Gurgaon Murder: Accused Took Boy To Car, Washed Off Blood, Says Witness | மாணவன் கொலை வழக்கில் திருப்பம்: ஆசிரியர்கள், ஊழியர்களிடம் விசாரணை| Dinamalar

மாணவன் கொலை வழக்கில் திருப்பம்: ஆசிரியர்கள், ஊழியர்களிடம் விசாரணை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
 மாணவன் கொலை வழக்கில் திருப்பம்: ஆசிரியர்கள், ஊழியர்களிடம் விசாரணை
Share this video :
குருகிராம் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை

புதுடில்லி: குருகிராமில் பள்ளி மாணவன் பிரதியூமான் தாக்கூர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்பட அனைவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை துவக்கியுள்ளனர்.

புதுடில்லி அடுத்த குருகிராமில் உள்ள ரையான் சர்வதேச பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதியூமான் தாக்கூர் என்ற 7 வயது மாணவன் கழிவறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டான்.
போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பஸ் டிரைவர், நடத்துனரை கைது செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகள் யார் என்பது உறுதியாக தெரியாத நிலையில் இன்று ரையான் பள்ளிக்குள் நுழைந்து அங்கு வைத்து பள்ளி முதல்வர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் , பள்ளி ஊழியர்கள் அனைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் தகவல்கள் கூறுகையில், பிரதியுமான் கொலை தொடர்பாக அவனது வகுப்பு ஆசிரியர்களிடம் விசாரணை நடந்தது. இதில் ஆசிரியர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். தவிர தடயவியல் நிபுணர்கள் குழுவினர் இன்று மாலை பள்ளிக்கு சென்று கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் பள்ளிக்குள் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் கேட்டுள்ளனர். இவ்வாறு போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vinod K - London,யுனைடெட் கிங்டம்
13-செப்-201720:56:12 IST Report Abuse
Vinod K கொலையாளி உண்மையில் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நபரை ரோட்டில் வண்டியில் கட்டி இழுத்து சென்று ரத்தம் போய் சாக வேண்டும். எச்ச ஜென்மங்கள். பிஞ்சுகளை இப்படி கொன்ற மிருகங்களுக்கு அடுத்து அனைவர் முன்னிலையில் கொடூர தண்டனை மட்டும் தான் விசாரணை இல்லை, நான் ஆட்சி செய்தால்..
Rate this:
Share this comment
Cancel
ilicha vaayan - chennai,இந்தியா
13-செப்-201720:40:19 IST Report Abuse
ilicha vaayan இதை ஏன் முதலிலேயே செய்யவில்லை ? அரசியல் தொடர்பு உள்ள பணக்கார நிர்வாகிகளோ ?
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
13-செப்-201719:45:28 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM இவ்வளவு சிறிய மாணவனை எப்படி துன்புறுத்தி கொல்ல மனசு வந்தது ?... இது இன்னுமொரு , நொய்டா பல் டாக்டர்கள் மகள் கேசு போல நீட்டி முழக்காமல், தவறு செய்தவர்களை உடனடியாக கைது பண்ணவேண்டும்... இதுவே அந்த சிறுவனுக்கு மற்றும் அவன் பெற்றோருக்கு செலுத்தும் நன்றிக்கடன் ...
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
13-செப்-201719:38:40 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM எவன் தப்பு பண்ணியிருந்தாலும் , இந்த குழந்தையின் ஆன்மா அவனை மன்னிக்காது... பிரிதியுமான் தாகூர் என்ற இந்த பிஞ்சின் மனசு என்ன பாடுபட்டிருக்கும் ?? இந்த குழந்தையின் பெற்றோர் மனசு என்ன பாடுபடும் ... நம்மாலேயே தாங்க முடியல... நீதி கிடைக்கணும் இந்த குழந்தைக்கு ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.