கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை தொடர தவிக்கும் மாணவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை தொடர தவிக்கும் மாணவி

Added : செப் 13, 2017 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கல்லுாரி கட்டணம்,College fees, மாணவி, student, தவப்பிரியா, thavapriya, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை,chidambaram Annamalai University, விவசாயம் ,agriculture, கல்லுாரி விடுதி,college hostel,  கல்லுாரி படிப்பு, college study

சேலம்:குடும்ப வறுமை காரணமாக, கல்லுாரி கட்டணம் கட்ட வழியின்றி, விவசாய படிப்பை தொடர முடியாமல், சேலம் மாவட்ட மாணவி தவித்து வருகிறார்.
சேலம் மாவட்டம், தலைவாசல், ஆறகளூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 49; சலுான் வைத்துள்ளார். இவருக்கு, தவப்பிரியா, 19, என்பவர் உட்பட, மூன்று மகள்கள். 2014ல், ஆறகளூரில் உள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்த தவப்பிரியா, 500க்கு, 480 மதிப்பெண் பெற்றார். இவரை, தலைவாசல், நத்தக்கரையில் உள்ள தனியார் பள்ளி, பிளஸ் 1 படிப்பில், கட்டணமின்றி சேர்த்து
கொண்டது.
தவப்பிரியா, 2016 பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,131 மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றார். விவசாயம் மீது கொண்ட ஆர்வத்தால், விவசாய படிப்பிற்கு விண்ணப்பித்தார். 200க்கு, 190.25, 'கட் - ஆப்' பெற்று, சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், அக்ரி பட்ட படிப்பை தேர்வு செய்தார்.
கல்லுாரி விடுதியில் தங்கி படித்த நிலையில், இரண்டாம் பருவ தேர்வின் போது, தந்தை ஆறுமுகம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.இதனால், இரண்டாம் ஆண்டு, கல்லுாரி கட்டணம் கட்ட இயலவில்லை.
கல்லுாரி, விடுதி உள்ளிட்ட கட்டணங்கள் சேர்த்து, இரண்டாம் ஆண்டுக்கு, 68 ஆயிரத்து, 250 ரூபாய் கட்ட வேண்டும். தந்தையின் உடல்நிலை, குடும்ப வறுமை உள்ளிட்ட காரணங்களால், பணம் கட்ட முடியாததால், தவப்பிரியா படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தவப்பிரியாவின் தந்தை ஆறுமுகம் கூறியதாவது: நான்கு மாதங்களுக்கு முன், உயர் ரத்த அழுத்தத்தால், பக்கவாதம் ஏற்பட்டது. தற்போது, அதன் தாக்கத்தில் இருந்து, சிறிது சிறிதாக விடுபட்டு வருகிறேன். தவப்பிரியாவின் கல்லுாரி படிப்புக்கு கட்டணம் கட்ட முடியாத நிலையில் தவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
உதவ விரும்புவோர், 94425 - 25326 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
13-செப்-201717:44:53 IST Report Abuse
Sitaramen Varadarajan இந்த செய்தி உண்மை என்றால்......தமிழ் தமிழ் தமிழ் தமிழன் தாழ்த்தப்பட்டவன் என்று தினம் பேசி பேசி ஆணி பிடுங்குபவர்கள் ...ஏதாவது செய்யலாமே.
Rate this:
Share this comment
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
13-செப்-201713:28:04 IST Report Abuse
A shanmugam கோடி கோடியாய் கொள்ளை அடித்து பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள் இந்த ஏழை மாணவிக்கு பண உதவி பண்ணி, அந்த பெண்ணின் கல்வி படிப்பிற்கு போதிய பண வசதி செய்து தர முன் வரவேண்டும். அப்படி இல்லாவிட்டால் மத்திய அரசின் உதவி மூலம் வட்டி இல்லா வாங்கி கடன் படிப்பு செலவிற்கா கொடுக்க தமிழக பிஜேபி பிரமுகர்கள் சிபாரிசு செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
13-செப்-201710:36:55 IST Report Abuse
bal இது மாதிரி செய்திகளில் உண்மை எது பொய் எது என்பதே தெரியவில்லை. எப்படி இவரை மட்டும் தேடி கண்டு பிடித்தார்கள். ஏராளமானோர் ஒரு வேளை சோத்துக்கு கூட தவிக்கிறார்கள். அவர்கள் எல்லாம் கண்ணுக்கு தெரியாமல் இவர் மட்டும் தெரிகிறார். எப்படி. இப்போது ஏதோ ஒரு தலைவர் ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு உதவி செய்வது போல் முன் வருவார்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-செப்-201710:01:52 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வருடம் பல்லாயிரம் கோடிகள் கொள்ளையடிக்கும் கல்வித்தந்தைகளும், அவர்களின் லஞ்சத்தில் கொழுக்கும் கல்வித்துறை அ(ச)திகாரிகளும், கமிஷன் கொள்ளையடிக்கும் அமைச்சர் கொள்ளையரும் இந்த பெண்ணுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவர்களை எல்லாம் விட்டு வைத்து வேடிக்கை காட்டும் மோசடி அரசு கல்வியை வியாபாரிகளிடம் இருந்து பாதுகாக்காக கேட்குக் கொள்கிறேன். இதை எங்கே செய்யப் போறீங்க.. இதுக்கு போராட்டம் நடத்தினா உள்ளே தூக்கி போடுவீங்க,
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
13-செப்-201709:23:49 IST Report Abuse
Appu தினமலரின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
13-செப்-201709:22:47 IST Report Abuse
Appu நம்மால் முடிந்த உதவி செய்யவேண்டும்... படிக்கிற பிள்ளை வாழ்க்கை நன்கு அமைய வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
13-செப்-201708:47:53 IST Report Abuse
Matt P நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்துக்கு அரசாங்கம் ஏழு லட்சம் கொடுக்க முன்வந்தது .அவரது குடும்பம் வாங்க மறுத்தது .இவரின் படிப்புக்கு இப்போதைய தேவை ,எழுபதாயிரம் தaan.. இவரின் தந்தை பக்கவாத நோய்க்கு ஆட்பட்டிருக்கிறார் .அரசாங்கம் உதவி செய்யலாம் ...வருங்கால தமிழகத்தை வளமுள்ளதாக இளந்தளிர்களின் வாழ்க்கையை இனிதாக்குதல் தேவை .சைக்கிள் கொடுக்கிறார்கள் பஸ் பாஸ் கொடுக்கிறார்கள் .டிவி கொடுக்கிறார்கள் தேர்தல் வருmpoathu திருட்டுத்தனமாக பணம் கொடுக்கிறார்கள் ...இதையும் செய்யலாமே
Rate this:
Share this comment
Cancel
Ravi -  ( Posted via: Dinamalar Android App )
13-செப்-201708:37:12 IST Report Abuse
Ravi எல்லோரும் உதவலாமே,
Rate this:
Share this comment
Cancel
Kumar - Gurugram , Haryana,இந்தியா
13-செப்-201707:09:42 IST Report Abuse
Kumar Guys , Instead of thinking others will help , why don't we come up and help the way we can , சிறு துளி பெரு வெள்ளம் ,
Rate this:
Share this comment
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
13-செப்-201706:43:05 IST Report Abuse
Mannai Radha Krishnan இது உண்மை என்று எப்படி தெரிய வரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை