எம்.பி.பி.எஸ்., சேர்க்கை: தமிழகத்தில் குழப்பம் நீடிப்பு | எம்.பி.பி.எஸ்., சேர்க்கை: தமிழகத்தில் குழப்பம் நீடிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ்., சேர்க்கை: தமிழகத்தில் குழப்பம் நீடிப்பு

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தமிழகம், TN, Tamil Nadu , எம்பிபிஎஸ், MBBS, நீட், NEET,  மருத்துவ கல்வி,  இந்திய மருத்துவ கவுன்சில், Medical Council of India, தனியார் மருத்துவக்கல்லுாரி,Private Medical College,  நீட் தேர்வு,NEET Exam, உயர் நீதிமன்றம்,High court மதுரை,Madurai


தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை குறித்து, மருத்துவ கல்வி இயக்குனரகத்திடம், எம்.சி.ஐ., எனப்படும், இந்திய மருத்துவ கவுன்சில், விளக்கம் கேட்டுள்ளது.

'அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும், மே, 7ல், நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது; தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

எம்.பி.பி.எஸ்., சேர்க்கை; தமிழகத்தில் குழப்பம்

நீட் தேர்வு முடிவுகள் வெளியிட, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. அதை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், தேர்வு முடிவுகள் வெளியிட அனுமதி வழங்கியது. இதனால், வேறு வழியின்றி, 'நீட்' தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையில், தற்போதைய நிலை குறித்து, எம்.சி.ஐ., விளக்கம் கேட்டு வருகிறது. இதற்கு நேற்று பதில் அளித்த, தமிழக மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள், 'மாணவர் சேர்க்கையில், தமிழக அரசின் அறிவுரைக்காக காத்திருக்கிறோம்' என, தெரிவித்துள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-ஜூன்-201714:48:41 IST Report Abuse
மலரின் மகள் அட்மிசன் ஆரம்பிப்பதற்கே வைட்டிங் லிஸ்ட்டா?
Rate this:
Share this comment
Cancel
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201712:29:42 IST Report Abuse
karthikeyan இங்கேயும் புதுச்சேரி கதைதானா? சரியான ... பசங்கடா. மாணவர் வாழ்வில் விளையாடாதீர்
Rate this:
Share this comment
Cancel
Senguraja - Tamil,இந்தியா
20-ஜூன்-201709:27:59 IST Report Abuse
Senguraja தமிழக மாணவர்கள் நீட்/JEE தேர்வினை எதிர்கொள்ள தேவையான பாடத்திட்டத்தினை மாநில அரசு கொண்டுவந்திருந்தால் படித்திருப்போம். பயிற்சி கொடுத்திருந்தால் நீட்/JEE தேர்வினை எதிர்கொண்டிருப்போம். ஆனால் மாநில அரசு செய்யவில்லை. அதற்கு மாணவர்கள் எப்படி பொறுப்பாக முடியும். இப்பொழுதே விசாரித்தால் கூட நீட் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தினை படித்த மாணவர்கள் தனியார் கல்லுரியில் சேர்வதற்கான குறைநத பட்ச மார்க் 350 கூட எடுத்திருக்க மாட்டார்கள் உடனே மாநில அரசு கவுரவம் பார்க்காமல், அனைத்துகட்சி கூட்டத்தினை கூட்டி விவாதியுங்கள். அனைத்துகட்சியனருடன் பிரதமரை நேரில் சந்தித்து பிரதமரின் ஒப்புதல் பெற்று மத்தியரசுடன் இணக்கமாகபேசி குறைந்தபட்சம் 2017-18 வருடத்திற்காவது நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு அவசரம் சட்டம் இயற்ற வேண்டுமென உங்களின் பாதம் தொட்டு கேட்டுகொள்கின்றோம். டாக்டர் கனவோடு படித்து முடித்த மாணவர்களை காப்பாற்றுங்கள். தற்பொழுதுள்ள நிலையில் நீட் தேர்வினை ஆதரிப்பவர்கள் அதை போன்றவர்கள். ஏனென்றால் சமமான கல்வியினை தராமல் நிராயுதபானிபோல் நிற்கும் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களை CBSE பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கான NEET நுழைவுத் தேர்வினை எழுத கட்டாயபடுத்தியது பாவச்செயலாகும். நீட் தேர்வை கட்டாயமாக்கிய மத்தியரசு +2 பாடமும் இந்தியா முழுவதும் சமமாக இருக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. சிகரெட், மது தயாரிப்பவனை ஆதிரித்துவிட்டு சிகரெட் குடிக்காதே மது குடிக்காதே என சொல்வதை போல் உள்ளது. நீட் தேர்வுதான் நல்ல டாக்டரை உருவாக்கும் என சொல்லும் வேதாந்திகள், இப்பொழுதுள்ள டாக்டர்கள் நல்ல டாக்டர் இல்லை என சொல்ல போகின்றதா? அல்லது அவர்களை நாடு கடத்த போகின்றதா? கோச்சிங் செண்டர்தான் சிறந்த மாணவனை உருவாக்குமெனில் பள்ளிகள் எதற்கு? அகில இந்திய நுழைவுத்தேர்வுக்காக பள்ளி பாடத்தினை படிக்காமல் கோச்சிங் சென்டரில் லட்ச கணக்கில் பணம் கட்டி நுழைவுத்தேர்வுக்கான Syllabus-ல் உள்ளதினை மட்டும் 2 முதல் 4 வருடம் (9-ம் வகுப்பிலிருந்தே) படித்து நுழைவுத்தேர்வில் ஜெயிப்பது எந்த விதத்தில் உயர்ந்தவர்கள். இதுவரை 75%-க்கும் அதிகமானோர் Allen Carrier Institute & Aakaash Institute போன்ற கோச்சிங் செண்டரில் படித்தவர்கள்தான் AIPMT, AIIMS and JIPMER- ல் MBBS & JEE-ல் சேர்ந்துள்ளனர்கள். இந்த உண்மையினை கோச்சிங் சென்டரின் வெப்சைட்டில் தெரிந்துகொள்ளலாம். வசதி படைத்த வீட்டுப் பிள்ளைகளோ பள்ளிக்குச் செல்லும் முன்பும் பள்ளியில் இருந்து வந்த பின்பும் நீட் பயிற்சி பெற முடியும். போட்டித் தேர்வில் வெற்றி பெற எந்திரங்களாகவே தயாரிக்கப்படுகிறார்கள். ஆக வசதி இருந்தால்தான் மருத்துவக் கல்வி, இல்லாவிட்டால் மாற்றுக் கல்வி என்ற நிலையை உருவாக்கும் நீட் சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் எதிரானதே. கார்ப்பரேட்டுகளை (பன்னாட்டு நிறுவனங்களை) கல்வித்துறையில் இறக்கிவிட்டு பணம் படைத்தவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலையை உருவாக்க மத்திய அரசு முனைகிறது. நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அனைத்தும் அறிந்த கல்வியாளர்கள் கூறுவது வியப்புக்கும், நகைப்புக்கும் உரியதாகும். கிராமப்புற, ஏழை மாணவர்களின் கற்றல் திறனையும், போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் திறனையும் எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், நீட் தேர்வில் அவர்களுக்கு சமவாய்ப்பு தரப்படுவதில்லை என்பது தான் குற்றச்சாற்று. நகர்ப் புறங்களில் பயிலும் வசதியான மாணவர்கள் புகழ் பெற்ற பள்ளிகளில் பயில் கிறார்கள். ஏராளமான பள்ளிகளில் நீட், ஐ.ஐ.டி கூட்டு நுழைவுத் தேர்வு ஆகியவற்றுக்கு பயிற்சியளிக்கவும் சேர்த்து ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. தவிர மேலும் பல லட்சம் கட்டணம் செலுத்தி தனியாகவும் பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர். இவர்களையும், எந்த வசதியும் இல்லாத அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணியாற்றிக் கொண்டும், குடும்பத் தொழிலை கவனித்துக் கொண்டும் படிக்கும் மாணவர்களையும் ஒரே போட்டித் தேர்வை எழுத வைப்பது, நீச்சல் தெரியாதவர்களை காலில் கல்லைக் கட்டி கடலில் வீசி, நீச்சல் வீரர்களுடன் நீச்சல் போட்டியில் ஈடுபட வைப்பதற்கு சமமானதாகும். போட்டித் தேர்வுக்கான பயிற்சி என்பது மிகப்பெரிய வணிகமாக மாறி வருகிறது. ஏராளமான கார்ப்பரேட் நிறுவனங்கள் நாடு முழுவதும் பயிற்சி மையங்களை அமைத்து மிகப்பெரிய அளவில் வருவாய் ஈட்டி வருகின்றன. இத்தகைய பயிற்சி மையங்களை மாவட்டத் தலைநகரங்கள் வரை விரிவுபடுத்துவதற்கு அந்நிறுவனங்கள் திட்ட மிட்டிருக்கின்றன. அவர்களுக்கு தீனி கிடைப்பதற்காகவே நீட் போன்ற போட்டித் தேர்வுகள் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ நீதிபதிகளும், கல்வியாளர்களும் இந்த விளையாட்டில் பகடைக் காய்களாக மாறி விடுகின்றனர். தரமான கல்விக்காக குரல் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு சமூகநீதிக்கு சாவுமணி அடிக்க துணை போகின்றனர். அரசு, மத்திய அரசை பகைத்துக் கொள்ள விரும்பாததால் தான் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறாமல் விட்டு விட்டது. அதன்மூலம் மருத்துவக் கல்வியில் சமூக நீதிக்கு சவக்குழி தோண்டப்பட்டிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201707:48:47 IST Report Abuse
Srinivasan Kannaiya வசூல் ஏதாவது நிலுவையில் இருக்க போகிறது...
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ibrahim - Chennai ,இந்தியா
20-ஜூன்-201704:05:24 IST Report Abuse
Mohamed Ibrahim கொஞ்சம் தாமதமாகும்..... உத்தரவு வெளிமாநிலத்தில் இருந்து வரணுமுல்ல...
Rate this:
Share this comment
Gopi Sumu - pondy,இந்தியா
20-ஜூன்-201706:26:38 IST Report Abuse
Gopi Sumuisis கைக்கூலிக்குதான் வேறு இடத்தில் இருந்து உத்தரவு வரவேண்டும்...
Rate this:
Share this comment
தேச நேசன் - Chennai,இந்தியா
20-ஜூன்-201707:43:59 IST Report Abuse
தேச நேசன் கோபி சோமு கடுமையாக விமர்சிக்கவேண்டாமே இப்ராஹிம் அறியாமல் எழுதியுள்ளார் தானே உணர்வார்...
Rate this:
Share this comment
Selvam Chennai - Chennai28,இந்தியா
20-ஜூன்-201709:21:16 IST Report Abuse
Selvam Chennaiதேச நேசன்- முட்டாள் போல் உளறகூடாது. MBBS முடித்தபின் PG படிப்பிற்கு நீட் தேர்வு வைக்கின்றனர். அப்பொழுது MBBS படித்தது பொய்யா? அதிகம் போட்டி உள்ள இடத்தில் நுழைவுத் தேர்வு இருக்கும். நுழைவுத் தேர்வு என்பது எப்படி தகுதியினை நிர்ணியிக்கும். உங்கள் தம்பியும் தங்கையும் அல்லது உங்கள் பிள்ளைகளும் மாநில பாடத்திட்டத்தில் டாக்டர் கனவோடு படித்து முடித்த காலத்தில் நீங்கள் இருந்தால் வலி தெரியும். நுழைவுத்தேர்வில் ஜெயித்தவன் தான் நல்ல டாக்டர் என்று எந்த டாக்டரும் சொல்வதில்லை. சிபிஎஸ்இ(CBSE) பாடத்திட்டத்தில் படித்தால் தான் சிறந்த டாக்டராக வரமுடியுமென எந்த டாக்டரும் சொல்வதில்லை. நமது மாநில பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ-க்கு மாற்றச் சொல்பவர்கள், 20 வருடங்களாக MBBS பாடத்திட்டம் மாறாமல் உள்ளதே? அதற்கு என்ன சொல்ல போகின்றனர். இங்கு முடித்தவர்கள் 80% நாட்டில் சென்று மருத்துவம் பார்க்க முடியாது. அப்படியானால் நமது மருத்துவம் பற்றி என்ன சொல்வது. பல்வேறு கல்வி முறைகள் உள்ள ஒரு நாட்டில் குறிப்பிட்ட முறையிலான பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு மட்டும் பயன் அடையும் வகையில் தேர்வு நடத்துவது எந்த வகையில் நியாயம்? நமது மாநில பாடத்திட்டதில் படித்தவர்கள், உலகில் தலை சிறந்த டாக்டர்களாகவும், மாமேதைகளாகவும், விஞ்ஞானிகளாகவும் உள்ளனர். அதை மறுக்க முடியாது. பொது நுழைவுத்தேர்வு எழுதி பழக்கமில்லாத தமிழக மாணவர்களுக்கு 4 வருடம் விலக்கு வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் பொதுவான Syllabus உடனே கொண்டுவர சொல்லவேண்டும். பின் அனைத்து மாநிலங்களையும் சில வருடத்தில் நுழைவுத்தேர்வில் கட்டாயம் சேர வேண்டுகோள் விடுக்கவேண்டும்....
Rate this:
Share this comment
Madhavarao Neelamegam - Mumbai,இந்தியா
20-ஜூன்-201712:38:27 IST Report Abuse
Madhavarao Neelamegamwhy the government conducting TNPSC and teacher qualification exam. If you are education qualification for particular post, why should you write competitive exam conducted by government? why government should not from employment office? Even though you are required qualification, you are appearing for competitive exam. why are not you opposing competitive exam for job?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை