Dharmendra Pradhan backs daily fuel price revision, wants petrol, diesel to come under GST | ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல்,டீசல் விலை: மத்திய அரசு ஆலோசனை| Dinamalar

ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல்,டீசல் விலை: மத்திய அரசு ஆலோசனை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல்,டீசல் விலை: மத்திய அரசு ஆலோசனை

புதுடில்லி: பெட்ரோல்,டீசல் தினசரி விலையேற்றம் கவலை அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்திற்கே இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்தன.இந்த முறைக்கு பதிலாக தினசரி பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை கடந்த ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி கடந்த இரண்டு மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ. 7.30 பைசா வரையும் விலையேறியுள்ளது.

இந்த விலையேற்றம் குறித்து காங். மற்றும் இடதுசாரி கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றன. பா.ஜ.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சமீபத்தில் இணைந்த ஐக்கிய ஜனதா தள கட்சியும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஜி.எஸ்.டி. வரம்பிற்குள்

இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் கூறுகையில், கடந்த மூன்றாண்டுகளி்ல் இல்லாத அளவிற்கு எரிபொருள் விலையேறறம் கவலை அளிக்கிறது. இந்த விலையேற்றத்திற்கு மாறாக எரிபொருள் விலையை ஜி.எஸ்.டி. கீழ் கொண்டு வரலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.

மற்றநாடுகளில் எரிபொருள் விலை :இந்திய ரூபாயில்

மலேசியா - ரூ. 32.19
பாகிஸ்தான் -ரூ.40.82
இலங்கை- ரூ.49.08
வங்கதேசம்- ரூ.69.16
நேபாளம் - ரூ. 61.88
இந்தியாவில் அதிகபட்சமாக மும்பையில் பெட்ரோல் விலை -ரூ.79.48 பைசாக உள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sambathkumar - kumbakonam,இந்தியா
14-செப்-201703:48:26 IST Report Abuse
sambathkumar மக்கள் சாப்பிடுகிற பொருளுக்கெல்லாம் யாரையுமே கலந்து ஆலோசிக்காமல் அதிக வரியை போட்டுவிட்டு இப்போது பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மட்டும் ஆலோசனை செய்கிறார்களாம் இதெல்லாம் ஊரை ஏமாற்றுகிற வேலை. ஒருபோதும் இவர்கள் ஜிஎஸ்டி க்குள் கொண்டு வரமாட்டார்கள் .இந்த வரிக்குள் பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டுவரவேண்டும் என் உண்மையிலே நினைப்பவர்களா இருப்பின் நேரடியாக கொண்டுவர வேண்டியது தானே. அதென்ன இதற்கு மட்டும் ஆலோசனை செய்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.