ஆமதாபாத் - மும்பை, 'புல்லட்' ரயில் நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் Dinamalar
பதிவு செய்த நாள் :
ஆமதாபாத் - மும்பை, 'புல்லட்' ரயில்
நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்

ஆமதாபாத்: ஆமதாபாத் - மும்பை இடையே, அதிவேக, 'புல்லட்' ரயில் இயக்குவதற்கான
அடிக்கல் நாட்டு விழா, ஆமதாபாத்தில் நாளை நடக்கிறது.

ஆமதாபாத்,Ahmedabad, மும்பை,Mumbai, புல்லட் ரயில்,bullet train, பிரதமர் மோடி ,Prime Minister Modi, ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, Prime Minister Shinzo Abe, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி,Gujarat Chief Minister Vijay Rupani,  ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல்,Railway Minister Piyush Goyal, ஜப்பான், Japan,

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணிஆட்சி அமைந்த பின், தாக்கல் செய்யப்பட்ட, முதல் ரயில்வே பட்ஜெட்டில், 'நாட்டில், அதிவேக புல்லட் ரயில் இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.அதில், குஜராத் மாநிலம், ஆமதாபாத்திலிருந்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பை வரை, முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில், ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்ற, பியுஷ் கோயல்,
புல்லட் ரயில் பற்றி, நேற்று கூறியதாவது: நாட்டின், முதல் புல்லட் ரயிலை இயக்குவதற்கான பணிகள், நாளை துவங்குகின்றன.

ஆமதாபாத்தில் நாளை நடக்கும் விழாவில், பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர், ஷின்ஷோ அபேவும், புல்லட் ரயில் பணிகளுக்கான அடிக்கல்லைநாட்டுகின்றனர்.

இத்திட்டம், ஜப்பானின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு லட்சத்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில், 65 சதவீத தொகையை, 0.1சதவீத வட்டியில், ஜப்பான் வழங்குகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

320 கி.மீ., வேகம்


* ஆமதாபாத் - மும்பை இடையே, 508 கி.மீ., துாரத்துக்கு இயக்கப்பட உள்ள புல்லட் ரயில், மணிக்கு, 320 கி.மீ., வேகத்தில் செல்லும்; இது, 350 கி.மீ., வரை அதிகரிக்கப்படும்
* இந்த ரயில், சபர்மதி, வதோதரா உட்பட, 12 ரயில்வே ஸ்டேஷன்களில் நின்றுசெல்லும்

* மொத்த வழித் தடத்தில், 92 சதவீத துாரம், மேம்பாலத்தில் புல்லட் ரயில் பயணிக்கும்.6 சதவீதம் துாரம், சுரங்கப்பாதையாக இருக்கும். மீதமுள்ள, 2 சதவீத துாரம், தரையில் பயணிக்கும்
* 21 கி.மீ., துார சுரங்கப்பாதையில், 7 கி.மீ., துாரம், கடலுக்கு அடியில் அமைகிறது
• இந்த திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement


பிரமாண்ட வரவேற்பு


ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். குஜராத்தில், பல்வேறு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

அவரை வரவேற்க, ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, மஹாத்மா காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமம் வரை, 7 கி.மீ., துாரத்துக்கு வரவேற்பு பேரணி நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட, 28 இடங்களில், 28 மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (41)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
13-செப்-201713:39:57 IST Report Abuse

Devanatha Jagannathanஇதெல்லாம் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தால் நடக்காது.

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
13-செப்-201713:32:46 IST Report Abuse

g.s,rajanமொச புடிக்கிற நாயை மூஞ்சியைப் பாத்தா தெரியாதா ???

Rate this:
K.Ravi - kalpakkam,இந்தியா
13-செப்-201713:15:35 IST Report Abuse

K.Raviஏற்கனவே 65 லட்சம் கோடி கடன் இந்தியாவுக்கு... இதுல இன்னும் 1 லட்சம் கோடியா.. என்னாகப் போகிறது நாடு...

Rate this:
குறையொன்றுமில்லை - குன்றக்குடி,இந்தியா
13-செப்-201712:15:17 IST Report Abuse

குறையொன்றுமில்லைஅப்புகோதண்டம் எங்க இன்னும் இந்த பக்கம் வரலை > உங்கள் பதிலால் இந்த ஆர்டிகிள் பெருமையடையட்டும்

Rate this:
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
13-செப்-201712:10:24 IST Report Abuse

Narayanஇது செஞ்சா அது என்ன ஆச்சுங்கறது, அது செஞ்சா இது என்னாச்சுங்கறது. அவருக்கு கொஞ்சம் டைம் கொடுங்கப்பா, எல்லாமே பேரழலா போய்க்கிட்டுதான் இருக்கு. மோடி குஜராத் முதல்வராக ஜப்பான் சென்ற போது உடன்பாடு ஆனது இப்போதுதான் பூஜையே தொடங்குகிறது. அடுத்து மும்பை சென்னை ஆரம்பிக்கும். அது வரைக்கும் மோடி இருக்கணுமே.

Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
13-செப்-201711:06:59 IST Report Abuse

pattikkaattaan எங்கூருல பொள்ளாச்சி - போத்தனூரு தண்டவாளத்த புடுங்கிப்போட்டு பத்து வருசமாச்சு... இன்னும் போட துப்பில்ல... இதுல புல்லட் ரெயிலு.. ம் .. ஒரு லச்சத்தி பத்தாயிரம் கோடி...ம் .. நடத்துங்க ...

Rate this:
RP Iyer - Bengaluru,இந்தியா
13-செப்-201711:06:48 IST Report Abuse

RP Iyerபியுஷ் கோயலுக்கு வாழ்த்துக்கள்

Rate this:
Hari Raj - Kuala Lumpur,மலேஷியா
13-செப்-201710:43:09 IST Report Abuse

Hari RajExcellent initiative by Modi ji

Rate this:
bal - chennai,இந்தியா
13-செப்-201710:41:49 IST Report Abuse

balசீனாவுக்கு மரண அடிகொடுக்க பட்டது. ஏன் ஒரே சமயத்தில் பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா என்று எல்லா முக்கிய மாநகரங்களில் துவக்கவில்லை.

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
13-செப்-201710:29:00 IST Report Abuse

நக்கீரன்வாழ்த்துக்கள் மோடிஜி. நவீன இந்தியாவின் தந்தையாக எல்லா வாய்ப்புகளும் உங்களுக்கு உண்டு. ஆனால், இதே போல் தமிழக திட்டங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எச்சரிக்கிறோம்.

Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
13-செப்-201713:25:44 IST Report Abuse

பாமரன்///...வாழ்த்துக்கள் மோடிஜி. நவீன இந்தியாவின் தந்தையாக எல்லா வாய்ப்புகளும் உங்களுக்கு உண்டு..// அடடா கோயம்புத்தூர் கணபதிக்கு நாளுக்குநாள் போட்டி அதிகமாயிக்கிட்டே இருக்கு.... அப்ரசண்டிஸ்... பார்த்துக்கோங்கப்பா......

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement