நாடு முழுவதும் நீர் வழி போக்குவரத்தை செயல்படுத்த...ஆலோசனை! Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஆலோசனை!
நாடு முழுவதும் நீர் வழி போக்குவரத்தை
செயல்படுத்த...கடலில் கலக்கும்
வெள்ள நீரை சேமிக்க அசத்தல் திட்டம்

நதிகளை இணைத்து, தேசிய நீர் வழி போக்குவரத்து திட்டத்தை அமல்படுத்த, சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சர், நிதின் கட்கரி, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும்,நீர்வழி,போக்குவரத்தை, செயல்படுத்த, ஆலோசனை!

கடலில் வீணாக கலக்கும் வெள்ள நீரை சேமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும், 30 நதிகளை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை, 5.5 லட்சம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பதினைந்தாயிரம் கி.மீ., நீள, கால்வாய் கட்டமைப்புகளை அமைத்து, அவற்றின் இடையே, தண்ணீரை சேமித்து வைக்கும் ஏரிகள் போன்ற, 3,000 நீர் நிலைகளை உருவாக்கவும், அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில், முதல்கட்டமாக, கென் - பெட்வா, தமங்கங்கா - பிஞ்ஜால், பர் தபி - நர்மதா, மகாநதி - கோதாவரி, மனஸ் - சங்கோஷ் தீஸ்டா - கங்கை ஆகிய நதிகளை, இணைக்கும் திட்டம், வரும் டிசம்பரில் துவக்கப்பட உள்ளது.

எதிர்ப்பு


நதிகளை இணைத்தால், தங்களின் நீராதாரம் பாதிக்கும் என கருதுவதால், இந்த திட்டத்துக்கு, சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்நிலையில், மதுரையை சேர்ந்த, பேராசிரியர், ஏ.சி.காமராஜ் முன்வைத்த, நீர்வழி போக்குவரத்து திட்டம், பல மாநில

அரசுகளின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை ஆய்வு செய்த, மத்திய நீர்வளத்துறை அமைச்சர், நிதின் கட்கரி, திட்டம் சிறப்பாக உள்ளதாக, காமராஜுக்கு, பாராட்டு தெரிவித்து உள்ளார்.

ஆர்வம்


காமராஜின், நீர்வழி திட்டத்தை அமல் படுத்துவ தோடு, நீர் வழிப்பாதைகளில், போக்கு வரத்தை செயல்படுத்தவும், அமைச்சர் நிதின் கட்கரி ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, கட்கரி, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.

தென்னக நதிகளில் நீர்வழி போக்குவரத்து


மதுரையை சேர்ந்த பேராசிரியர் காமராஜ், நதிகள் இணைப்பிற்கான, மத்திய அரசு நிபுணர் குழுவில், உறுப்பினராக உள்ளார். ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள நதிகளை, சிறப்பான வகையில் பயன்படுத்த, தென்னக நதிநீர் போக்குவரத்து திட்டத்தை, காமராஜ் முன்வைத்துள்ளார்.இதுகுறித்து, காமராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:

நாட்டில், எந்த மாநிலமும், நீர் இன்றி கஷ்டப்பட கூடாது என்பதே, என் நோக்கம். அதற்காக, நீடித்து நிலைக்கத்தக்க, நீர் பகிர்மான திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நதிகள் இணைப்பு திட்டத்துக்கும், தேசிய நீர்வழி போக்குவரத்து திட்டத்துக்கும் வித்தியாசங்கள் உள்ளன.

நதிகள் இணைப்பு திட்டத்துக்கு, சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.ஆனால், நீர்வழி போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்றுவதால், அனைத்து மாநிலங்களுக்கும், பல்வேறு பலன்கள் கிடைக்கும்.நதிகள் இணைப்பு திட்டத்தால், 3.5 கோடி ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். மாறாக, நீர்வழி போக்குவரத்து திட்டத்தால், நாடு முழுவதும், ஆறு கோடி ஹெக்டேர் விவசாய நிலம் பாசனம் பெறும் வாய்ப்புள்ளது. இத்திட்டத்தால்,

Advertisement

60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.இவ்வாறு காமராஜ் கூறினார்.

எதிர்ப்பு இருக்காது!


மழை, வெள்ள நீரை பயன்படுத்துவது குறித்து, காமராஜ் கூறியதாவது:

நதி இணைப்பு திட்டம், ஒரு திசை நோக்கி செயல்படும். மாறாக, நீர் வழி போக்குவரத்து திட்டம், இரு திசை நோக்கி செயல்படும். இந்த திட்டம் மூலம், மழை, வெள்ளத்தால், ஆண்டுதோறும் வீணாகி வரும், 1,500 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும்.நீர்வழி போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்றினால், ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும். 2,000 கி.மீ., நீள, நீர்வழி போக்குவரத்து பயன்பாட்டுக்கு வரும்.

ஆண்டுதோறும், கோதாவரி நதி நீர் மட்டும், 3,000 டி.எம்.சி., கடலில் கலந்து வீணாகிறது. ஆனால், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களின் தண்ணீர் தேவை, இதில், 25 சதவீதம் மட்டுமே. நதிகள் ஓடும் மாநிலங்களில், அவற்றின் பயன்பாட்டுக்கு அதிகமான நீர் மட்டுமே சேகரிக்கப்படுவதால், இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்வதில், எந்த மாநிலத்துக்கும் சிரமம் இருக்காது.இவ்வாறு காமராஜ் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

சந்தான கோபால கிருஷ்ண பாப்பச்சாமி சின்ன குழந்தைஇங்கு மழை வரத்து குறைவுதான் என்றாலும் சேமிக்க கற்றுக்கொள்ளவில்லை. அரசியல் செய்கிறோம்.

Rate this:
Ganesh Balaji - Edmonton,கனடா
15-செப்-201700:15:41 IST Report Abuse

Ganesh Balajiஇந்த திட்டத்தால் அனைவருக்கும் மிகவும் பலன் உள்ளது என்றால் மத்திய அரசு உடனே பரிசீலனை செய்து, அதனை விரைவில் செயல் படுத்த வேண்டும். இத்திட்டத்தை கொடுத்த பேராசிரியர், திரு ஏ.சி.காமராஜ் ஐயா அவர்களுக்கு மிக்க நின்றி.

Rate this:
Manian - Chennai,இந்தியா
15-செப்-201700:09:15 IST Report Abuse

Manian1900 ங்களில் சர் சி பி ராம சாமி அய்யர் இந்த நதி இணைபற்றி முதலில் சொன்னார். அப்போது யாரும் கேட்கவில்லை. தற்போதாவது இந்த சிந்தை வந்தது நல்லதே. ஆனால், இது 2, 3 மாகாணங்களிலேதான் முதலில் நடக்கும். அரசியல் வியாதிகள் மற்ற இடங்களில் வர விட மாட்டார்கள். பி ஜேபியை குறை சொல்லுபவர்கள் இதற்கு வழி சொல்ல மாடடார்கள். நாமும் நீர் சேகரிப்பில் முதலை ஈடுபடவேண்டும். ஆனால் அதை நாம் செய்ய மாட்டோம். திரு உமாபதி சொல்வதும் உண்மை. அமெரிக்காவில் தற்போது இது நடை முறையில் உள்ளது. வசந்த சுவாமிதான் எதிர்மறை பேச்சை ராமச்சந்திரன் பதில் சரி செய்கிறது.திரு ஜெகன் சொல்லுவதில் ஒருவித நியாயம் உள்ளது. ஆனால் நம் அவர்களுக்கு பதிலுக்கு என்ன கொடுக்க முடியும் என்பதையும் சொல்லலாம். ஓசி, இலவசமே வாழக்கை என்ற தமிழ் நாடு வெறுப்பை மட்டுமே தர முடியும். நாம் திராவிடர்கள், அவர்கள் ஆரியர்கள்.

Rate this:
Swaminathan Krishnaswami - Chennai,இந்தியா
14-செப்-201719:12:36 IST Report Abuse

Swaminathan KrishnaswamiThiru kamaraj அவர்கள் அவருடைய இந்த எண்ணங்களை ஒரு புத்தகமாக வெளியிட்டால், என்னைப்போன்ற இந்த சப்ஜெக்ட்டில் ஆர்வம் உள்ளவர்கள் படித்து பயன் அடைய முடியும்.

Rate this:
jagan - Chennai,இந்தியா
14-செப்-201718:57:28 IST Report Abuse

jaganநீர் மிகு மாநிலங்கள் ஏன் தண்ணீரை இலவசமாக குடுக்க வேண்டும்....கோதாவரி நதியில் இருந்து 2000 TMC தண்ணீரை சேமிக்க ஆந்திர செலவு செய்து அணை கட்டி சேமிக்கிறார்கள்....வரும் காலங்களில் குடிநீர் பற்றாக்குறை அதிகரிக்கும்...எனவே குடிநீருக்கு நல்ல விலை கிடைக்கும்.....இலவச நதி இணைப்பு நடக்காது....... நாம வெறும் 205 TMC க்கு கர்நாடகத்துடன் நாயா பேயா அடிச்சுகிறோம், தவிர நம்மிடம் எந்த திட்டமும் இல்ல என்பது வேறு விஷயம்

Rate this:
14-செப்-201718:37:08 IST Report Abuse

ராமன்இது புல்லட் ட்ரைனை விட நல்லது. ஆனா இதுக்கு கடன் தர மாட்டாங்க. ஜப்பான் காரனும் கூட.

Rate this:
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
14-செப்-201718:11:37 IST Report Abuse

Vasanth Saminathanபோக்கு காட்டிட்டே இருக்கீங்க. இதுதான் உண்மையான வளர்ச்சி. அப்போதுதான் உண்மையான புதிய இந்தியா பிறக்கும்.

Rate this:
Shree Ramachandran - chennai,இந்தியா
14-செப்-201717:54:25 IST Report Abuse

Shree Ramachandranமுதலில் நாம் மழை நீரை குளம் ஏரிகளை நிரப்ப வேண்டும்.கூடுமானவரையில் எல்லா வீட்டிலும் மழை நீர் சேகரிப்பு வேண்டும். தடுப்பணைகள் கட்டி நீரை தேக்கி நம் குடிநீர் பற்றா குறையை தீர்க்க வேண்டும். பழந்தமிழகத்தில் மழை நீர் சேகரிக்காமலேயே செழிப்பாக இருக்க வில்லையா. மாடு கட்டி போரடித்து மாளாத செந்நெல் என்று ஆனைக்கட்டி போரடித்தது தமிழகம். நாம் நாள்தோறும் நீர்நிலைகளுக்கு விளக்கேற்றி நன்றி சொல்லி வந்தாலே போதுமானது.முதலில் நமக்கு கண்டலேறு அணையில் இருந்து நமக்குரிய நீரை தரட்டும். அதுவே தப்பு தாளம்.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
14-செப்-201716:42:48 IST Report Abuse

ganapati sbதமிழகத்தின் தற்கால சிந்தனையாளர்களாக டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி அப்துல்கலாம் போன்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது இதைத்தான். வாஜ்பாய் காலத்தில் இதை ஆராய கமிட்டி அமைக்கப்பட்டு மன்மோகன் காலத்தில் மூடப்பட்டுவிட்டது. மோடி காலத்திலாவது இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறட்டும் ஒரு பக்கம் புல்லெட் ரெயில் மறுபக்கம் நீர்வழி கப்பல் என போக்குவரத்தோடு விவசாயமும் மேம்படும் சுற்றுலாவும் மேம்படும் எரிபொருள் சேமிப்போடு பல வேலைவாய்ப்பும் உருவாகும். சாலை போக்குவரத்தில் சாதிக்கும் கடகரி இதையும் சிறப்பை செய்வார் என நம்புவோம் . அனால் எதிர்க்கட்சிகள் நிலஅபகரிப்பு ஏழைகள் வயிற்றிலடைப்பு என ஆர்பாட்டம் செய்து மக்களை தூண்டி விட்டு நீதிமன்றம் சென்று தற்காலிக தடை உத்தரவுகள் வாங்கி திட்டங்களை தாமதிக்காமல் இருக்க வேண்டும் .

Rate this:
umapathy - vellore,தாய்லாந்து
14-செப்-201715:51:02 IST Report Abuse

umapathyநீர் வழி போக்குவரத்துக்கு ஒரு நாட்டின் முன்னற்றத்துக்கு உரு துணை யாக இருக்கும் என்பது உறுதி. தாய்லாந்து மன்னர் ஏற்படுத்திய நீர் வழி சாலை வழியாக பெரு வாரியான மக்கள் போக்குவரத்தும் சரக்கு போக்குவரத்தும் அதன் தலைநகர் பாங்காக் உடன் பிற மாநிலங்கள் மேற் கொள்ள லகுவாக உள்ளது. இது நான் நேரில் கண்டு அறிந்த உண்மை. எதிர் வாதம் செய்பவர்கள் கொஞ்சம் இணைதளத்தில் தேடி பாருங்கள். புரியும்.

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement