மெட்ராஸ் சென்ட்ரல்' சேனலை ஆரம்பித்தேன்.'யூ டியூப்'பை உருவாக்கிய வெளி
நாட்டுக்காரர்களுக்கு போட்டியாக, 'மேக் இன் இந்தியா', 'டிஜிட்டல் இந்தியா' போல நாமும் 'யூ டியூப் மேக் இன் இந்தியா' என்ற வீடியோ நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும். இந்த சேனலில் காமெடி மட்டுமல்ல சமூகம், அரசியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் வழங்குகிறோம்.
மெட்ராஸ் சென்ட்ரலில் வரும் 'பரிதாபங்கள்' நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கெல்லாம் முதலீடு அதிகம். ஆனால், வருமானம் குறைவு தான். இருந்தாலும்
கஷ்டப்பட்டால் கண்டிப்பாக பலன் உண்டு. இது போன்ற வீடியோக்களில் வரும் விளம்பரங்கள் மூலம் நமக்கு நல்ல வருமானம் கிடைக்கும். குறுகிய வட்டத்திற்குள் இருக்கும் இந்தியர்கள் வெளியே வர வேண்டும். தங்கள் திறமையால் சுயதொழிலில் சாதிக்க வேண்டும். விரைவில் 'யூவ்' (YUV) என்ற பொழுதுபோக்கு 'ஆன்ட்ராய்டு ஆப்' ஒன்றை வெளியிடஉள்ளோம்.
மதுரை சென்ட்ரல், கோவை சென்ட்ரல், கனடா சென்ட்ரல், மலேசியா சென்ட்ரல் என பல சேனல்களை ஆரம்பிக்க திட்டமிட்டு உள்ளேன். திறமை உள்ளவர்கள் எங்கள் நிகழ்ச்சிகளில் நடிக்கலாம், அதற்குரிய தொடர்பு எண் 'சுகா அனுபவம்' நிகழ்ச்சியின் முடிவில் வரும், என்றார்.
கல்லுாரி தொழிற் கழக டீன் ராஜூ, ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, மாணவர் பிரதிநிதி முகுந்த் பங்கேற்றனர். உதவி டீன் சந்திரன் நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை